ஆவிக்குரிய தலைமத்துவம்..SPIRITUAL LEADERSHIP ✨✨✨✨✨✨✨தலைமத்துவத்தின் விலைக்கிரயம் PRICE OF LEADERSHIP
✨✨✨✨✨✨✨
ஆவிக்குரிய தலைமத்துவம்..
SPIRITUAL LEADERSHIP
✨✨✨✨✨✨✨
தலைமத்துவத்தின் விலைக்கிரயம்
PRICE OF LEADERSHIP
✨✨✨✨✨✨✨✨
தலைமத்துவ தவறான ஆசையும் கேள்வியும்...
தியான வசனம்:
அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து: போதகரே, நாங்கள் கேட்டுக்கொள்ளப்போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம் என்றார்கள்.
மாற்கு 10:35
அவர் அவர்களை நோக்கி, நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.
மாற்கு 10:36
அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும்,ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள்.
மாற்கு 10:37
தலைமத்துவத்துக்கான சரியான பதில்..
இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்கே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும், உங்களால் கூடுமா என்றார்.
மாற்கு 10:38
✨✨✨✨✨✨✨
முகவுரை:
கடவுளின் ராஜ்யத்தில் தலைமைத்துவத்தை விரும்புதல் என்பது அதற்கான கிரயத்தை செலுத்தும் விருப்பத்தையும் நம்மில் எதிர்பார்க்கின்றது. இது மற்றவர்கள் செலுத்த விரும்புவதை விட மிக அதிகமானதாகும். உண்மையான தலைமைத்துவத்தின் கிரயமானது பாரமானது.
எந்த அளவுக்கு தலைமைத்துவம் சிறப்பாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு கிரயமும் அதிகரிக்கும்.
லண்டன் பாலிடெக்னிக் நிறுவனத்தை உருவாக்கின Kwinton Hawk தன் நிறுவனத்திற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தார். அந்தப் பெரும் நிறுவனத்தைக் கட்ட எவ்வளவு செலவாயிற்று என்று கேட்டால்
"அதிகம் இல்லை ஒரு மனிதனின் உயிரான ரத்தம்" என்று அவர் பதிலளிப்பார்.
இதுதான் ஒவ்வொரு மாபெரும் சாதனைக்கும் கொடுக்கப்பட வேண்டிய கிரயம் ஆகும்.
அதுவும் ஒரே நேரத்தில் கொடுக்கப்படுவதில்லை.
சாதனை என்பது கால தவணை திட்டத்தின் கீழ் பெறப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் ஒரு புது தவணை செலுத்தப்பட வேண்டும். தொடர்ச்சியாக புதிய கிரயம் கூடிக் கொண்டே இருக்கும். கிரயம் செலுத்தப்படுவது நின்று போனால் தலைமைத்துவமும் மங்கி போய்விடும். நாம் நம்மையும் பிறரையும் ஒரே நேரத்தில் காப்பாற்ற முடியாது என்று நம் ஆண்டவர் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
♥️தலைமத்துவத்தின் 8 விலைக்கிரயம்..
♥️1. சுய தியாகம்
♥️2. தனிமை
♥️3. களைப்பு
♥️4. குற்றச்சாட்டுகள்
♥️5. புறக்கணிப்பு
♥️6. அழுத்தமும் கவலையும்
♥️7. பிறர் பொறாமை
♥️8. உடன் பயணிப்போர் செலுத்தும் கிரயம்..
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
♥️1. சுய தியாகம் :
சுய தியாகமாகிய இந்த கிரயத்தின் இந்த பாகமானது அனுதினமும் செலுத்தப்பட வேண்டியது ஆகும்.
தலைமைத்துவத்தின் பாதையில் ஒரு சிலுவை நின்று கொண்டிருக்கிறது.
தலைவர் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.
1 யோவான் 3:16
எந்த அளவுக்கு கிறிஸ்துவின் சிலுவையானது நமது தோள்களிலும் முதுகிலும் இருக்கின்றதோ அந்த அளவுக்குத் தான் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வாழ்வும் நம் மூலமாக வெளிப்படும்.
சிலுவை இல்லாமல் தலைமைத்துவம் இல்லை.
உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்கக்கடவன்.
மாற்கு 10:44
அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
மாற்கு 10:45
எபிரேயர் 11 ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விசுவாச வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களது பணியின் ஒரு பகுதியை தியாகம் செய்ய அழைக்கப்பட்டிருந்தனர்.
திருச்சபையை வழிநடத்தி சென்றவர்களும் தங்களது சொந்த விருப்பங்களை தியாகம் செய்ய ஆயத்தமாக இருந்தனர்.
கடவுளுக்காக தங்களுக்கு நியாயமாக இருக்க வேண்டியதும் இயற்கையாக இருந்ததுமான ஆசைகளை அர்ப்பணித்தனர்..
ப்ரூஸ் பாட்டன் ஒரு பழுது பார்க்கும் நிலையத்தில் இருந்த அறிவிப்பை குறிப்பிடுகிறார்.
நாங்கள் எங்களுக்கு போட்டியாக இருப்பவர்களை விட அதிக தடவைகள் உங்கள் காருக்கு அடியில் சென்று அவர்களை விட அதிகமாக அழுக்காவோம்.
இப்படிப்பட்ட சேவையைத் தான் ஆவிக்குரிய தலைவர்களும் வழங்குகிறார்கள்.
சாமுவேல் ஸ்வெமர் இயேசு தனது உயிர்த்தெழுதலுக்கு பின் காட்ட அதிகம் முயற்சித்த ஒன்று அவரது காயத்தின் தழும்புகள் தாம் என்கிறார்..
எம்மாவு ஊருக்கு செல்லும் சாலையில் அவரையோ அவரது செய்தியோ கண்டுபிடிக்கவில்லை.
இயேசு அப்பத்தைப் பிட்கும்போது ஒருவேளை அவரது கையில் இருந்த காயத்தை பார்த்த பின் தான் அவர் யார் என்பதை கண்டுபிடித்தார்கள்.
உயிர்த்தெழுதலுக்கு பின் மேல் அறையில் பயத்துடன் உற்சாகம் இழந்து இருந்த கூட்டத்தின் நடுவே இயேசு எழுந்து நின்று
" தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்கு காண்பித்தார்".
யோவான் 20:20
தழும்புகள் தாம் உண்மையான சீஷத்துவம் மற்றும் உண்மையான ஆவிக்குரிய தலைமைத்துவத்தின் அதிகாரப்பூர்வமான சின்னங்கள் ஆகும்.
ஒரு தலைவரைப் பற்றி இவ்வாறாக பிரபலமான பேச்சு இருந்தது.
"அவர் ஆதி காலத்து இரத்த சாட்சிகளை சேர்ந்தவர் ஆவார். அவரது நேசமிக்க ஆத்துமாவானது அவரது உடலை மிகவும் இளமையாக இருக்கும் போதே பலியாக்கிவிட்டது."
ஆணியின் தழும்புகளும், ஈட்டியால் ஏற்பட்ட தழும்பையும் போல வேறு எதுவும் மக்களை அசைக்க முடியாது.
அந்தத் தழும்புகள் தான் யாராலும் சவால் விட முடியாத உண்மையின் சோதனையாகும்.
♥️இதை பவுல் அதிகம் அறிந்து எழுதி இருந்தார்.
இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக. கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக் கொண்டிருக்கிறேன்.
கலாத்தியர் 6:17
♥️எமி கர்மிக்கேல் அம்மையார் இவ்வாறு கூறுகிறார்..
""உங்களுக்கு தழும்புகள் இல்லையா?
கால்களில், விலாவில்
கைகளில் மறைவான தழும்புகள் இல்லையா?
நீங்கள் ராஜ்யத்தின் பராக்கிரமசாலியை போல பாடுவதை கேட்கிறேன்!!!! உயர்த்தப்பட்ட பிரகாசமான வெள்ளியைப் பார்த்து அவர்கள் புகழக் கேட்டேன்..
உங்களிடத்தில் தழும்புகள் இல்லையா? உங்களிடத்தில் காயம் இல்லையா?
இருந்தாலும் நான் அன்பு எய்தவர்களால் காயப்பட்டேன்.
சோர்ந்து போனேன்.. இறப்பதற்காக மரத்தில் சாய்த்து வைக்கப்பட்டேன். என்னைச் சுற்றி இருக்கும் வெறி உள்ள மிருகங்களால் கிழிக்கப்பட்டேன்..
நான் மயங்கிப் போனேன்...
உங்களிடத்தில் காயம் இல்லையா?
காயம் இல்லையா?
தழும்பு இல்லையா?
ஆம் ஆண்டவரைப் போலவே பணியாளர்களும் இருக்க வேண்டும்..
என்னைப் பின்பற்றுகிறவர்களின் கால்களும் என்னைப் போலவே குத்தப்பட்டிருக்க வேண்டும்..
ஆனால் உன்னுடையது முழுமையாக இருக்கின்றது...
காயம் இல்லாதவன் தழும்பு இல்லாதவன். என்னை அதிக தூரம் பின்பற்றி வந்திருக்க முடியுமோ?
....எமி கார்மி அவர்கள்
♥️அப் பவுலும் தனக்கு
இருந்த பாரத்தை இவ்வாறு விவரிக்கிறார்..
நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை. கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை.
2 கொரிந்தியர் 4:8
துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.
2 கொரிந்தியர் 4:9
கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.
2 கொரிந்தியர் 4:10
எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்.
2 கொரிந்தியர் 4:11
✨✨✨✨✨✨✨
♥️2. தனிமை...
தனிமை:
மலையின் உச்சியை நெருங்க நெருங்க வாழ்க்கை எப்போதுமே கடினமானதாக மாறிவிடுகிறது என்று நீட்சே நம்பினார்.
குளிர் அதிகரிக்கின்றது.
காற்று பலமாக வீசுகிறது
பொறுப்பின் பாரமும் அதிகமாகின்றது.
தலைவர் தன்னை பின்பற்றுகிறவர்களைவிட எப்போதுமே முன்னணியில் இருக்க வேண்டும் என்பதால் அவர் தனிமையுடன் தான் வசிக்கின்றார்.
அவர் நட்புடன் இருந்தாலும் அவரது வாழ்வின் சில பகுதிகளில் அவர் தனிமையாக தான் நடக்க வேண்டும்
Dixon Host அந்த தனிமையை ஹட்சன் டெய்லர் ஓய்வு பெற்று சீன உள்நாட்டு ஊழிய தலைமை பாரத்தை அவரது தோளில் வைத்த போது உணர்ந்தார்.
தனது பணி நியமனத்திற்கு பின் அவர் சொன்னார் இப்போது எனக்கென்று யாரும் இல்லை கடவுளைத் தவிர யாரும் இல்லை அங்கே அவர் கடவுளுடன் மழையின் உச்சியில் நின்று கொண்டிருந்தார்.
இயற்கையாகவே நாம் பிறர் நம்முடன் இருப்பதில் மகிழ்வோம்.
அது நமக்கு தேவையாகவும் இருக்கின்றது.
மற்றவர்களிடம் நமது பொறுப்புகளையும் பாரங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புவோம்.
சில நேரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த சில தீர்மானங்களை எடுக்கும்போது நேசமுள்ள உடன் ஊழியர்களும் பாதிக்கப்படுவது, அவர்களை தனிமையாக்குவது இதயத்தை உடைய செய்வதாக இருக்கும்.
மோசே தனது தலைமைத்துவத்தின் கிரயத்தை செலுத்தினார்.
மலையின் மேலே, தனிமையாக சமவெளியில், தனிமையாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டு குற்றம் சாட்டப்பட்டு நின்றார்.
பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளும் தனிமையானவர்களே.
ஏனோக்கு ஒரு தரம் தாழ்ந்திருந்த சமுதாயத்தில் தனிமையாக நடந்து கொண்டு நியாயத்தீர்ப்பை பிரசிங்கத்துக் கொண்டிருந்தார். அவருக்கு இருந்த ஒரே ஆறுதல் ஆண்டவரின் பிரசன்னம் தான்.
பறந்து விரிந்திருந்த 10 லட்சம் மக்கள் வாழ்ந்த புறஜாதி நாடான நினைவேயில் யோனா தனிமையாக இருந்தார்.
காலத்துக்கு முந்திய தீர்க்கதரிசன செய்தியுடன் இருக்கும் பிரசங்கியார் தான் இந்த காலத்தில் தனிமையாக இருப்பார்.
இந்த காலத்தின் கோபத்தை சம்பாதிக்கும் செய்தியாக அது இருக்கும்.
நட்பு குணம் உள்ள பவுலும் தனிமையாக தான் இருந்தார். நண்பர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டார்.
எதிரிகளால் தவறாக பிரசாரம் செய்யப்பட்டார்.
விசுவாசிகளால் தனித்து விடப்பட்டார், தீமோத்தேயுவுக்கு அவர் எழுதிய வார்த்தைகள் எத்தனை சோகம் நிறைந்தவைகள்.
ஆசியா நாட்டில் இருக்கிற யாவரும் என்னை விட்டு விலகினார்கள் என்று அறிந்திருக்கிறாய்.
ஆசியாநாட்டிலிருக்கிற யாவரும், அவர்களில் பிகெல்லு எர்மொகெனே முதலாய் என்னைவிட்டு விலகினார்களென்று அறிந்திருக்கிறாய்.
2 தீமோத்தேயு 1:15
அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்.
மத்தேயு 14:23
சாயங்காலமானபோது படவு நடுக்கடலிலிருந்தது, அவரோ கரையிலே தனிமையாயிருந்தார்.
மாற்கு 6:47
அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார்.
யோவான் 6:67
உலகத்தின் மகா ஆத்துமாக்களில் பெரும்பாலானோர் தனிமையாகவே இருந்திருக்கிறார்கள் என்று டோசர் எழுதுகிறார்.
ஒரு பரிசுத்தவான் தனது பரிசுத்தத்துக்காக செலுத்த வேண்டிய கிரயமாக தனிமை இருந்திருப்பதாக தெரிகின்றது.
ஒரு தலைவர் பிறரால் தரப்படும் நட்பு மற்றும் உதவிகளை ஏற்றுக் கொள்ளுகிறவராக இருந்தாலும், தனக்குள்ளாக இருக்கும் வளங்களைக் கொண்டு மிகவும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் கடவுளைத் தவிர வேறு யாரும் இல்லை என்று சொல்லும் சூழ்நிலை வந்தாலும் தனித்து நிற்கக் கூடியவராக இருக்க வேண்டும்.
சகோதரி அல்லது மகள்களின் ஆதரவு கூச்சல் இல்லாமல் ஆம் தகப்பன் அல்லது மகனின் உடன் வசித்தல் இல்லாமல் தனியாக தேசத்தில் நீரிலே வீடற்று நான் பொறுமையாக செல்லுகிறேன் என் பணி முடியும் வரை மேயர்ஸ்.
Yes, loneliness is often considered better than bad company because it allows for peace, personal growth, and the opportunity to find authentic connections, whereas toxic relationships drain energy and foster negativity.
The proverb, which has been attributed to George Washington and other figures like Abu Darda, emphasizes that choosing solitude is a wise decision when good company is not available, as it prevents the negative influences and emotional toll of harmful relationships.
Benefits of Choosing Loneliness Over Bad Company..
Authenticity and clarity:
Being alone offers a chance to be free from the drama and insincerity of fake friendships, promoting genuine self-reflection and clarity.
Personal growth:
Solitude can foster creativity, self-reflection, and the development of stronger self-reliance, leading to personal growth and better judgment in choosing future companions.
Energy and peace:
Bad company can be draining and toxic, while solitude allows you to unwind, recharge, and find inner peace.
Improved relationships:
By avoiding harmful relationships, you can rebuild trust and make more thoughtful choices when forming new connections, ultimately leading to stronger, more authentic friendships.
Historical Context:
The concept has ancient roots, with similar sayings found in Islamic traditions, such as a ḥadīth mentioning that "Solitude is better than bad company".
George Washington copied the rules for penmanship at age 14, and rule #56 stated, "It is better to be alone than to be in bad company".
Key Takeaway..
Prioritizing quality over quantity in relationships is a healthy approach. Choosing to be alone, rather than with people who cause negativity or drain your energy, is a sign of self-respect and leads to a more positive and fulfilling life.
♥️ஆவிக்குரிய தலைமத்துவம் முடிவில்லாதது.. தொடரும்..
@oswaldsandersj
✨✨✨✨✨✨✨
shalomjjj@gmail.com
WhatsApp 9965050301
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment