அருளப்பட்ட தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்கள்♥️♥️REVEALED SECRETS OF THE KINGDOM OF GOD♥️
✨✨✨✨✨✨✨
♥️அருளப்பட்ட தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்கள்♥️
♥️REVEALED SECRETS OF THE KINGDOM OF GOD♥️
✨✨✨✨✨✨✨
TCBA @BIBLICAL REV
✨✨✨✨✨✨✨
🌺தியான வசனம்:
அதற்கு (இயேசு) அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. லூக்கா 8:10
மாற்கு 4:10
✨✨✨✨✨✨✨
🍒தேவன் வெளிப்பாடுகளின் தேவன்..
🍒தேவன் யாருக்கு எதை வெளிப்படுத்த சித்தம் கொண்டாரோ அவர்களுக்கு அதை வெளிப்படுத்துவார்..
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
🍒தேவனுடைய இரகசியங்களின் அம்சங்கள்..
ASPECTS OF GOD'S MYSTERIES...
♥️1. நீதிமான்கள் கூடாரத்தின் மேல்..
தேவனுடைய இரகசியச்செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது.
யோபு 29:4
♥️2. அவருக்கு பயந்தவர்களிடத்தில்.
கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது, அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார். சங்கீதம் 25. 14
♥️3. தம்முடைய தீர்க்கதரிசிகளுக்கு..
கர்த்தராகிய ஆண்டவர்
தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.
ஆமோஸ் 3.7
♥️4. தம்முடைய சிநேகிதர்களுக்கு..
இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.
யோவான் 15:15
✨✨✨✨✨✨✨
🍒வேதத்தில் வெளிப்படுத்தப்பட்ட தேவ இரகசியங்கள்..
♥️1. உலகத்தோற்றத்திற்குமுன்னே குறிக்கப்பட்ட கிறிஸ்துவே அந்த இரகசியம்..
உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.
1 கொரிந்தியர் 2:7
எபிரேயர் 1:1-5
1 பேதுரு 1:20
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
♥️2. கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டதே அந்த இரகசியம்..
அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
1 தீமோத்தேயு 3:16
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
♥️3. உலகத்தோற்றத்திற்குமுன்னே விசுவாசிகள் தெரிந்து கொள்ளப்பட்டதே அந்த இரகசியம்..
தமக்குமுன்பாக நாம் அன்பிலே பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,
தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்.
எபேசியர் 1: 4 &10
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
♥️4. ஆதி காலம் முதல் அடக்கமாயிருந்த சுவிசேஷமே அந்த இரகசியம்..
ஆதிகாலமுதல் அடக்கமாயிருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளியரங்கமாக்கப்பட்டதும், சகல ஜாதிகளும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படிக்கு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாயிருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிறதான,
இயேசுகிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய என் சுவிசேஷத்தின்படியே உங்களை ஸ்திரப்படுத்த வல்லவரும்,
ரோமர் 16:25-26
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
♥️5. கிறிஸ்து மகிமையின் சபைக்கு தலை என்பதே அந்த இரகசியம்..
கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம். கொலோசெயர் 1:27b
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
♥️6. சபையில் புறஜாதிகள் உடன் சுதந்திரர் என்பதே அந்த இரகசியம்..
அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினால் உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார். எபேசியர் 3:3
புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார். கொலோ 1:27a
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
♥️7. சபை ஒரு குடும்பம் அந்த இரகசியம்..
இந்த இரகசியம் பெரியது. நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.
எபேசியர் 5:23-32
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
♥️8. கிறிஸ்துவின் மத்திய ஆகாய வருகை ( rapture ) அந்த இரகசியம்..
இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன். நாமெல்லாரும் நித்தியரையடைவதில்லை. ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
1 கொரிந்தியர் 15:51
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
♥️9. இஸ்ரவேலர் மனக்கடினம் அந்த இரகசியம்..
மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன், அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவுஉண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.
ரோமர் 11:25
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
📒 விசுவாசிகள் அனுதினமும் உணர வேண்டிய தேவனால் வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்கள்..
🚩1. விசுவாசிகள் பெற்ற விசுவாசமே ஒரு இரகசியம்..
விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும்.
1 தீமோத்தேயு 3:9
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
🚩2. விசுவாசிகளின் உண்மையுள்ள உக்கிராணத்துவம் ஒரு இரகசியம்..
இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரனென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன்.
1 கொரிந்தியர் 4:1
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
🚩3. விசுவாசிகள் அனுதினமும் செய்கிற ஊழியம் ஒரு இரகசியம்
நான் தைரியமாய் என் வாயைத்திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்கு கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.
எபேசியர் 6:20
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
🚩4. விசுவாசிகள் அனுதினமும் உணர்ந்து கொள்ள வேண்டிய பிதா குமாரன் பரிசுத்த ஆவி ஒரு இரகசியம்..
அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன். கொலோசெயர் 2:2
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
🕯️ நித்தியத்தில் வெளிப்படப்போகிற இரகசியம்..
என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது, அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம், நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம். வெளிப்படுத்தினத
விசேஷம் 1:20
🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 3
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️
Comments
Post a Comment