LORD'S PATTERN FOR EARLY CHURCHஆதி திருச்சபையின் முறைமை முன்மாதிரி
✨✨✨✨✨✨✨
LORD'S PATTERN FOR EARLY CHURCH
ஆதி திருச்சபையின் முறைமை முன்மாதிரி
✨✨✨✨✨✨✨✨
அப்போஸ்தலர் 12 ம் அதிகாரம் மிக முக்கியமான அதிகாரம்..
சபையை துன்பப்படுத்துகிற எவரும் தேவனால் துன்பப்படுத்தப்படுவார்கள்...
சபையின் ஊழியர்களை கொலை செய்கிறவர்களை தேவன் தண்டிப்பார்..
தற்கால சபையும் இந்த கீழ்க்கண்ட முறைமைகளில் செயல் படுகிறதா என்பதை ஆராய்ந்து செயல்படுவோம்..
::::::::::::::::::::::::::::::::::::::
♥️1. சபை பரிசுத்தவான்கள் உபத்திரவம் அவசியம்..
அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத்தொடங்கி.
அப்போஸ்தலர் 12:1
யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான்.
அப்போஸ்தலர் 12:2
அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று அவன் கண்டு, பேதுருவையும் பிடிக்கத்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாயிருந்தது.
அப்போஸ்தலர் 12:3
அவனைப் பிடித்துச் சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப் பின்பு ஜனங்களுக்கு முன்பாக அவனை வெளிலே கொண்டுவரலாமென்று எண்ணி, அவனைக் காக்கும்படி வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான்.
அப்போஸ்தலர் 12:4
::::::::::::::::::::::::::::::::::::
♥️2. கர்த்தருடைய சபை பிள்ளைகள் ஜெபம் அவசியம்..
அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்.
அப்போஸ்தலர் 12:5
:::::::::::::::::::::::::::::::::::
♥️3. கர்த்தருடைய செயல் சபை நடுவில் அதிசயம்..
ஏரோது அவனை வெளியே கொண்டு வரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே நித்திரைபண்ணிக்கொண்டிருந்தான். காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக்காத்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போஸ்தலர் 12:6
அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான். அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது.
அப்போஸ்தலர் 12:7
தூதன் அவனை நோக்கி; உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொள் என்றான். அவன் அந்தப்படியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி; உன் வஸ்திரத்தைப்போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான்.
அப்போஸ்தலர் 12:8
அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்று, தூதனால் செய்யப்பட்டது மெய்யென்று அறியாமல் தான் ஒரு தரிசனங்காண்கிறதாக நினைத்தான்.
அப்போஸ்தலர் 12:9
அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப்போகிற இருப்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது. அதின் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்துபோனார்கள். உடனே தூதன் அவனை விட்டுப் போய்விட்டான்.
அப்போஸ்தலர் 12:10
பேதுருவுக்குத் தெளிவு வந்தபோது; ஏரோதின் கைக்கும் யூதஜனங்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படிக்குக் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன் என்றான்.
அப்போஸ்தலர் 12:11
::::::::::::::::::::::::::::::::::::
♥️4. சபை விசுவாசிகள் ஊக்கமான ஜெபத்திற்கு அற்புதம் நிச்சயம்..
அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவனுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான். அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
அப்போஸ்தலர் 12:12
பேதுரு வாசற்கதவைத் தட்டினபோது ரோதை என்னும் பேர்கொண்ட ஒரு பெண் ஒற்றுக்கேட்க வந்தாள்.
அப்போஸ்தலர் 12:13
அவன் பேதுருவின் சத்தத்தைஅறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறவாமல், உள்ளேயோடி, பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று அறிவித்தாள்.
அப்போஸ்தலர் 12:14
அவர்கள்; நீ பிதற்றுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தானென்று உறுதியாய்ச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்; அவருடைய தூதனாயிருக்கலாம் என்றார்கள்.
அப்போஸ்தலர் 12:15
பேதுரு பின்னும் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் திறந்தபோது அவனைக் கண்டு பிரமித்தார்கள்.
அப்போஸ்தலர் 12:16
அவர்கள் பேசாமலிருக்கும்படி அவன் கையமர்த்தி, கர்த்தர் தன்னைக் காவலிலிருந்து விடுதலையாக்கினவிதத்தை அவர்களுக்கு விவரித்து, இந்தச் செய்தியை யாக்கோபுக்கும் சகோதரருக்கும் அறிவியுங்கள் என்று சொல்லி, புறப்பட்டு, வேறொரு இடத்திற்குப் போனான்.
அப்போஸ்தலர் 12:17
:::::::::::::::::::::::::::::::::::
♥️5. சபை பிள்ளைகள் விசுவாசத்தில் உறுதியாயிருக்க சூழ்நிலை காரணம் அவசியம்..
பொழுது விடிந்தபின்பு பேதுருவைக்குறித்துச் சேவகருக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல.
அப்போஸ்தலர் 12:18
ஏரோது அவனைத் தேடிக் காணாமற்போனபோது, காவற்காரரை விசாரனைசெய்து, அவர்களைக் கொலைசெய்யும்படி கட்டளையிட்டு, பின்பு யூதேயாதேசத்தைவிட்டுச் செசரியா பட்டணத்துக்குப்போய், அங்கே வாசம்பண்ணினான்.
அப்போஸ்தலர் 12:19
அக்காலத்திலே ஏரோது தீரியர்பேரிலும் சீதோனியர்பேரிலும் மிகவும் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் ஒருமனப்பட்டு, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரணைக்காரனாகிய பிலாஸ்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதானம் கேட்டுக்கொண்டார்கள்.
அப்போஸ்தலர் 12:20
:::::::::::::::::::::::::::::::::::
♥️6. சபைக்கு விரோதமான அதிகாரம் அதமாக்கப்படுவது நிச்சயம்..
குறித்தநாளிலே ஏரோது ராஜாவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான்.
அப்போஸ்தலர் 12:21
அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள்.
அப்போஸ்தலர் 12:22
அவன் தேவனுக்கு மகிமையைச்செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான். அவன் புழுப்புழுத்து இறந்தான்.
அப்போஸ்தலர் 12:23
:::::::::::::::::::::::::::::::::::::
♥️7. சபையில் வேத வசனம் வளர்ந்து பெருகுவது தேவ நியமம்..
தேவவசனம் வளர்ந்து பெருகிற்று.
அப்போஸ்தலர் 12:24
:::::::::::::::::::::::::::::::::::::
♥️8. சபை வளர்ந்து பெருக தேவ மனிதர்கள் அர்ப்பணம் அவசியம்..
பர்னபாவும் சவுலும் தர்ம உழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்.
அப்போஸ்தலர் 12:25
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment