அமலேக்கியர்கள்...
The Amalekites were an ancient, nomadic tribe described in the Hebrew Bible as a perennial enemy of the Israelites.
They were seen as the ultimate symbol of evil in Jewish tradition due to their history of brutal attacks on the Israelite people.
Origin
According to the biblical account, the Amalekites were descendants of Amalek, the grandson of Esau, who was the twin brother of Jacob (later named Israel).
This family connection underscored the intense and long-lasting nature of their enmity.
Amalek's father was Eliphaz, and his mother was Timna, Eliphaz's concubine.
Key biblical encounters
The attack at Rephidim (Exodus 17):
பின்பு இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் கர்த்தருடைய கட்டளையின்படியே சீன்வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு, பிரயாணம்பண்ணி, ரெவிதீமிலே வந்து பாளயமிறங்கினார்கள். அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.
யாத்திராகமம் 17:1
அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான்.
யாத்திராகமம் 17:2
ஜனங்கள் அவ்விடத்திலே தண்ணீர்த் தவனமாயிருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டுவந்தீர் என்றார்கள்.
யாத்திராகமம் 17:3
மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான்.
யாத்திராகமம் 17:4
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பரில் சிலரை உன்னோடே கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோ.
யாத்திராகமம் 17:5
அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன். நீ அந்தக் கன்மலையை அடி. அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார். அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.
யாத்திராகமம் 17:6
இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.
யாத்திராகமம் 17:7
அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள்.
யாத்திராகமம் 17:8
அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு. நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான்.
யாத்திராகமம் 17:9
யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கோடே யுத்தம் பண்ணினான். மோசேயும் ஆரோனும் ஊர் என்பவனும் மலையுச்சியில் ஏறினார்கள்.
யாத்திராகமம் 17:10
மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள். அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான்.
யாத்திராகமம் 17:11
மோசேயின் கைகள் அசந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள். அதின்மேல் உட்கார்ந்தான். ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள். இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது.
யாத்திராகமம் 17:12
யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான்.
யாத்திராகமம் 17:13
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி யோசுவாவின் செவிகேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார்.
யாத்திராகமம் 17:14
மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு,
யாத்திராகமம் 17:15
அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.
யாத்திராகமம் 17:16
This is the first and most pivotal encounter between the Israelites and the Amalekites.
As the Israelites journeyed from Egypt, tired and weary, the Amalekites launched an unprovoked and cowardly ambush on their stragglers.
This attack provoked God's wrath and resulted in a divine command to "blot out the memory of Amalek from under heaven".
During the battle, the Israelites were only victorious when Moses held his hands up, a feat aided by Aaron and Hur.
Saul's failure (1 Samuel 15):
பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள் மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே. இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்.
1 சாமுவேல் 15:1
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்.
1 சாமுவேல் 15:2
இப்பொழுதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்.
1 சாமுவேல் 15:3
அப்பொழுது சவுல் இதை ஜனங்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களைத் தொகைபார்த்தான். அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா ஜனங்கள் பதினாயிரம்பேருமாயிருந்தார்கள்.
1 சாமுவேல் 15:4
சவுல் அமலேக்குடைய பட்டணமட்டும் வந்து, பள்ளத்தாக்கிலே ஒரு பதிவிடையை வைத்தான்.
1 சாமுவேல் 15:5
சவுல் கேனியரை நோக்கி: நான் அமலேக்கியரோடேகூட உங்களையும் வாரிக் கொள்ளாதபடிக்கு, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு விலகிப் போங்கள். இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது, நீங்கள் அவர்கள் எல்லாருக்கும் தயவு செய்தீர்கள் என்றான். அப்படியே கேனியர் அமலேக்கியர் நடுவிலிருந்து விலகிப் போனார்கள்.
1 சாமுவேல் 15:6
அப்பொழுது சவுல்: ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிரேயிருக்கிற சூருக்குப் போகும் எல்லைமட்டும் இருந்த அமலேக்கியரை மடங்கடித்து,
1 சாமுவேல் 15:7
அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பிடித்தான். ஜனங்கள் யாவரையும் பட்டயக் கருக்கினாலே சங்காரம்பண்ணினான்.
1 சாமுவேல் 15:8
சவுலும் ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப் போட்டான்.
1 சாமுவேல் 15:9
அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது:
1 சாமுவேல் 15:10
நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது. அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார். அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.
1 சாமுவேல் 15:11
மறுநாள் அதிகாலமே சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான். அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்து, தனக்கு ஒரு ஜெயஸ்தம்பம் நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான் என்று சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது.
1 சாமுவேல் 15:12
சாமுவேல் சவுலினிடத்தில் போனான். சவுல் அவனை நோக்கி: நீர் கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்டவர். கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்.
1 சாமுவேல் 15:13
அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான்.
1 சாமுவேல் 15:14
அதற்குச் சவுல்: அமலேக்கியரிடத்திலிருந்து அவைகளைக் கொண்டு வந்தார்கள். ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள். மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான்.
1 சாமுவேல் 15:15
அப்பொழுது சாமுவேல்: அந்தப் பேச்சை விடும். கர்த்தர் இந்த இராத்திரியிலே எனக்குச் சொன்னதை உமக்கு அறிவிக்கிறேன் என்று சவுலோடே சொன்னான். அவன் சொல்லும் என்றான்.
1 சாமுவேல் 15:16
அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர். கர்த்தர் உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தாரே.
1 சாமுவேல் 15:17
இப்போதும் கர்த்தர்: நீ போய் அமலேக்கியராகிய அந்தப் பாவிகளைச் சங்கரித்து, அவர்களை நிர்மூலமாக்கித் தீருமட்டும், அவர்களோடு யுத்தம்பண்ணு என்று சொல்லி, உம்மை அந்த வழியாய் அனுப்பினார்.
1 சாமுவேல் 15:18
இப்படியிருக்க, நீர் கர்த்தருடைய சொல்லைக் கேளாமல், கொள்ளையின்மேல் பறந்து, கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தது என்ன என்றான்.
1 சாமுவேல் 15:19
சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தர் என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகைக் கொண்டு வந்து, அமலேக்கியரைச் சங்காரம் பண்ணினேன்.
1 சாமுவேல் 15:20
ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் என்றான்.
1 சாமுவேல் 15:21
அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம்.
1 சாமுவேல் 15:22
இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனியப்பாவத்துக்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது. நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.
1 சாமுவேல் 15:23
அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன். நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன்.
1 சாமுவேல் 15:24
இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் கர்த்தரைப் பணிந்து கொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பி வாரும் என்றான்.
1 சாமுவேல் 15:25
சாமுவேல் சவுலைப் பார்த்து: நான் உம்மோடேகூடத் திரும்பிவருவதில்லை. கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தீர். நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, கர்த்தர் உம்மையும் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்.
1 சாமுவேல் 15:26
போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது சவுல் அவன் சால்வையின் தொங்கலைப் பிடித்துக் கொண்டான். அது கிழிந்து போயிற்று.
1 சாமுவேல் 15:27
அப்பொழுது சாமுவேல் அவனை நோக்கி: கர்த்தர் இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டு, உம்மைப் பார்க்கிலும் உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார்.
1 சாமுவேல் 15:28
இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை. தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை. மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான்.
1 சாமுவேல் 15:29
அதற்கு அவன்: நான் பாவஞ்செய்தேன். இப்போது என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும், இஸ்ரவேலுக்கு முன்பாகவும் நீர் என்னைக் கனம்பண்ணி, நான் உம்முடைய தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பி வாரும் என்றான்.
1 சாமுவேல் 15:30
அப்பொழுது சாமுவேல் திரும்பிச் சவுலுக்குப் பின்சென்றான். சவுல் கர்த்தரைப் பணிந்து கொண்டான்.
1 சாமுவேல் 15:31
பின்பு சாமுவேல்: அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான். ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு அற்றுப்போனது நிச்சயம் என்றான்.
1 சாமுவேல் 15:32
சாமுவேல்: உன் பட்டயம் ஸ்திரீகளைப் பிள்ளையற்றவர்களாக்கினதுபோல, ஸ்திரீகளுக்குள்ளே உன் தாயும் பிள்ளையற்றவளாவாள் என்று சொல்லி, சாமுவேல் கில்காலிலே கர்த்தருக்கு முன்பாக ஆகாகைத் துண்டித்துப் போட்டான்.
1 சாமுவேல் 15:33
பின்பு சாமுவேல் ராமாவுக்குப் போனான். சவுலோ தன் ஊராகிய கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய்விட்டான்.
1 சாமுவேல் 15:34
சவுல் மரணமடையும் நாள்மட்டும் சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை. இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம், சாமுவேல் சவுலுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.
1 சாமுவேல் 15:35
The prophet Samuel commanded King Saul to completely destroy the Amalekites as an act of divine judgment.
Saul defeated them but failed to carry out the command fully, sparing King Agag and the best of the livestock.
This act of disobedience led to God's rejection of Saul as king. Samuel later executed Agag.
David's battle at Ziklag (1 Samuel 30):
தாவீதும் அவன் மனுஷரும் மூன்றாம்நாளிலே, சில்லாகுக்கு வந்து சேருகிறதுக்குள்ளே, அமலேக்கியர் தென்புறத்துச் சீமையின்மேலும் சில்லாக்கின் மேலும் விழுந்து, சில்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து,
1 சாமுவேல் 30:1
அதிலிருந்த ஸ்திரீகளாகிய சிறியவர்களையும் பெரியவர்களையும் சிறைப்பிடித்து, ஒருவரையும் கொன்றுபோடாமல், அவர்களைப் பிடித்துக்கொண்டு, தங்கள் வழியே போய் விட்டார்கள்.
1 சாமுவேல் 30:2
தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்துக்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைப்பிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள்.
1 சாமுவேல் 30:3
அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள்.
1 சாமுவேல் 30:4
தாவீதின் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊரான அகினோவாமும், கர்மேல் ஊராளான நாபாலின் மனைவியாயிருந்த அபிகாயிலும், சிறைப்பிடித்துக்கொண்டு போகப்பட்டார்கள்.
1 சாமுவேல் 30:5
தாவீது மிகவும் நெருக்கப்பட்டான். சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.
1 சாமுவேல் 30:6
தாவீது அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டு வா என்றான். அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்தான்.
1 சாமுவேல் 30:7
தாவீது கர்த்தரை நோக்கி;: நான் அந்தத் தண்டைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர். அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக் கொள்வாய் என்றார்.
1 சாமுவேல் 30:8
அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த அறுநூறுபேரும் போனார்கள். அவர்கள் பேசோர் ஆற்றண்டைக்கு வந்தபோது அங்கே சிலர் நின்று போனார்கள்.
1 சாமுவேல் 30:9
தாவீதோ நாநூறுபேரோடுங்கூடத் தொடர்ந்து போனான். இருநூறுபேர் விடாய்த்துப் போனபடியினால் பேசோர் ஆற்றைக் கடக்கமாட்டாமல் நின்று போனார்கள்.
1 சாமுவேல் 30:10
ஒரு எகிப்தியனை வெளியில் அவர்கள் கண்டு, அவனைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்து, புசிக்க அவனுக்கு அப்பமும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து,
1 சாமுவேல் 30:11
அத்திப்பழஅடையின் ஒரு துண்டையும், வற்றலான இரண்டு திராட்சப்பழக் குலைகளையும் அவனுக்குக் கொடுத்தார்கள். அதை அவன் சாப்பிட்ட பின்பு, அவனுடைய உயிர் திரும்ப அவனுக்குள் வந்தது. அவன் இராப்பகல் மூன்று நாளாய் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தான்.
1 சாமுவேல் 30:12
தாவீது அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்துதேசத்துப் பிள்ளையாண்டான். மூன்று நாளைக்கு முன் நான் வியாதிப்பட்டபோது, என் எஜமான் என்னைக் கைவிட்டான்.
1 சாமுவேல் 30:13
நாங்கள் கிரேத்தியருடைய தென்புறத்தின்மேலும், யூதாவுக்கடுத்த எல்லையின் மேலும், காலேபுடைய தென்புறத்தின்மேலும் படையெடுத்துப் போய் சில்லாகை அக்கினியினால் சுட்டெரித்துப் போட்டோம் என்றான்.
1 சாமுவேல் 30:14
தாவீது அவனை நோக்கி: நீ என்னை அந்தத் தண்டினிடத்துக்குக் கொண்டு போவாயா என்று கேட்டதற்கு அவன்: நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை என் எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத் தண்டினிடத்துக்குக் கூட்டிக்கொண்டுபோவேன் என்றான்.
1 சாமுவேல் 30:15
இவன் அவனைக் கொண்டுபோய் விட்டபோது, இதோ, அவர்கள் வெளியெங்கும் பரவி, புசித்துக் குடித்து, தாங்கள் பெலிஸ்தர் தேசத்திலும் யூதாதேசத்திலும் கொள்ளையிட்டு வந்த மகா பெரிதான அந்த எல்லாக் கொள்ளைக்காகவும் ஆடிப்பாடிக் கொண்டிருந்தார்கள்.
1 சாமுவேல் 30:16
அவர்களைத் தாவீது அன்று சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும் முறிய அடித்தான். ஒட்டகங்கள்மேல் ஏறி ஓடிப்போன நாறூறு வாலிபர் தவிர, அவர்களில் வேறெருவரும் தப்ப வில்லை.
1 சாமுவேல் 30:17
அமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.
1 சாமுவேல் 30:18
அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும்,சிறியதிலும் பெரியதிலும் குமாரரிலும் குமாரத்திகளிலும் ஒன்றும் குறைவுபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்.
1 சாமுவேல் 30:19
எல்லா ஆடுமாடுகளையும் தாவீது பிடித்துக்கொண்டான். அவைகளைத் தங்கள் மிருகஜீவன்களுக்கு முன்னாலே ஓட்டி, இது தாவீதின் கொள்ளை என்றார்கள்.
1 சாமுவேல் 30:20
விடாய்த்துப்போனதினாலே தாவீதுக்குப் பின்செல்லாமல், பேசோர் ஆற்றண்டையில் தங்கியிருந்த இருநூறுபேரிடத்துக்குத் தாவீது வருகிறபோது, இவர்கள் தாவீதுக்கும் அவனோடிருந்த ஜனத்திற்கும் எதிர்கொண்டு வந்தார்கள். தாவீது அந்த ஜனத்தினிடத்தில் சேர்ந்து, அவர்கள் சுகசெய்தியை விசாரித்தான்.
1 சாமுவேல் 30:21
அப்பொழுது தாவீதோடே நடந்துவந்த மனுஷரில் பொல்லாதவர்களும் பேலியாளின் மக்களுமான எல்லாரும்: அவர்கள் எங்களோடே வராதபடியினால் நாங்கள் திருப்பிக் கொண்ட கொள்ளையுடைமைகளில் அவர்களுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை. அவர்களில் ஒவ்வொருவனும் தன்தன் மனைவியையும் தன்தன் பிள்ளைகளையுமே அழைத்துக்கொண்டு போகட்டும் என்றார்கள்.
1 சாமுவேல் 30:22
அதற்குத் தாவீது: என் சகோதரரே, கர்த்தர் நமக்குத் தந்ததை நீங்கள் இப்படிச் செய்யவேண்டாம். கர்த்தர் நம்மைக் காப்பாற்றி, நமக்கு விரோதமாய் வந்திருந்த அந்தத் தண்டை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்.
1 சாமுவேல் 30:23
இந்தக் காரியத்தில் உங்கள் சொற்கேட்க யார் சம்மதிப்பான். யுத்தத்துக்குப் போனவர்களின் பங்கு எவ்வளவோ, அவ்வளவு ரஸ்துக்களண்டையில் இருந்தவர்களுக்கும் பங்குவீதம் கிடைக்கவேண்டும். சரிபங்காகப் பங்கிடுவார்களாக என்றான்.
1 சாமுவேல் 30:24
அப்படியே அந்நாள் முதற்கொண்டு நடந்துவருகிறது. அதை இஸ்ரவேலிலே இந்நாள்வரைக்கும் இருக்கும் கட்டளையும் பிரமாணமுமாக ஏற்படுத்தினான்.
1 சாமுவேல் 30:25
தாவீது சில்லாகுக்கு வந்தபோது, அவன் கொள்ளையாடினவைகளிலே தன் சிநேகிதராகிய யூதாவின் மூப்பருக்குச் சிலவற்றை அனுப்பி: இதோ, கர்த்தருடைய சத்துருக்களின் கொள்ளையில் உங்களுக்கு உண்டாயிருக்கும் ஆசிர்வாத பாகம் என்று சொல்லச் சொன்னான்.
1 சாமுவேல் 30:26
யார்யாருக்கு அனுப்பினானென்றால், பெத்தேலில் இருக்கிறவர்களுக்கும், தெற்கான ராமோத்தில் இருக்கிறவர்களுக்கும், யாத்தீரில் இருக்கிறவர்களுக்கும்,
1 சாமுவேல் 30:27
ஆரோவேரில் இருக்கிறவர்களுக்கும், சிப்மோத்தில் இருக்கிறவர்களுக்கும், எஸ்தேமோகாவில் இருக்கிறவர்களுக்கும்,
1 சாமுவேல் 30:28
ராக்காவில் இருக்கிறவர்களுக்கும், யெராமியேலியரின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும், கேனியரின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும்,
1 சாமுவேல் 30:29
ஒர்மாவில் இருக்கிறவர்களுக்கும், கொராசானில் இருக்கிறவர்களுக்கும், ஆற்றாகில் இருக்கிறவர்களுக்கும்,
1 சாமுவேல் 30:30
எப்ரோனில் இருக்கிறவர்களுக்கும், தாவீதும் அவன் மனுஷரும் நடமாடின எல்லா இடங்களில் இருக்கிறவர்களுக்கும் அனுப்பினான்.
1 சாமுவேல் 30:31
Later in Israel's history, the Amalekites raided the town of Ziklag, capturing David's two wives and others.
David and his men pursued and ultimately defeated them, rescuing the captives and recovering the plunder.
The final threat (Book of Esther):
The Jewish people faced a threat of genocide from Haman the Agagite, a descendant of the Amalekite king Agag.
The book describes how God saved the Jews from Haman's plot.
Symbolic meaning
In Jewish tradition, the Amalekites are more than just a historical enemy. The command to "remember what Amalek did" has given them a symbolic importance. They have become an archetype of absolute evil, representing an ideological and theological opposition to God and Israel. They embody cruelty and a cynical rejection of faith.
Modern scholarship and context
Modern archaeological evidence for the Amalekites as a specific people group is limited outside of the biblical narrative. Some scholars propose the story and the command to destroy them reflect the political and theological frameworks of ancient Israelite society.
The biblical command of total annihilation (herem) has been a source of ethical and theological debate among commentators, though later Jewish sages limited its application. In modern Jewish thought, the Amalekite is often understood metaphorically, representing existential enemies, such as the Nazis, rather than a literal people to be destroyed today.
7 திரும்பிக் காதேஸ் என்னும் என்மிஸ்பாத்துக்கு வந்து, அமலேக்கியருடைய நாடனைத்தையும், அத்சாத்சோன் தாமாரிலே குடியிருந்த எமோரியரையும்கூடச் சங்கரித்தார்கள். ஆதியாகமம் 14
12 திம்னாள் ஏசாவின் குமாரனாகிய எலீப்பாசுக்கு மறுமனையாட்டியாயிருந்து, எலீப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றாள். இவர்களே ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய புத்திரர். ஆதியாகமம் 36
16 கோராகு பிரபு, கத்தாம் பிரபு, அமலேக்கு பிரபு என்பவர்கள். இவர்கள் ஏதோம் தேசத்தில் எலீப்பாசின் சந்ததியும் ஆதாளின் குமாரருமாயிருந்த பிரபுக்கள். ஆதியாகமம் 36
8 அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள். யாத்திராகமம் 17
9 அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு. நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான். யாத்திராகமம் 17
10 யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கோடே யுத்தம் பண்ணினான். மோசேயும் ஆரோனும் ஊர் என்பவனும் மலையுச்சியில் ஏறினார்கள். யாத்திராகமம் 17
11 மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள். அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான். யாத்திராகமம் 17
13 யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான். யாத்திராகமம் 17
14 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி யோசுவாவின் செவிகேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார். யாத்திராகமம் 17
16 அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான். யாத்திராகமம் 17
29 அமலேக்கியர் தென்புறமான தேசத்தில் குடியிருக்கிறார்கள், ஏத்தியரும், எபூசியரும், எமோரியரும் மலைநாட்டில் குடியிரக்கிறார்கள், கானானியர் கடல் அருகேயும் யோர்தானண்டையிலும் குடியிருக்கிறார்கள் என்றார்கள். எண்ணாகமம் 13
25 அமலேக்கியரும் கானானியரும் பள்ளத்தாக்கிலே குடியிருக்கிறபடியினால், நாளைக்கு நீங்கள் திரும்பி சிவந்த சமுத்திரத்துக்குப் போகிற வழியாய் வனாந்தரத்துக்குப் பிரயாணம்பண்ணுங்கள் என்றார். எண்ணாகமம் 14
43 அமலேக்கியரும் கானானியரும் அங்கே உங்களுக்குமுன்னே இருக்கிறார்கள், பட்டயத்தினால் விழுவீர்கள், நீங்கள் கர்த்தரை விட்டுப் பின்வாங்கினபடியால், கர்த்தர் உங்களோடே இருக்கமாட்டார் என்;றான். எண்ணாகமம் 14
45 அப்பொழுது அமலேக்கியரும் கானானியரும் அந்த மலையிலே இருந்து இறங்கிவந்து, அவர்களை முறிய அடித்து, அவர்களை ஓர்மாமட்டும் துரத்தினார்கள். எண்ணாகமம் 14
20 மேலும், அவன் அமலேக்கைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: அமலேக்கு முந்தியெழும்பினவன், ஆனாலும் அவன் முடிவிலே முற்றிலும் நாசமாவான் என்றான். எண்ணாகமம் 24
17 எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அமலேக்கு தேவனுக்குப் பயப்படாமல் உனக்கு எதிராக வந்து, உபாகமம் 25
19 உன் தேவனாகிய கர்த்தர் நீ சுதந்தரித்துக்கொள்ள உனக்குக் கொடுக்கும் தேசத்தின் சுற்றுப்புறத்தாராகிய உன்னுடைய சத்துருக்களையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் விலக்கி, உன்னை இளைப்பாறப்பண்ணும்போது, நீ அமலேக்கின் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்கு அழியப்பண்ணக்கடவாய், இதை மறக்கவேண்டாம். உபாகமம் 25
13 அவன் அம்மோன் புத்திரரையும் அமலேக்கியரையும் கூட்டிக்கொண்டுவந்து, இஸ்ரவேலை முறிய அடித்தான். பேரீச்சமரங்களின் பட்டணத்தையும் பிடித்தான். நியாயாதிபதிகள் 3
14 அமலேக்குக்கு விரோதமாக இவர்களுடையவேர் எப்பிராயீமிலிருந்து துளிர்த்தது. உன் ஜனங்களுக்குள்ளே பென்ஜமீன் மனுஷர் உனக்குப் பின்சென்றார்கள். மாகீரிலிருந்து அதிபதிகளும், செபுலோனிலிருந்து எழுதுகோலைப் பிடிக்கிறவர்களும் இறங்கிவந்தார்கள். நியாயாதிபதிகள் 5
3 இஸ்ரவேலர் விதை விதைத்திருக்கும்போது, மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரரும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பி வந்து. நியாயாதிபதிகள் 6
33 மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரர் யாவரும் ஏகமாய்க்கூடி, ஆற்றைக் கடந்துவந்து, யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினார்கள். நியாயாதிபதிகள் 6
12 மீதியானியரும், அமலேக்கியரும், சகல கிழக்கத்திப் புத்திரரும், வெட்டுக்கிளிகளைப் போலத் திரளாய்ப் பள்ளத்தாக்கிலே படுத்துக்கிடந்தார்கள். அவர்களுடைய ஒட்டகங்களுக்கும் கணக்கில்லை, கடற்கரை மணலைப்போலத் திரளாயிருந்தது. நியாயாதிபதிகள் 7
12 சீதோனியரும், அமலேக்கியரும், மாகோனியரும், உங்களை ஒடுக்கும் சமயங்களில், நீங்கள் என்னை நோக்கி முறையிட்டபோது, நான் உங்களை அவர்கள் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கவில்லையா? நியாயாதிபதிகள் 10
15 பின்பு பிரத்தோனியனான இல்லேலின் குமாரனாகிய அப்தோன் மரித்து, எப்பிராயீம் தேசத்தில் அமலேக்கியர் மலையிலிருக்கிற பிரத்தோனிலே அடக்கம்பண்ணப்பட்டான். நியாயாதிபதிகள் 12
48 அவன் பலத்து, அமலேக்கியரை முறிய அடித்து, இஸ்ரவேலரைக் கொள்ளையிடுகிற யாவர் கைக்கும் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தான். 1 சாமுவேல் 14
2 சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். 1 சாமுவேல் 15
3 இப்பொழுதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான். 1 சாமுவேல் 15
5 சவுல் அமலேக்குடைய பட்டணமட்டும் வந்து, பள்ளத்தாக்கிலே ஒரு பதிவிடையை வைத்தான். 1 சாமுவேல் 15
6 சவுல் கேனியரை நோக்கி: நான் அமலேக்கியரோடேகூட உங்களையும் வாரிக் கொள்ளாதபடிக்கு, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு விலகிப் போங்கள். இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது, நீங்கள் அவர்கள் எல்லாருக்கும் தயவு செய்தீர்கள் என்றான். அப்படியே கேனியர் அமலேக்கியர் நடுவிலிருந்து விலகிப் போனார்கள். 1 சாமுவேல் 15
7 அப்பொழுது சவுல்: ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிரேயிருக்கிற சூருக்குப் போகும் எல்லைமட்டும் இருந்த அமலேக்கியரை மடங்கடித்து, 1 சாமுவேல் 15
8 அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பிடித்தான். ஜனங்கள் யாவரையும் பட்டயக் கருக்கினாலே சங்காரம்பண்ணினான். 1 சாமுவேல் 15
15 அதற்குச் சவுல்: அமலேக்கியரிடத்திலிருந்து அவைகளைக் கொண்டு வந்தார்கள். ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள். மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான். 1 சாமுவேல் 15
18 இப்போதும் கர்த்தர்: நீ போய் அமலேக்கியராகிய அந்தப் பாவிகளைச் சங்கரித்து, அவர்களை நிர்மூலமாக்கித் தீருமட்டும், அவர்களோடு யுத்தம்பண்ணு என்று சொல்லி, உம்மை அந்த வழியாய் அனுப்பினார். 1 சாமுவேல் 15
20 சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தர் என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகைக் கொண்டு வந்து, அமலேக்கியரைச் சங்காரம் பண்ணினேன். 1 சாமுவேல் 15
32 பின்பு சாமுவேல்: அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான். ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு அற்றுப்போனது நிச்சயம் என்றான். 1 சாமுவேல் 15
8 அங்கேயிருந்து தாவீதும் அவன் மனுஷரும் கெசூரியர் மேலும் கெஸ்ரியர் மேலும் அமலேக்கியர் மேலும் படையெடுத்துப்போனார்கள். சூருக்குப் போகிற எல்லை துவக்கி எகிப்துமட்டும் இருக்கிற நாட்டிலே பூர்வகாலம் துவக்கிக் குடியிருந்தவர்கள் இவர்களே. 1 சாமுவேல் 27
18 நீ கர்த்தருடைய சொல் கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றையதினம் எனக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தார். 1 சாமுவேல் 28
1 தாவீதும் அவன் மனுஷரும் மூன்றாம்நாளிலே, சில்லாகுக்கு வந்து சேருகிறதுக்குள்ளே, அமலேக்கியர் தென்புறத்துச் சீமையின்மேலும் சில்லாக்கின் மேலும் விழுந்து, சில்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, 1 சாமுவேல் 30
13 தாவீது அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்துதேசத்துப் பிள்ளையாண்டான். மூன்று நாளைக்கு முன் நான் வியாதிப்பட்டபோது, என் எஜமான் என்னைக் கைவிட்டான். 1 சாமுவேல் 30
18 அமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான். 1 சாமுவேல் 30
1 சவுல் மரித்தபின்பு, தாவீது அமலேக்கியரை முறிய அடித்து, சில்லாகுக்குத் திரும்பிவந்து, இரண்டுநாள் அங்கே இருந்தபிற்பாடு, 2 சாமுவேல் 1
8 அப்பொழுது அவர்: நீ யார் என்று என்னைக் கேட்டார். நான் அமலேக்கியன் என்று சொன்னேன். 2 சாமுவேல் 1
13 தாவீது அதைத் தனக்கு அறிவித்த வாலிபனைப் பார்த்து: நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன், நான் அந்நிய ஜாதியானுடைய மகன். நான் அமலேக்கியன் என்றான். 2 சாமுவேல் 1
11 அவன் கொண்டுவந்தவைகளைத் தாவீதுராஜா கீழ்ப்படுத்தின சீரியர், மோவாபியர், அம்மோன்புத்திரர், பெலிஸ்தர், அமலேக்கியர் என்னும் சகல ஜாதியார்களிடத்திலும், 2 சாமுவேல் 8
36 எலீப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள். 1 நாளாகமம் 1
43 அமலேக்கியரில் தப்பி மீதியாயிருந்தவர்களை மடங்கடித்து, இந்நாள் வரைக்கும் இருக்கிறபடி அங்கே குடியேறினார்கள். 1 நாளாகமம் 4
11 அந்தத் தட்டுமுட்டுக்களையும், தான் ஏதோமியர், மோவாபியர், அம்மோன் புத்திரர், பெலிஸ்தர், அமலேக்கியர் என்னும் சகல ஜாதிகளின் கையிலும் வாங்கின வெள்ளியையும், பொன்னையும் கூடத் தாவீதுராஜா கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டான். 1 நாளாகமம் 18
6 கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், தீருவின் குடிகளோடுகூடிய பெலிஸ்தரும், சங்கீதம் 83
Comments
Post a Comment