♥️தேவனுடைய பராமரிப்பு ♥️
✨✨✨✨✨✨✨
♥️தேவனுடைய பராமரிப்பு ♥️
✨✨✨✨✨✨✨
TCBA @MORNDEV
✨✨✨✨✨✨✨
♥️1. ஒரு தாயாக தன் பிள்ளைகளை..
🌺தேற்றுகிறார்..
ஜீவனையும் கொடுக்கிறார்..
ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன், நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.
ஏசாயா 66:13
உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம். பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல,நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்.
1 தெசலோனிக்கேயர் 2:7-8
:::::::::::::::::::::::::::::::::::::
♥️2. ஒரு தகப்பனாக தன் பிள்ளைகளை..
🌺இரங்குகிறார்..
புத்தி.. தேறுதல்.. எச்சரிப்பு தருகிறார்..
தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.
சங்கீதம் 103:13
மேலும், தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் பாத்திரராய் நடக்கவேண்டுமென்று, தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும் தேறுதலும் எச்சரிப்பும் சொன்னதை அறிந்திருக்கிறீர்க
ள்.
1 தெசலோனிக்கேயர் 2:11-12
:::::::::::::::::::::::::::::::::::
♥️3. ஒரு மேய்ப்பனாக தன் ஆடுகளை..
🌺மேய்ச்சல் மட்டும் அல்ல முழு பாதுகாப்பையும் அருளுகிறார்..
ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என் ஆடுகளைத்தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பிவரப்பண்ணி,
அவைகளை ஜனங்களிடத்திலிருந்து புறப்படவும் தேசங்களிலிருந்து சேரவும்பண்ணி, அவைகளுடைய சுயதேசத்திலே அவைகளைக் கொண்டுவந்து, இஸ்ரவேல் மலைகளின்மேலும் ஆறுகள் அண்டையிலும் தேசத்தின் சகல வாசஸ்தலங்களிலும் அவைகளை மேய்ப்பேன்.
அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன், இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும், அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும், இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும்.
என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எசேக்கியேல் 34:12-15
:::::::::::::::::::::::::::::::::::::
♥️4. கோழி தன் குஞ்சுகளை...
🌺கூட்டி சேர்க்கிறார்..
எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன், உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.
மத்தேயு 23:37
:::::::::::::::::::::::::::::::::::::
♥️5. கழுகு தன் குஞ்சுகளை..
🌺அசைவாடுகிறார்
சுமந்து கொண்டு போகிறார்
வழி நடத்துகிறார்
கழுகு தன் கூட்டைக்கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டு போகிறதுபோல,
கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார், அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை.
உபாகமம் 32:11-12
:::::::::::::::::::::::::::::::::::::
♥️6. மணவாளன் மணவாட்டியை..
🌺மகிழ்ச்சியாக்குகிறார்
வாலிபன் கன்னிகையை விவாகம் பண்ணுவதுபோல, உன் மக்கள் உன்னை விவாகம்பண்ணுவார்கள், மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.
ஏசாயா 62:5
:::::::::::::::::::::::::::::::::::::
♥️நித்தியத்தில்..
சிங்காசனத்தில் ஆட்டுக்குட்டியானவர் பூமியில் தனக்காக உபத்திரவங்கள் அடைந்த பிள்ளைகளை..
🌺கண்ணீரை துடைப்பார்..
அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.
அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள், சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்.
இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை, வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை
சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார், தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர்யாவையும் துடைப்பார் என்றான்.
வெளிப்படுத்தினத விசேஷம் 7:13-17
✨✨✨✨✨✨✨
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 3
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment