✨✨✨✨✨✨✨சபையில் ஒருவன்...✨✨✨✨✨✨✨
✨✨✨✨✨✨✨
சபையில் ஒருவன்...
✨✨✨✨✨✨✨
TCBA @NIGHTWATCH
✨✨✨✨✨✨✨
தேவனுடைய படைப்பின் திட்டத்தில்
" *ஒருவன்* "
என்பது மிக முக்கியமான அம்சம் ஆகும்..
அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பூரணமாயிருந்ததே. பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. . மல்கியா 2. 15a
ஒரே மனுஷன் ( முதல் ஆதாம் ) பாவம்..
ஒரே மனுஷன்
( இரண்டாம் ஆதாம் ) கீழ்ப்படிதல்..
தேவனுடைய அழைப்பும் தனி மனிதனை மையமாகவே வைத்து அமைந்திருக்கும்..
🍒ஆபிரகாம்..
🍒ஈசாக்கு
🍒யாக்கோபு
🍒மோசே..
🍒யோசுவா..
🍒பவுல்..
இன்னும் ஏராளம் வேதத்தில் காணலாம்..
சபையிலும் ஒருவன் என்கிற தனிப்பட்ட மனிதத்துவம் கவனத்துக்குரியது..
சபையில் ஒருவன் செய்கிற சில தவறுகள் கண்டிக்கப்பட வேண்டும்...
சில தவறுகளை பவுல் மற்றும் யாக்கோபு உணர்த்துகிறதை கவனித்து உணர்ந்து கொள்வோம்..
♥️1. ஒருவன்...
பிரிவினைக்கு காரணம்..
நானோ?
*ஒருவன்* நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களல்லவா?
1 கொரிந்தியர் 3:4
♥️2. ஒருவன்..
ஒழுக்ககேட்டுக்கு காரணம்..
நானோ?
உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே. *ஒருவன்* தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே. அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.
1 கொரிந்தியர் 5:1
♥️3. ஒருவன்..
சகோதரனுக்கு எதிர் வழக்கு தொடுக்க காரணம்..
நானோ?
உங்களில் *ஒருவனுக்கு* வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகத் துணியாமல், அநீதிக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன?
1 கொரிந்தியர் 6:1
♥️4. ஒருவன்..
குற்றத்தில் அகப்பட காரணம்..
நானோ?
சகோதரரே, *ஒருவன்* யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவர்களைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள். நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.
கலாத்தியர் 6:1
ஆகான் குறிக்கப்பட்டான்..
யோசுவா 7:18
♥️5. ஒருவன்..
சத்தியத்தை விட்டு விலக காரணம்..
நானோ?
சகோதரரே, உங்களில் *ஒருவன்* சத்தியத்தைவிட்டு விலகி மோசம் போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால்,
தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.
யாக்கோபு 5:19-20
♥️சகோதரரே...
🍒ஒருவன்..
தன்னை வஞ்சிக்க வேண்டாம்?
ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக.
இவ்வுலகத்திலே உங்களில் *ஒருவன்* தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.
1 கொரிந்தியர் 3:18
✨✨✨✨✨✨✨
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment