TCBA @ சபைக்கு செய்தி ✨✨✨✨✨✨✨♥️JESUS IN THE MIDST ♥️♥️இயேசு நம் நடுவில் ♥️
✨✨✨✨✨✨✨
TCBA @ சபைக்கு செய்தி
✨✨✨✨✨✨✨
♥️JESUS IN THE MIDST ♥️
♥️இயேசு நம் நடுவில் ♥️
✨✨✨✨✨✨✨
தியான வசனம் :
1. 🍒யோபு வின் அங்கலாய்ப்பு..
@ அநேகர் தங்கள் ஆவிக்குரிய, தனிப்பட்ட, குடும்ப, சபை மற்றும் சமுதாய வாழ்க்கையில் மத்தியஸ்தர் இல்லாததால் அநேக நிலைகளில் கலக்கம் மற்றும் சமாதானமின்மை சந்திக்கிறார்கள்..
எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க மத்தியஸ்தன் எங்களுக்குள் இல்லையே.
யோபு 9:34
2. 🍒சிம்சோனின் அறியாமை..
@ அநேகர் தங்கள் அனுதின வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து இல்லாததை அறிகிறதில்லை..
அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள். அவன் நித்திரைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல் உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான். நியாயாதிபதிகள் 16:20
3. 🍒 இயேசு கிறிஸ்துவின் பெற்றோர் இழந்த நிலை..
@ அநேகர் தஙகள் ஆவிக்குரிய பயணத்தில் இயேசு கிறிஸ்துவை தவற விடுகிறார்கள்..
அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகை முறைமையின்படி எருசலேமுக்குப் போய்,
பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார், இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது.
அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள்.
லூக்கா 2:42-44
4. 🍒 சவுல் தன்னை விட்டு விலகினதை அறிகிறான்..
@ அநேகர் மெய்யாகவே கர்த்தர் தன்னில் இல்லை என்பதையும் கர்த்தர் தம் பிள்ளைகளிடம் இருக்கிறார் என்பதையும் உணர ஆவியானவர் உணர்த்துகிறார்..
கர்த்தர் தாவீதோடேகூட இருக்கிறார் என்றும் தன்னைவிட்டு விலகிப் போனார் என்றும், சவுல் கண்டு, தாவீதுக்குப் பயந்து,
1 சாமுவேல் 18. 12
🤝சிந்திப்போம்:
🐒நாம் எந்த நிலையில் இருக்கிறோம்?
கர்த்தர் நம் நடுவில் இருக்கிறாரா?
:::::::::::::::::::::::::::::::::
🤝சபைக்கு செய்தி:
♥️1. தேவாலயத்தில் போதகர் நடுவில் இயேசு..
🍒நாம் அவருடைய புத்தியும் அவருடைய மாறுத்தரங்களும் கண்டு பிரமி ப்படைய..
ஏசாயா 52:14
மூன்றுநாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்.
லூக்கா 2:46
:::::::::::::::::::::::::::::::::::
♥️2. சபை நடுவில் இயேசு..
🍒 சபையை கண்காணிக்க.. சபையில் தம் பரிசுத்தத்தையும் மகத்துவத்தையும் வெளிப்படுத்த..
அப்பொழுது என்னுடனே பேசினசத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன், திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும்,
அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகேபொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.
வெளிப்படுத்தினத விசேஷம் 1:12-13
:::::::::::::::::::::::::::::::::::
♥️3. இரண்டு மூன்று பேர் கூடும்போது..
🍒 நம் ஜெபத்தை கேட்க நம் ஜெபத்துக்கு பதில் அருள நம் மத்தியில்...
ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
மத்தேயு 18:20
:::::::::::::::::::::::::::::::::::
♥️4. நம்மோடு சேர்ந்து கர்த்தரை துதிக்க..
🍒 நம்மை சகோதரர் என்று சொல்ல வெட்கப்படாமல் நம் நடுவில்...
எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள். இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்:
உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும்,
நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும். இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்று சொல்லியிருக்கிறார்
எபிரேயர் 2:11-13
:::::::::::::::::::::::::::::::::::
♥️5. நம் அவிசுவாசம் நீங்க..
🍒சமாதானம் அருள நம் நடுவில்..
வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
யோவான் 20:19, 26
:::::::::::::::::::::::::::::::::::
♥️6. சிலுவையில் நடுவில் கிறிஸ்து..
அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள், அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டுபக்கங்களிலும் இயேசுவை *நடுவிலுமாகச்* சிலுவைகளில் அறைந்தார்கள்.
யோவான் 19:18
புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் *பிரத்தியட்சமாய்* உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே.
கலாத்தியர் 3:1
🌺அறிய வேண்டிய சாத்தியம்:
🌺சிலுவையில் நடுவில் இரட்சிப்பும் பரிசுத்தமாகுதலும்
🌺சிலுவை மரணம் அவிசுவாசிகளுக்கு இரட்சிப்பு மட்டும் அல்ல...
🌺சிலுவை நிழல் விசுவாசிகளுக்கு அனுதின இளைப்பாறுதலுமே..
🌸பாடல்:
228. சிலுவை நிழலில் அனுதினம் அடியான்
பல்லவி
சிலுவை நிழலில் அனுதினம்
அடியான்
சாய்ந்திளைப் பாறிடுவேன்
- ஆ ஆ
அனுபல்லவி
சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில்.
- சிலுவை
சரணங்கள்
1. பாவ பார சுமையதால் சோர்ந்தே
தளர்ந்த என் ஜீவியமே
சிலுவை யண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்,
இளைப்படையாது மேலோகம்
ஏகுவேன் பறந்தே வேகம்.
- சிலுவை
2. இன்பம் சுரந்திடும் திருமொழி
கேட்டு என்
இன்னல்கள் மறந்திடுவேன்
திருமறை இன்னிசை நாதம்
தேனிலுமினிய வேதம்.
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்கும் என் இதயத்தின் தோஷம்.
- சிலுவை
3. எவ்விதக் கொடிய இடருக்கு
மஞ்சேன்
இயேசுவைச் சார்ந்து நிற்பேன்;
அவனியில் வியாகுலம் வந்தால்,
அவரையே நான் அண்டிக்
கொண்டால்
அலைமிகு மோதிடு மந்நாள்
ஆறுதலளிப்பாரே சொன்னால்.
- சிலுவை
:::::::::::::::::::::::::::::::::::
♥️♥️7. நித்தியத்தில் சிங்காசனத்தின் மத்தியில்..
🌺ஆட்டுக்குட்டியான வர்..
அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் *மத்தியிலே* நிற்கக்கண்டேன், அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது, அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.
வெளிப்படுத்தினத விசேஷம் 5:6
♥️♥️நித்திய நகரத்தின் மத்தியில்
🌺 ஜவ விருட்சம்
பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும், அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.
வெளிப்படுத்தினத வ
இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும்.
அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள், அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
வெளிப்படுத்தினத விசேஷம் 22:1-4
🤝🤝🤝🤝🤝🤝🤝
பிரியமானவர்களே!!!
சபை நடுவில் சிந்திக்க சில நிமிடம்..
நம்மை சோதிக்க நம் நடுவில் அக்கினி?
பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்,
கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.
நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள். ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார். அவர்களாலே தூஷிக்கப்படுகிறார். உங்களாலே மகிமைப்படுகிறார்.
1 பேதுரு 4:14
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment