INFINITE GOD... எல்லையற்ற தேவன்


*SHALOM STEWARD THOUGHTS DISCERNS*
 TCBA*சபைக்கு செய்தி*
----------------------------------
 *தேவனுடைய எல்லையற்ற செயல்கள்*
 *God’s infinite deeds..*

“God’s infinite deeds” refers to God’s boundless, unlimited actions that manifest His character, including creation, providing guidance (like the pillar of fire and cloud in the Bible), performing miracles, and offering unending mercy and love to humanity.

♥️♥️♥️♥️♥️♥️

1. _தேவனுடைய கை குறுகவில்லை.._

அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று, நீ இப்பொழுது காண்பாய் என்றார்.
எண்ணாகமம் 11:23

2. _கர்த்தருடைய செவி மந்தமாகவுமில்லை_

 இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை, கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை
ஏசாயா 59:1

3. _கர்த்தருடைய வசனம் கட்டப்படவில்லை_

இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன். தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை
2 தீமோத்தேயு 2:9


4. _கர்த்தருடைய பெலன் குறையவில்லை_

உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள், அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே, அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.
ஏசாயா 40:26

5. _கர்த்தர் மாறாதவர்._

இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்
எபிரேயர் 13:8

6. _தேவனுடைய இரக்கங்களுக்கு முடிவில்லை_

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
புலம்பல் 3.22

7. _எவ்வளவேனும் பொய்யுரையாதவர்_ ..
நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.
எபிரேயர் 6:18


8. _கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை_ ..
தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை, சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.
ஏசாயா 9.7

9. _அவருடைய அழைப்பு மாறாதது_ ..

தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.
ரோமர் 11:29

10. _அவருடைய நியாயத்தீர்ப்புக்கள் அளவிடப்படாதவைகள்_

ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புக்கள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!
ரோமர் 11.33

11. _அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்_ ..

ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புக்கள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!
ரோமர் 11.33

12. _அவருடைய ராஜ்யம் அழியாதததுமாயிருக்கும்_ ...

சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது. அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாதததுமாயிருக்கும்.
தானியேல் 7.14


13. _அறிவுக்கெட்டாத அவருடைய அன்பு_ ..
அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
எபேசியர் 3:19

14. _இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்_ ...

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3.16

 *கடைசியாக சகோதரரே..*

 _நம்முடைய அழியாத அன்பு.._
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்.
எபேசியர் 6.24

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை டூவிபுரம் தூத்துக்குடி
Shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA