watch அருளுரை துளிகள் ✨✨✨✨✨✨✨பாவம் காட்டும் கருவி SIN MEASURING METER
https://youtu.be/LqgEhjeeGM4?si=x1auJuvF0gOA7bmJ
✨✨✨✨✨✨✨
SHALOM NIGHT WATCH
✨✨✨✨✨✨✨
பாவம் அளக்கும் கருவி
SIN MEASURING METER
✨✨✨✨✨✨✨
விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.
ரோமர் 14:23
♥️AI இவ்வாறு கூறுகிறது..
பாவத்தை (தவறை) சுட்டிக்காட்டும் ஒரு கருவி என்று பொதுவாக அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது. பாவங்கள் என்பது மனிதர்களின் செயல்களோடு தொடர்புடையவை, அவற்றை சுட்டிக்காட்ட எந்த ஒரு கருவியும் இல்லை.
ஒருவர் பொய் பேசினால், அது ஒரு பாவம். அதைச் சுட்டிக்காட்ட எந்தக் கருவியும் இல்லை. ஆனால், அவரது மனசாட்சி அதை உணர்த்தும்.
ஒருவர் திருடினால், அது ஒரு பாவம். அதைக் கண்டுபிடிக்க கேமரா போன்ற கருவிகள் பயன்படலாம், ஆனால், அதைச் செய்தவரை திருந்துவதற்கு அவரது மனசாட்சி மற்றும் சமூகத்தின் பயம் உதவும்.
♥️வேதம் என்ன கூறுகிறது?
பாவம் செய்யாத ஒரு அவிசுவாசியை சந்தித்தேன்..
காரணம் என்ன என்று கேட்டேன்..
என்னுடைய மனசாட்சியே நான் பாவம் செய்யாது தடுக்கிறது என்றார்..
வேதம் கூறுகிறது ஒரு அவிசுவாசி விசுவாசியாகும்போது அவனுடைய மனசாட்சியை எடுத்து விட்டு அவனில் பரிசுத்த ஆவியை வைக்கிறாரா?
இல்லை ஒருவர் இரட்சிக்கப்படும் போது அவருடைய மனசாட்சியுடன் பரிசுத்த ஆவியானவரை இணைக்கிறார்.
ஆகவே இப்பொழுது இந்த விசுவாசி 2 பேர்களுக்கு பதில் கூற வேண்டும்
🍅1. மனசாட்சி
🍅2. பரிசுத்த ஆவி
🤝சிந்திக்க:
🤝விசுவாசமும் நல் மன சாட்சியும்:
நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு.
1 தீமோத்தேயு 1:18b
கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.
1 தீமோத்தேயு 1:5
🤝மனசாட்சியும் ஆவியானவரும்:
நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்தஆவிக்குள் என்மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது.
ரோமர் 9:2
Bible is the only Sin Measuring Meter..
In details...
Faith is the Sin Measuring Meter..
Let us measure our sin according to the increase of faith..
The more the FAITH the less the SIN
விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.
ரோமர் 14:23
Romans 14:23 states that "anything that does not come from faith is sin."
Read & Stand before the Bible..
This will show exact Sin range..
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும், நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார், நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.
யோவான் 16:7
அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
யோவான் 16:8
அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும்,
யோவான் 16:9
நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும்,
யோவான் 16:10
இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.
யோவான் 16:11
இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.
அப்போஸ்தலர் 24.16
இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்.
1 தீமோத்தேயு 1.19
விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும். 1 தீமோத்தேயு 3.9
உன்னிலுள்ள மாயமற்ற விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்த மனச்சாட்சியோடே ஆராதித்துவரும் தேவனை நான் ஸ்தோத்திரிக்கிறேன்.
2 தீமோத்தேயு 1.4
நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! எபிரேயர் 9.14
துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். எபிரேயர் 10.22
21 இதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது.
1 பேதுரு 3. 21
Good Night
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment