SHALOM STEWARD LIFEAPPLICATION TRUTHS *உங்கள் இருதயத்தை அறிந்து கொள்ளுங்கள்..* *KNOW YOUR HEART*
SHALOM STEWARD LIFE
APPLICATION TRUTHS
*உங்கள் இருதயத்தை அறிந்து கொள்ளுங்கள்..*
*KNOW YOUR HEART*
===========================
The most fitting Bible verse for “know your heart” is Psalm 139:23-24, which is a prayer to God, “Search me, O God, and know my heart; test me and know my anxious thoughts. See if there is any offensive path in me, and lead me in the way everlasting”.
*Verse for Meditation..*
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
எபிரேயர் 4:12
===========================
1. *சுபாவ இருதயம்..*
எல்லாவற்றைப்பார்க்கிலும் *இருதயமே* திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?
எரேமியா 17:9
_இது மகா கேடுள்ளது.._
2. *மனந்திரும்பாத இருதயம்..*
உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத *இருதயத்திற்கும்* ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.
ரோமர் 2:5
_இது எச்சரிப்பை அசட்டை பண்ணுகிறது_ ..
3. *நருங்குண்ட இருதயம்..*
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான், தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான *இருதயத்தை* நீர் புறக்கணியீர்.
சங்கீதம் 51:17
_இது பாவத்தை அறிக்கையிடுகிறது_ ..
4. *திறந்துள்ள இருதயம்..*
அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள். பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் *இருதயத்தைத்* திறந்தருளினார்.
அப்போஸ்தலர் 16:14
_இது வார்த்தையை பெற்றுக்கொள்ளுகிறது_ ..
5. *விசுவாசிக்கும் இருதயம்..*
என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் *இருதயத்திலே* விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
ரோமர் 10:9
_இது கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ளுகிறது_ ..
6. *குறிக்கோளுள்ள இருதயம்..*
அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் *மனநிர்ணயமாய்* நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான்.
அப்போஸ்தலர் 11:23
_இது கர்த்தரோடு இசைந்துள்ளது_ ..
7. *பக்குவப்படுத்தப்பட்ட இருதயம்..*
கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் *இருதயத்தைப்* பக்குவப்படுத்தியிருந்தான்.
எஸ்றா 7.10
_இது கர்த்தருடைய கட்டளைகளால் பக்குவப்படுத்தப்படுகிறது_ ..
*Closing thought..*
*தீர்க்கும் இருதயம்..*
நம்முடைய *இருதயமே* நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய *இருதயத்திலும்* பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.
1 யோவான் 3.20
_இது நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து நம்மை சரி செய்கிறது.._
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
Comments
Post a Comment