SHALOM STEWARD LIFE APPLICATION TRUTHS............சரீரத்தில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்? In Body what's your status?
SHALOM STEWARD LIFE APPLICATION TRUTHS
சரீரத்தில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?
In Body what's your status?
சரீரத்தில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?
In Body what's your status?
@ ஆவியில் இரட்சிக்கப்பட்டோம்..
ஒரு நாள் நீதிமான்களானோம்..
பாவத்தின் தண்டனை இல்லை..
@ ஆத்துமாவில் இரட்சிக்கப்படுகிறோம்..
அனுதினம் பரிசுத்தமாகிறோம் ..
பாவத்தின் வல்லமையை ஜெயிக்கிறோம்..
@ சரீரத்தில் இரட்சிக்கப்படுவோம்..
இனி மீட்கப்படுவோம்..
பாவத்தின் பிரசன்னத்தில் இருந்து விலகுவோம்..
இந்த சிந்தைகளினாலே அனேக சத்தியங்களை ஆராய்ந்து பார்க்காமல் தேவன் வெளிப்பாடுகளை இழந்து விடுகிறோம்..
ஆவி, ஆத்துமா, சரீரம் பிரிக்க முடியாது..
தேவன் மனிதர்களிடம் வாசம் பண்ண தெரிந்து கொண்ட அமைப்பு தான்
ஆவி ஆத்துமா சரீரம்..
Spirit Soul Body..
1. நோவாவுடன் தங்கியிருக்க பேழை ..
மூன்று தட்டுகள்
( ஆவி ஆத்துமா சரீரம்.)
2. மோசே.. இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் தங்க ஆசரிப்புக் கூடாரம்..
பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம்..
( ஆவி ஆத்துமா சரீரம்.)
3. சாலொமோன் கட்டின தேவாலயம்..
பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம்..
( ஆவி ஆத்துமா சரீரம்.)
4. அந்த வார்த்தை மாம்சமாகி கிருபையினாலும் சத்தியதினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே
( ஆவி ஆத்துமா சரீரம்.) வாசம் பண்ணினார்..
பாவம் எப்படி ஆவியில் கர்ப்பம் தரித்து ஆத்துமாவில் கரு வளர்ந்து சரீரத்தில் பிறக்கிறதோ.. அதே போல்
அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும் ( சரீரம் ), பார்வைக்கு இன்பமும்
( ஆத்துமா ) புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க.
( ஆவி ) விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான்.
ஆதியாகமம் 3:6
ஆவியில் ஆரம்பிக்கிற பாவம் ஆத்துமாவையும் சரீரம் முழுவதையும் பாதிக்கிறதே!
சரீரத்தில் செய்கிற பாவம் ஆத்துமாவையோ ஆவியையோ பாதிக்காது என்பது தான் நிக்கோலாய் மதம்..
அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு, அதை நான் வெறுக்கிறேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:15
நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:16
அதே போலவே ஆவியில் பரிசுத்தம் ஆத்துமாவையும் சரீரத்தையும் பரிசுத்தமாக்குகிறது..
நீங்கள் இந்த சீன் வனாந்தரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீர் சமீபத்தில் இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே என்னைப் பரிசுத்தம்பண்ணாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே,
உபாகமம் 32:50
உன் சகோதரனாகிய ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரித்து, தன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்பட்டதுபோல நீயும் ஏறப்போகிற மலையிலே மரித்து, உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்.
உபாகமம் 32:51
இன்றைக்கு நீங்கள் சரீரத்தில் எப்படிப்பட்டவர்கள் என்று சிந்திப்போம்..
In Body what's your status?
சரீரத்தில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?
சில சத்தியங்களை கவனியுங்கள்..
1. நம்முடைய தேவன் ஒருவரே..
வேதம் திரித்துவ தேவனை நாம் விசுவாசிக்க அநேக சத்தியங்களை தெளிவு படுத்துகிறது..
TRINITY OF GOD..
2. இதே போலவே
நம்முடைய இரட்சிப்பின் திட்டத்தில் ஆவி ஆத்துமா சரீரம் இயங்குகிறது..
இதை முத்தரப்பு சுபாவம் என்று அழைக்கிறார்கள்..
In Christian theology, the tripartite view (trichotomy) holds that humankind is a composite of three distinct components: body, spirit, and soul.
ஆவியும் ஆத்துமாவும் இணைந்து சரீரம் தனியாக இயங்குகிறது என்கிற இருத்தரப்பு சுபாவம் ஏற்றுக்கொள்ள வேதத்தில் வசனங்களில்லை..
It is in contrast to the bipartite view (dichotomy), where soul and spirit are taken as different terms for the same entity (the spiritual soul).
3. இதே போலவே மனிதனுடைய பாவமும் முத்தரப்பு கொள்கையில் தான் செயல்படுகிறது..
நாம் ஆவியில் ரட்சிக்கப்படும் முன்பு நம்முடைய சரீரத்தைக் குறித்து வேதம் தெளிவாக கூறுகிறது..
1. பாவ சரீரம்:
ரோமர் 6.6, 7.17
2. சாவுக்கேதுவான சரீரம்:
ரோமர் 6.12, ரோமர் 8.11
3. அற்பமான சரீரம்:
பிலிப் 3.2
4. சரீர பாண்டம் :
1 தெச 3.5
5. நன்மை வாசமாயிராத மாம்சம் :
ரோமர் 7.18
6. அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமை:
ரோமர் 6.19
7. மரணத்திற்கேதுவான கனி கொடுக்கும் அவயவம்:
ரோமர் 7.5
8. மாம்சத்திற்குரிய பாவ சரீரம்:
கொலோ 2.11
::::::::::::::::::::::::::::::::::::
கவனியுங்கள்:
நாம் ஆவியில் இரட்சிக்கப்படும் அதே சமயத்தில் அல்லது கணப்பொழுதில் நூற்றுக்கும் மேற்பட்ட அநேக மாற்றங்கள் நம் அந்தஸ்தில், நம் சிந்தையில், நம் சரீரத்தில் ஏற்படுகிறது..
சரீரத்தில் அநேக மாற்றங்கள் ஏற்படுகிறதை ஒரு விசுவாசி கண்டிப்பாக feel பண்ணியிருக்க வேண்டும்..உணர்ந்திருக்க வேண்டும்..
என்ன மாற்றம், என்ன நிகழ்வு ஏற்படுகிறது?
1. பாவ சரீரத்தை களைந்து விடுகிறோம்..
அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள்.
கொலோசெயர் 2:11
2. மாம்சத்துக்குட்படுதல் தவிர்க்கப்படுகிறது..
தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.
ரோமர் 8:9
3. சரீரம் பாவத்தினிமித்தம் மரித்ததாகிறது..
மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்.
ரோமர் 8:10
4. சாவுக்கேதுவான சரீரம் உயிர்ப்பிக்கப்படுகிறது..
அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
ரோமர் 8:11
5. சரீரம் கர்த்தருக்குரியதாகிறது..
வயிற்றுக்குப் போஐனமும் போஐனத்திற்கு வயிறும் ஏற்கும். ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியப்பண்ணுவார். சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது. கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர்.
1 கொரிந்தியர் 6:13
கீழ்க்கண்ட சத்தியத்தின்படி..
Doctrine of Imputed Sanctification..
புகுத்தப்பட்ட பரிசுத்தமாகுதல் என்கிற உபதேசம்..
இந்த வசனத்தை கவனியுங்கள்..
1. மேலும் முதற்பலனாகிய மாவானது
( ஆவி ) பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும்
( ஆத்துமா, சரீரம் ) பரிசுத்தமாயிருக்கும்,
2. வேரானது ( ஆவி ) பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும்
( ஆத்துமா, சரீரம்) பரிசுத்தமாயிருக்கும்.
ரோமர் 11:16
இது மிக முக்கியமான ஒரு சத்தியம் ஆகும்..
இதன் இன்னொரு Supporting Doctrine
( ஒத்திசைக்கும் சத்தியம்) என்ன வென்றால் Doctrine of Perseverance
( நிலைத்திருக்குதல் உபதேசம் )
இந்த சத்தியத்தின் அடிப்படையில் நம்முடைய சரீரதிற்கு பவுல் அழைக்கும் பெயர்கள்..
1. கிறிஸ்துவின் அவயவம்..
1 கொரி 6.15
2. கர்த்தருக்குரியது..
1 கொரி 6.13
3. தேவனுக்கு உடைமை
1 கொரி 6..20
4. தேவனாலே பெற்றது
1 கொரி 6.19
5. பரிசுத்த ஆவியின் ஆலயம்
1 கொரி 6.19
6. இரட்சகர் கட்டுப்பாட்டில் நம் சரீரம்
எபே 5.23
7. கிறிஸ்துவின் மாம்சத்திற்க்கும் எலும்புகளுக்கும் உரியவர்..
எபே 5.30
அப்படியானால் என் சரீரத்தின் மேல் என்னுடைய பொறுப்புகள்..
1. சரீரத்தின் மேல் அதிகாரம் உண்டு.. ஆனால் ..
எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது.
2. சரீரத்தின் மேல் அதிகாரம் உண்டு.. ஆனால் ..
எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.
1 கொரிந்தியர் 10:23
3. சரீரத்தின் மேல் அதிகாரம் உண்டு.. ஆனால் ..
எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது. எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.
1 கொரிந்தியர் 6:12
:::::::::::::::::::::::::::::::::::::::
நான் என் சரீரத்தை எப்படி கையாள வேண்டும்?
1. கர்த்தருடைய வசனத்தின் மூலம் ஒழுங்கு படுத்த வேண்டும் ..
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.
எபிரேயர் 4:12
2. ஒடுக்கி கீழ்ப்படுத்த வேண்டும்..
மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.
1 கொரிந்தியர் 9:27
3. அவயவங்களை அழித்துப் போட வேண்டும்..
ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளை உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.
கொலோசெயர் 3:5
4. செய்கைகளை அழித்துப் போட வேண்டும்..
மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள், ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.
ரோமர் 8:13
5. சரீரத்தை கனவீனம் செய்யக் கூடாது..
செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துகளை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக, நான் கர்த்தர்.
லேவியராகமம் 19:28, 21.5, உபா 14.1
6. சரீரத்தின் இச்சை சிலுவையில் அறைய வேண்டும்..
கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
கலாத்தியர் 2:20, 5.24
7. மாம்ச இச்சை விட்டு விலக வேண்டும்..
பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்சஇச்சைகளை விட்டு விலகி,
1 பேதுரு 2:11
8. சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டு கொள்ள வேண்டும்..
தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல்,
1 தெசலோனிக்கேயர் 4:4
உங்களில் அவனவன் தன்தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:
1 தெசலோனிக்கேயர் 4:5
9. திருமணம் ஆனவர்கள் தங்கள் சரீரத்தை exchange
( மாற்றிக்கொள்ள) வேண்டும்..
மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி. அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.
1 கொரிந்தியர் 7:4
10. கிறிஸ்துவின் அச்சடையாளங்களை தரித்துக்கொள்ள வேண்டும்..
இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக. கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக் கொண்டிருக்கிறேன்.
கலாத்தியர் 6:17,
2 கொரி 4.10
11. சரீரத்தில் பாடுகள் அனுபவிக்க முன் வர வேண்டும்..
அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய். எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன். இவையெல்லாவற்றினின்றும் கர்த்தர் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
2 தீமோத்தேயு 3.11,
கலா 3.4,
2 தீமோ 1.12, 2.12
12. சரீரத்தில் சகோதர ஸ்நேகத்தை காட்ட வேண்டும்..
ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? 1 யோவான் 3:17
என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.
1 யோவான் 3:18
13. சரீரத்தில் தேவனை மகிமைப் படுத்த வேண்டும்..
நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.
பிலிப்பியர் 1.20, 1 கொரி 6.20
14. நம் மாம்சத்தை ஆவிக்கு கீழ்ப்படிய வைக்க வேண்டும்..
மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்திற்கு விரோதமாகவும் இச்சிக்கிறது. நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.
கலாத்தியர் 5:17
15. சரீரம் ஆலயம் என்ற சிந்தை எப்பொழுதும் மேலோங்கி இருக்க வேண்டும்.
ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம்.
1 கொரிந்தியர் 3:17
16. சரீரத்தை ஒப்புக்கொடுக்க வேண்டும்..
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
ரோமர் 12:1, 13.14
::::::::::::::::::::::::::::::::::::::::
நம் சரீரத்தின் எதிர் காலம் என்ன? வேதம் மட்டுமே இதை கூறுகிறது..
1. Body will sleep
சரீரம் இளைப்பாறும்..
1 கொரி 15.51, அப் 7.60, 1 தெச 4.13-14
2. Body will be preserved
சரீரம் பாதுகாக்கப்படும்..
எபே 4.30, யூதா 1.9,
உபா 34.6, ரோம 8.11,
1 கொ 15.23
3. Body will be saved..
சரீரம் இரட்சிக்கப்படும்..
எபே 5.23, எபி 9.28, மத் 10.28
4. Body will be resurrected
சரீரம் உயிர்த்தெழும்..
1 கொ 15.52, 1 தெச 4.14, 2 கொரி 4.14,
ரோம 8.11
5. Body will be glorified
சரீரம் மகிமைப்படும்..
பிலிப் 3.21, 1 யோவான் 3.2
6. Body will be redeemed..
சரீரம் மீட்கப்படும்..
ரோம 8.23
7. Body will be rewarded..
சரீரம் தக்க பலனை அடையும்..
2 கொரி 5.10,
ரோமர் 14.10
கடைசியாக சகோதரரே..
முழு சரீரமும் நம் கட்டுப்பாட்டுக்குள் கிறிஸ்துவின் பெலத்தினால்..
1.
அடக்குவோம்..
நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.
யாக்கோபு 3.2
2.
திருப்பி நடத்துவோம்..
பாருங்கள், குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படிக்கு அவைகளின் வாய்களில் கடிவாளம்போட்டு, அவைகளுடைய முழுச்சரீரத்தையும் திருப்பி நடத்துகிறோம்.
யாக்கோபு 3.3
3..
கறைப்படுத்தாமல் காப்போம்..
நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது!
யாக்கோபு 3.6
GOD BLESS THE WRITER AND READER
courtesy:
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
whatsapp: +91 9965050301
Comments
Post a Comment