மாம்சம் பிரிந்து போகுதல் ✨✨✨✨✨✨✨சபைக்கு செய்தி @TCBA
✨✨✨✨✨✨✨
மாம்சம் பிரிந்து போகுதல்
✨✨✨✨✨✨✨
சபைக்கு செய்தி @TCBA
✨✨✨✨✨✨✨
*SHALOM STEWARD THOUGHTS DISCERNS*
===================
*மாம்சம் பிரிந்து போகுதல்*
====================
_வேதம் மனிதர்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கிறது._
🍒1. *ஜென்ம சுபாவ மனிதன்*
ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.
1 கொரிந்தியர் 2:14
🍒2. *ஆவிக்குரிய மனிதன்*
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
1 கொரிந்தியர் 2:15
🍒3. *மாம்சத்திற்குரிய விசுவாசி*
மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று
1 கொரிந்தியர் 3:1
====================
🤝மாம்சீக விசுவாசிகள் தன்மைகள்..
@ மாம்சத்திற்குரியவர்கள் அல்லது கிறிஸ்துவுக்குள் குழந்தைகள்..
@ மாம்சம் பிரிந்து போக வேண்டும்
@ நம்முடைய அழைப்பிலேயே மாம்சத்தை களைந்து விட வேண்டும்..
@ மாம்சம் விசுவாசியிடம் இருக்கும் வரை ஆவிக்குரிய ஆசிர்வாதம் அல்லது சந்ததிகளின் ஆசிர்வாதம் கிடைக்காது.
@ ஆபிரகாமின் அழைப்பில் தேவன் கட்டளை இடாத மாம்சம் (லோத் ) ஆரம்பமாகிறது.
@ ஆபிரகாம் விசுவாச வாழ்க்கையில் மாம்சம் பிரிக்கப்பட்ட போது மட்டுமே மூன்று ஆசீர்வாதங்கள் பெறுகிறான்..
====================
🌺@@@@ ஆபிரகாம் ( ஆவிக்குரிய மனிதன் ) வாழ்க்கையிலிருந்து லோத் ( மாம்சம் ) எப்படி பிரிந்து போகிறது என்பதை கவனியுங்கள்..
♥️1. _நம் உன்னத, பரிசுத்த, பரம ( Eternal, Holy, Heavenly Calling ) அழைப்பில் மாம்சமும் தொடர்கிறதை கவனித்தீர்களா?_
கர்த்தர் ஆபிராமை
நோக்கி: *நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு,* நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.
ஆதியாகமம் 12:1
கர்த்தர் *ஆபிராமுக்குச்*
(ஆவிக்குரிய மனிதன் ) சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான். *லோத்தும்
*(மாம்சம் ) அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்
ஆதியாகமம் 12:4
:::::::::::::::::::::::::::::::::::::
♥️2. _ஆவிக்குரிய மனிதனுக்கும் மாம்சத்திற்குரிய விசுவாசிக்கும் வித்தியாசம் காண முடியாதபடி இரண்டு பேரும் வளருவார்கள்_ ..
@ ஆபிராம் ( ஆவிக்குரிய மனிதன் ) மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான்.
ஆதியாகமம் 13:2
ஆபிராமுடனே வந்த லோத்துக்கும் ( மாம்சம் ) ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன.
ஆதியாகமம் 13:5
@ ஆனால் விசுவாசிகள் அடையாளம் கண்டு பிடிக்க வேண்டுமானால் கர்த்தருடைய வசனத்தில் ஒருவர் செழிப்பாக இருக்க வேண்டும்.
:::::::::::::::::::::::::::::::::::::
♥️3. _ஆவிக்குரிய மனிதனும் மாம்சமும் ஒருமித்து வாசம் பண்ண முடியாது.._
அவர்கள் ஒருமித்துக் குடியிருக்க அந்தப் பூமி அவர்களைத் தாங்கக்கூடாதிருந்தது. அவர்களுடைய ஆஸ்தி மிகுதியாயிருந்தபடியால், அவர்கள் ஒருமித்து வாசம்பண்ண ஏதுவில்லாமற்போயிற்று.
ஆதியாகமம் 13:6
:::::::::::::::::::::::::::::::::::::
♥️4. _ஆவிக்குரிய மனிதனுக்கும் மாம்சத்திற்கும் வாக்குவாதம் வரும் அல்லது வர வேண்டும்_ ..
வாக்குவாதம் வரவில்லை என்றால் ஆவிக்குரிய மனிதன் ஆவியில் நிறையவில்லை என்று கண்டு கொள்ளலாம்..
ஆபிராமுடைய மந்தைமேய்ப்பருக்கும் லோத்துடைய மந்தைமேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே கானானியரும் பெரிசியரும் அத்தேசத்தில் குடியிருந்தார்கள்.
ஆதியாகமம் 13:7
⚠️மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்திற்கு விரோதமாகவும் இச்சிக்கிறது. நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது.
கலாத்தியர் 5:17
:::::::::::::::::::::::::::::::::::::
♥️5. _ஆவிக்குரிய மனிதன் வாக்குவாதம் வரும்போது நாம் சகோதரர் என்று வெளிப்படுத்துகிறார்_ ..
ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம். நாம் சகோதரர்.
ஆதியாகமம் 13:8
:::::::::::::::::::::::::::::::::::::
♥️6. _ஆவிக்குரிய மனிதன் மாம்சத்தை விட்டு பிரிந்து போக விரும்ப வேண்டும்_ ..
இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னை விட்டுப் பிரிந்துபோகலாம். நீ இடதுபுறம்போனால், நான் வலதுபுறம் போகிறேன். நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான்.
ஆதியாகமம் 13:9
:::::::::::::::::::::::::::::::::::::
♥️7. _மாம்சம் எப்போதும் செழிப்பான உபதேசத்தை விரும்பும்.._
அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக்கண்டான். கர்த்தர் சோதோமையும் கோமோராவையும் அழிக்குமுன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.
ஆதியாகமம் 13:10
⚠️மாம்சசிந்தை மரணம்: ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.
ரோமர் 8:6
எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை: அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக்கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.
ரோமர் 8:7
மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.
ரோமர் 8:8
:::::::::::::::::::::::::::::::::::::
♥️8. _மாம்சம் செழிப்பானதையே தெரிந்து கொள்ளும்_ ..
அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும் தெரிந்துகொண்டு, கிழக்கே பிரயாணப்பட்டுப்போனான்.
⚠️மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன. இவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
கலாத்தியர் 5:19
விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
கலாத்தியர் 5:20
பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவாகள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் உங்களுக்குச் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
கலாத்தியர் 5:21
:::::::::::::::::::::::::::::::::::::
♥️9. _மாம்சம் ஆவிக்குரிய மனிதனை விட்டு பிரிவது அவசியம்.._
இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள்.
ஆதியாகமம் 13:11
⚠️ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளை உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.
கொலோசெயர் 3:5
இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.
கொலோசெயர் 3:8
:::::::::::::::::::::::::::::::::::::
♥️10. _ஆவிக்குரிய மனிதன் பெத்தேலில் கூடாரம் போடுகிறான்_ ( தேவனுடைய வீடு )
ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்.
பின்பு அவன் அவ்விடம்விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயி தனக்கு கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
ஆதியாகமம் 12:8
:::::::::::::::::::::::::::::::::::::
♥️11. _மாம்சம் சோதோமில் கூடாரம் போடுகிறான்_ ..
லோத்து அந்த யோர்தானுக்கு அருகான சமபூமியிலுள்ள பட்டணங்களில் வாசம்பண்ணி, சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான்.
ஆதியாகமம் 13:12
சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள்.
ஆதியாகமம் 13:13
----------------------------
✨_மாம்சம் ஆவிக்குரிய மனிதனை விட்டு பிரிந்த பின் 3 சந்ததிகளின் ஆசிர்வாதம் கிடைக்கிறது.._
( blessing for generation )
♥️1. *உன் சந்ததி பூமியின் தூள்
( எண்ணற்ற சந்ததி )*
லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார். நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து,
உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன். ஒருவன் *பூமியின் தூளை* எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்.
ஆதியாகமம் 13:16
♥️2. *உன் சந்ததி நட்சத்திரம்
( பிரகாசமுள்ள சந்ததி )*
அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், *நட்சத்திரங்களை* எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி. பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.
ஆதியாகமம் 15:5
♥️3. *உன் சந்ததி கடற்கரை மணல்
( நித்திய சந்ததி )*
நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும், நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
ஆதியாகமம் 22:17-18
✨✨✨✨✨✨✨
🍒Closing thought
_🍒ஆவிக்குரிய மனிதனின் பூரண ஆசிர்வாதம்.._
⚠️ஆகையால் *விசுவாசமார்கத்தார்கள்* எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக. மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.அந்தப்படி *விசுவாசமார்க்கத்தார்* விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
கலாத்தியர் 3:9
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment