He who is born of God never sin* *தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான்* சுவிசேஷ மணித்துளிகள்


✨✨✨✨✨✨✨

SHALOM STEWARD THOUGHTS DISCERNS

 சுவிசேஷ மணித்துளிகள்

Gospel Moments

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

*He who is born of God never sin*

 *தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான்* 

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

ஒருவர் மிகவும் நாற்றமெடுக்கும் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டிருக்கும் ஒரு இடத்தை கவனிக்கிறார். அதன் அருகில் நிற்கக் கூட முடியாதபடி அருவருப்பாயிருக்கிறது. 

ஆனால் ஆச்சரியம் சில நாய்கள் அதனை ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தன. 

நாம் இதிலிருந்து அறிந்தது  

  " மனிதர்களுக்கு அருவருப்பாகவும் நாற்றம் நிறைந்ததாகவும் உள்ள ஒரு பொருள் நாய்களுக்கு சுவையாக இருக்கிறது ".

 *ஒப்பிட்டு பார்ப்போம்.* தேவனுடைய பிள்ளைகளுக்கும் உலகத்தின் பிள்ளைகளுக்கும் சுவையில் வித்தியாசம் வேண்டும். 

தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், எனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். 
1 யோவான் 3:9

♥️தேவனுடைய வித்து இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு பிள்ளைகளிடத்தில் இருப்பதால் பாவம் நாற்றம் நிறைந்ததாக காணப்பட வேண்டும் . 
அதை சகிக்கவும் முடியாது. 

♥️தேவனுடைய வித்து இல்லாத சாதாரண மனிதர்கள் இப்படிப்பட்ட பாவ சோதனைகளை ஜெயிப்பது கடினம். அவன் பாவத்தினால் அழிந்து போவான். 

♥️நீங்கள் இரட்சிக்கப்பட்டு தொடர்ந்து பாவத்தில் நீடிப்பீர்களாயின் உங்களை சோதித்து பார்ப்பது அவசியம். வேதம் சொல்லுகிறது...


தேவனால் பிறந்தவன் பாவம் செய்யான். 

 (1 John 3: 9) “We know that anyone born of God does not continue to sin; the one who was born of God keeps them safe…” 
(1 John 5:18).

தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம். தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான். 
1 யோவான் 5:18

♥️இன்றைக்கு தேவனுடைய கிருபையை மட்டும் பிரத்தியேகப்படுத்தி பாவம் செய்ய விசுவாசிகள் தூண்டப்படுகிற அநேக செழிப்பு உபதேசங்கள் மலிந்திருக்கின்றன. 

♥️பரிசுத்தம் தான் தேவனுடைய பிள்ளைகள் என்பதற்கு முதல் அடையாளம்.

 ♥️பரிசுத்தம் தான் நமது இரத்தம். பரிசுத்தம் தான் நம்முடைய இரத்த அணுக்கள். DNA.

*Holiness is the first sign of every God's children. 

Holiness is our inherited quality. 

Holiness is in our blood.

 Holiness is something that is in our DNA.* 

♥️உண்மையாக இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைக்கு பாவம் அருவருப்பு.
 அதில் அவன் நிலைத்திருக்க முடியாது. 

*To the one who is truly saved, sin is as disgusting as rotten garbage. He cannot stay in it.*

 *சிந்திக்க* .. 

*If the sin seems good and pleasant to you, then you should examine the state of your salvation and repent.

 _பாவம் உங்களுக்கு சந்தோசமாகவும் நன்மையாகவும் தோன்றினால் உங்கள் இரட்சிப்பை பரிசோதியுங்கள். மனந்திரும்புங்கள்._ 

@ இன்று நீங்கள் பாவம் செய்திருந்தால் மனம் திரும்பாமல் படுத்துக்கொள்ளதீர்..

*Come back! 
 _திரும்பி வாரும்.._ 

Abide in the relationship with the Father who said, “Be holy, because I am Holy.” 

 _நான் பரிசுத்தர் ஆதலால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்ற தகப்பனின் உறவில் நிலைத்திருங்கள்._ 

Repent before the sin destroys you. 

 *பாவம் உங்களை அழிக்கும் முன் மனந்திரும்பு* . 

Our Father's nailed loving hands are waiting to hug you again.*

 _தகப்பனுடைய ஆணி பாய்ந்த கரங்கள் உன்னை அணைக்க துடிக்கிறது_ . 

*May the Lord sanctify you!*
 _ஆண்டவர் உங்களை பரிசுத்தமாகுவராக._ 

@brAllwinJohnson

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA