ஈசாக்கின் பயபக்திக்குரியவர்.. The Fear of Isaac...🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

ஈசாக்கின் பயபக்திக்குரியவர்..

The Fear of Isaac...

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

TCBA @ சபைக்கு செய்தி

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

❤️Genesis 31:53 describes a covenant between Jacob and Laban, marked by a stone pillar and heap of stones, with each swearing by their respective gods. Laban invokes "The God of Abraham, and the God of Nahor, the God of their father," while Jacob swears by "the fear of his father Isaac". This signifies different understandings of God: Laban refers to the gods of his ancestors, possibly including idols, while Jacob swears by the God his father Isaac worshipped, Yahweh. 

ஆதியாகமம் 31:53 யாக்கோபுக்கும் லாபானுக்கும் இடையிலான உடன்படிக்கையை விவரிக்கிறது, 

அதில் ஒரு கல் தூணும் கற்களின் குவியலும் குறிக்கப்பட்டுள்ளன, ஒவ்வொருவரும் அவரவர் தெய்வங்களின் பெயரால் சத்தியம் செய்கிறார்கள். 

லாபான் "ஆபிரகாமின் தேவன், நாகோரின் தேவன், அவர்களின் பிதாக்களின் தேவன்" என்று அழைக்கிறார், அதே நேரத்தில் யாக்கோபு "தன் தந்தை ஈசாக்கின் பயத்தின்" பெயரால் சத்தியம் செய்கிறார். இது தேவனைப் பற்றிய வெவ்வேறு புரிதல்களைக் குறிக்கிறது:

 லாபான் தனது மூதாதையர்களின் கடவுள்களைக் குறிக்கிறது, இதில் சிலைகள் இருக்கலாம், அதே நேரத்தில் யாக்கோபு தனது தந்தை ஈசாக்கு வணங்கிய தேவனாகிய யாவேயின் பெயரால் சத்தியம் செய்கிறார்.

❤️இந்த வார்த்தை 
" ஈசாக்கின் பயப்பக்திக்குரியவர்"
 2 முறை வருகிறது..

❤️1. தன்னை தேவன் வெறுமையாய் அனுப்பவில்லை..

 என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர். தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று ராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் என்று சொன்னார். 
ஆதியாகமம் 31. 42

❤️2. தன்னை ஏமாற்றுகிற வர்களை நியாயம் தீர்க்கிறார்..

 ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்கள் பிதாக்களின் தேவனுமாயிருக்கிறவர் நமக்குள்ளே நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றான். அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவர்மேல் ஆணையிட்டான். ஆதியாகமம் 31.53

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

🙏நம்முடைய பய பக்தி எவ்வாறு இருக்க வேண்டும்?

🙏பக்தி வேறு பய பக்தி வேறு..

🙏Fear & Godliness 
தேவ பயமும் தேவ பக்தியும் இணைந்தது..

👌1. பரிசுத்த ஸ்தலம் 
( நம் சரீரம் ) குறித்த பய பக்தி..

என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக, நான் கர்த்தர். 
லேவியராகமம் 19. 30

என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக, நான் கர்த்தர். 
லேவியராகமம் 26. 2

:::::::::::::::::::::::::::::::::::::::::

👌2. ஜெப தியானம் குறையும் சிந்தை பய பக்தியை குறைக்கும்..

 நீர் பயபக்தியை வீணென்று சொல்லி, தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர். 
யோபு 15.4

:::::::::::::::::::::::::::::::::::::::::

👌3. பய பக்தி பூரண தொழுகைக்கு ஆதாரம்..

நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து. உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்து கொள்ளுவேன். 
சங்கீதம் 5. 7

:::::::::::::::::::::::::::::::::::::::::

👌4. துதியும் கனமும் பய பக்தியின் செயல்கள்..

 கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள், யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள், இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள். சங்கீதம் 22. 23

:::::::::::::::::::::::::::::::::::::::::

👌5. பய பக்தி அறிக்கை செய்யப்பட வேண்டும்

அதற்கு அவன்: நான் எபிரெயன். சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான். 
யோனா 1.9

:::::::::::::::::::::::::::::::::::::::::

👌6. மனைவி புருஷனிடத்தில் பய பக்தி..

 எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியிடத்திலும் அன்புகூரக்கடவன். மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள். எபேசியர் 5.33

:::::::::::::::::::::::::::::::::::::::::

👌7. பய பக்தி ஜெபத்தை கேட்கப்பண்ணும்..

அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, 
எபிரேயர் 5.7

:::::::::::::::::::::::::::::::::::::::::

👌8. ஊழியப்பாதையில் பய பக்தி அவசியம்..

விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்துத் தேவஎச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான். அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான். எபிரேயர் 11.7

:::::::::::::::::::::::::::::::::::::::::

👌9. மனைவிகளின் பய பக்தியின் ஆதாயம்..

 அந்தப்படி மனைவிகளே உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடு கூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள். 
1 பேதுரு 3:1-2

::::::::::::::::::::::::::::::::::::::::::::::

❤️சகோதரரே!!!

👌பயபக்தியின் நித்திய பலன்

 ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது, மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள். வெளிப்படுத்தினத
 விசேஷம் 11. 18

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
 50 A டூவிபுரம் 3
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA