சரீர பரிசுத்தம்... ஆராதனை ஆயத்த தியானம்



கிரியைகளறச் *சுத்திகரிப்பது* எவ்வளவு நிச்சயம்!
எபிரேயர் 9:14

 *விசுவாசிகள் சரீரத்தில் செய்கிற பாவம் ஆத்துமாவையும், ஆவியையும் பாதிக்காது என்பது நிக்கோலாய் மதத்தின் கோட்பாடு* 
.
அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு, அதை நான் வெறுக்கிறேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:15

@ பாவ சிந்தை ஆவியில் முதலாவது உருவாகி இரண்டாவது ஆத்துமாவில் உணர்வு என்ற ஊடகம் வழியாக ஊடுருவி இறுதியில் சரீரம் செய்து முடிக்கிறது.

@ அநேகர் ஆவியில் உருவாகும் பாவ சிந்தையை ஆவியினால் சிறைப்படுத்தி ஆத்துமாவுக்கு செல்லாதபடி தடுத்து சரீரத்தினால் அந்த பாவத்தை செய்யாமல் தப்புகிறார்கள்..

@ ஒரு செய்யப்பட்ட பாவம் இரு முறை செய்யப்படுகிறது என்பது ஆவிக்குரிய விஞ்ஞானம்.
SIN ONE TIME DONE IS DOUBLE TIME DONE AS PER SPIRITUAL SCIENCE..

@ விசுவாசிகளின் சரீரம் என்பது ஆவியும் ஆத்துமாவும் சரீரத்தில் அடங்காது என்ற பொருள் இல்லை ..

1. _விசுவாசிகளின் சரீரம் ஜீவ பலி._ .

 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
ரோமர் 12:1

2. _விசுவாசிகளின் சரீரம் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளப்பட வேண்டும்_ ..

உங்களில் அவனவன் தன்தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:
1 தெசலோனிக்கேயர் 4:5

3. _விசுவாசிகளின் சரீரம் நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும்_ ..

உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.
ரோமர் 6:19

4. _விசுவாசிகளின் சரீரம் துர்இச்சைகளுக்கு இடங்கொடுக்க கூடாது_ ..

துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.
ரோமர் 13:14

5. _விசுவாசிகளின் சரீரம் தங்களுடையது அல்ல.._

உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?
1 கொரிந்தியர் 6:19

6. _விசுவாசிகளின் சரீரம் பரிசுத்தமாகுதலை நாட வேண்டும்_ ..

இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.
2 கொரிந்தியர் 7:1

7. _விசுவாசிகளின் சரீரம் குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்பட வேண்டும்_ ..

சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.
1 தெசலோனிக்கேயர் 5:23

8. _விசுவாசிகளின் சரீரம் கோபம் தர்க்கம் தவிர்க்க வேண்டும்_ ..

அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம் பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்.
1 தீமோத்தேயு 2:8

 *சரீர பரிசுத்தத்திற்கேற்ற பிரதிபலன்கள்* ..

1. சரீர பரிசுத்தம் தக்க பலனுக்கு ஆதாரம்..

ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
2 கொரிந்தியர் 5.10

2. சரீர கிரியைகளுக்கு பலன் உண்டு..

ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன்.
பிலிப்பியர் 1.22

 *விசுவாசிகள் சரீரத்தை எப்படி பாதுகாக்க வேண்டும்* .

மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.
1 கொரிந்தியர் 9:27

 *ஆகையால் சகோதரரே,*

 மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல.
மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள், ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் *பிழைப்பீர்கள்* .
ரோமர் 8:12-13

ஆராதனை சிந்தை

அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
ரோமர் 12:

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை டூவிபுரம் தூத்துக்குடி
Shalomsteward1@gmail.com
Whatsapp : +91 9965050301


Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA