*"உங்களால் முடியும்" என்பது "நீங்கள் செய்ய வேண்டும்" என்ற அர்த்தம் அல்ல* ..


✨✨✨✨✨✨✨

TCBA @ ONLINE STUDY


✨✨✨✨✨✨✨

 *"உங்களால் முடியும்" 

என்பது 

"நீங்கள் செய்ய வேண்டும்" 

என்ற அர்த்தம் அல்ல* .. 

 *JUST BECAUSE "YOU CAN", DOES NOT MEAN "YOU SHOULD DO"* 

✨✨✨✨✨✨✨

தியான வசனம்:

 ♥️எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் 

1. எல்லாம் தகுதியாயிராது.

♥️ எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் 

2. எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது. 
1 கொரிந்தியர் 10:23

♥️எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும்

3. எல்லாம் தகுதியாயிராது.

♥️ எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும்

4. நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.
1 கொரிந்தியர் 6:12

ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன். 
1 கொரிந்தியர் 10:24
1 Corinthians 10:23-24 
'I have the right to do anything,' you say – but not🍅 everything is beneficial. 

'I have the right to do anything' – but not 
🍅everything is constructive. 

No one should seek their own good, but the good of others. (NIVUK) 
🤝கொரிந்து பட்டணம் இன்றைக்கு உள்ள அநேக பட்டணங்கள் போல தனித்துவ நன்னெறி விஷயத்தில் முற்போக்கு எண்ணம் கொண்ட பட்டணம். 

🤝செய்ய முடியும் என்றால் செய்வதற்கு தடை இல்லை. 

🤝ரோம அரசாங்கம் எதையெல்லாம் அனுமதிக்கிறதோ அதை எல்லாம் செய்யலாம். 

🤝இந்த அணுகுமுறை வர்த்தகத்தில் ஊழல் பெருக வழி வகுத்தது.

🤝 அடிமைத்தனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

🤝பெண்கள் உரிமைப் பொருளாக பாவிக்கப்பட்டார்கள். 

🤝ஒழுக்கக்கேடு புற சமய வழிபாட்டில் சாதாரணமானதாகக் கருதப்பட்டது. 

Corinth, like many cultures today, had a liberal approach to personal ethics. 

If something was possible then it was ok to do it. 

You could do almost whatever you liked as long as you stayed clear of the Roman authorities. 

That approach enabled corruption to thrive in business: slavery was accepted, women were often treated as property and immorality was normal in pagan worship.
 
🤝ஆனால் இந்த முற்போக்கு அணுகுமுறை சபைக்கு வரும் புதிய விசுவாசிகளுக்கு பிரச்னை கொண்டு வருகிறது. 

சிலர் விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டதை புசிப்பதில் எந்தவொரு சார்பும் இல்லை என்கிறார்கள்.

 சிலர் அதினால் தங்கள் மனசாட்சி கலக்கம் கொள்ளுகிறதாக கூறுகிறார்கள். 

🤝But those liberal
 attitudes were causing a problem as new believers came into the church. 

🤝Some had no concern about eating meat offered to idols, but others were very concerned and their consciences were troubled
 (1 Corinthians 8:7-8)

 ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. 
சிலர் இன்றைவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி, விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது. 
1 கொரிந்தியர் 8:7

 போஐனமானது நம்மைத் தேவனுக்கு உகர்ந்தவர்களாக்கமாட்டாது. என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை. 
1 கொரிந்தியர் 8:8

♥️There were three issues here..

மூன்று பிரச்சனைகள் இங்கே காணப்படுகிறது. 

♥️1. மாம்சம் ஆவிக்குரிய நிலையில் தன்னில்தானே தீட்டானது. 

 . : firstly, was the flesh itself spiritually polluted;

♥️2.இரண்டாவதாக சாத்தானோடு ஈர்க்கப்பட்ட வழிபாடு.. 

 secondly, what did the association with demonically inspired worship say about the believer's relationship with God; 

♥️3.மூன்றாவதாக எதிர்மறையான சிந்தனை எவ்வாறு மற்ற விசுவாசிகளின் விசுவாசத்தையும் சபையின் ஐக்கியத்தையும் சீர்குலைக்கிறது.. 

and thirdly how did the opposing views affect the faith of other believers and the unity of the church?
 
🍒பவுல் எந்த ஒரு விசுவாசியும் தனிமையில் வாழக்கூடாது என்பதை புரிந்து கொள்ள விரும்புகிறார்.

🍒 தேவனுடைய குடும்பத்தில் ஒருவர் சொன்னதோ அல்லது செய்கிறதோ எப்பொழுதுமே மற்றவர்களை பாதிக்கிறது. 

🍒ஒரு காரியம் சொல்லப்பட்டாலோ அல்லது செய்யப்பட்டாலோ அதை அனைவரும் செய்ய வேண்டும் என்பது கட்டாயம் அல்ல.

 🍒நமக்கு சுதந்திரம் இருந்தாலும் மற்றவர்களை இடறல் உண்டாக்காதபடி அதை செய்யாமல் இருப்பது நல்லது. 

Paul wanted them to understand that none of them could live in isolation.

 What one person in God's family did or said would always affect the others. 

Although something could be said or done, that did not mean that it should be done.

 Although we have great liberty in Christ, we often need to restrict our freedom so that we do not cause others to stumble.

 🍅🍅🍅🍅

🍒இன்னொரு வார்த்தையில் சொன்னால் கிறிஸ்தவ வாழ்க்கை நம்மை பிரியப்படுத்துகிறதில் அல்ல தேவனை கனம் பண்ணுகிறதிலும் நம்மை சுற்றியுள்ளவர்களின் வளரும் விசுவாசத்தை மதிப்பதிலும் விளங்குகிறது. 

திருச்சபை அவருடையது.

 நம்முடையது அல்ல.

 அவரில் நம் வாழ்வு அவரால் உண்டாகும் கிருபையினால் மட்டுமே. 

 In other words, the Christian life is not about pleasing ourselves but honouring God, and respecting the growing faith of others around us. 

After all, the church is His and not ours; and our life in Christ is only possible because of His grace.
 
🤝தன்னலம் உறவை கவிழ்த்துப்போடும். சபையில் நம்முடைய தன்னலம் தேவனுடைய சரீரமாகிய சபையை கிழித்துப்போடும். 

Selfishness wrecks relationships. In the church it tears the Body of Christ 
(1 Corinthians 12:25-26) . 

சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு, அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார். 
1 கொரிந்தியர் 12:25

ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும். ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும். 
1 கொரிந்தியர் 12:26

🤝பாவம் மன்னிக்கப்பட்டதினால் உண்டாகிய சுயாதீனம் என்பது பிற சகோதரர்களின் விசுவாசத்தை பாதிக்கும் உங்கள் சுய விருப்பத்தை நிறைவேற்றுதல் அல்ல.. 

Liberty, which comes from sins forgiven, is not a licence to pursue personal goals without considering how they are affecting others. 

Some church members claim their right to 'have their say' about some issue, but if their words harm their brothers and sisters in Christ they are wrong. 

Gossip, slander and party spirit are all sins for which the Israelites paid a heavy price
 (1 Corinthians 10:6-10). 

அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது. 
1 கொரிந்தியர் 10:6

ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாட எழுந்திருந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனது போல நீங்களும் ஆகாதிருங்கள். 
1 கொரிந்தியர் 10:7

அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம்பேர் விழுந்துபோனார்கள். அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக. 
1 கொரிந்தியர் 10:8

அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள். அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக. 
1 கொரிந்தியர் 10:9

அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள். அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள். 
1 கொரிந்தியர் 10:10

🤝உங்கள் சகோதரர்களின் மனசாட்சியை உங்கள் ஆவிக்குரிய சுயாதீனம் பாதிக்கக் கூடாது.. 

🤝அது கிறிஸ்துவின் சரீமாகிய சபைக்கு எதிரான குற்ற செயல்.. 

Doing something which offends your brother's conscience is not spiritual freedom; it is an offence to the body of Christ.

Word@work with shalom steward

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA