சபை கூடிவருதல் தவிர்ப்பதும் பின்வாங்குதலும்..
TCBA FRIDAY BIBLE STUDY WEEK 27
சபை கூடிவருதல் தவிர்ப்பதும் பின்வாங்குதலும்..
எபிரேயர் 6 எபிரேயர் 10 இணை ஆய்வு..
1. ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டவர்கள்..
2. மறுதலித்தவர்கள்..
பின் வாங்கிப் போனவர்கள்..
3. தேவனுடைய குமாரனை மறுபடி சிலுவையில் அறைதல்..
தேவனுடைய குமாரனை காலின் கீழ் மிதித்தல்
4. அவமானப்படுத்துதல்..
கிருபையின் ஆவியை நிந்தித்தல்..
5. புதுப்பிப்பது கூடாத காரியம்..
என் ஆத்துமா பிரியமாயிராது..
✨✨✨✨✨✨
♥️சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,
எபிரேயர் 10:26
♥️விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.
நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.
எபிரேயர் 10:38-39
✨✨✨✨✨✨
சபை கூடிவருதல் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை உள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடிவருவதைக் குறிக்கிறது.
இது பொதுவாக தேவாலயத்தில் அல்லது கூடும் இடத்திலேயோ நடைபெறும்.
அங்கு அவர்கள் இணைந்து ஜெபிக்கிறார்கள், வேத வசனங்களைப் படிக்கிறார்கள், மற்றும் ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துகிறார்கள்.
சபை கூடிவருதலின் முக்கிய நோக்கங்கள்:
ஆராதனை:
கடவுளை துதித்து, வணங்குவது.
போதனை:
வேத வசனங்களை கற்றுக்கொள்வது, அதன் மூலம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வது.
ஐக்கியம்:
ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக்கொள்வது, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது.
ஊக்குவித்தல்:
ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்தி, நம்பிக்கையை அதிகரிப்பது.
சாட்சியம்:
கிறிஸ்தவ நம்பிக்கையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவது.
சபை கூடிவருதல் என்பது கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒரு முக்கியமான பகுதியாகும்.
இது ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், ஊக்கமாகவும் இருக்க உதவுகிறது.
வேதாகமம் நாம் மற்ற விசுவாசிகளோடு தேவனை ஆராதிக்கவும், அவருடைய வார்த்தையைக் கற்றுக் கொண்டு ஆவிக்குரிய வளர்ச்சியடையவும் சபையில் கூடிவரவேண்டும் என்று கூறுகின்றது.
ஆதிதிருச்சபை
‘‘ அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்தியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்’’
(அப்போஸ்தலர் நடபடிகள் 2:42).
நாம் அந்த முறையான பக்தியையும் மாதிரியாகக் கொண்டு அதையே நாமும் செய்யவேண்டும்.
அப்போது, அவர்களுக்கென்று ஒரு சபைக்கட்டிடம் இல்லை,
ஆனாலும்
‘‘அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருந்து, வீடுகள் தோறும் அப்பம் பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி”
(அப்போஸ்தலர் நடபடிகள் 2:46).
எங்கு சந்திப்பு ஏற்பட்டாலும், விசுவாசிகள் மற்ற விசுவாசிகளோடு ஐக்கியத்திலும், தேவனுடைய வார்த்தையை போதிப்பதிலுமே விருத்தியடைகிறவர்களாயிருந்தார்கள்.
சபைக் கூடிவருதல் என்பது ஒரு ‘நல்ல ஆலோசனை’ மாத்திரம் கிடையாது.
அதுவே விசுவாசிகளைக் குறித்த தேவனுடைய சித்தம்.
எபிரெயர் 10:25 இவ்வாறாக கூறுகின்றது
‘‘ சபைக் கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திச் சொல்லக்கடவோம், நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்தி சொல்ல வேண்டும்’’.
ஆதித் திருச்சபையிலும் கூட சிலர் மற்ற விசுவாசிகளைச் சந்திக்காத கெட்ட பழக்கமுடையவர்களாயிருந்தார்கள்.
எபிரெய நிருபத்தை எழுதியவர் அது சரியான வழி இல்லையென்று கூறுகிறார்.
சபை கூடிவருதல் கொடுக்கின்ற உற்சாகம் நம் ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்று.
கடைசிக் காலத்திலும் நாம் சபைக் கூடிவருகிறதில் அர்ப்பணிப்புள்ளவர்களாயிருக்க வேண்டும்.
சபை என்ற இடத்தில் தான்
@ விசுவாசிகள் ஒருவரையொருவர் நேசிக்க முடியும்
( I யோவான் 4:12 ),
@ உற்சாகப்படுத்த முடியும்
(எபிரேயர் 3:13) ,
@ ஒருவரையொருவர் நேசிக்கவும், நற்கிரியைகள் செய்ய உந்த முடியும் (எபிரெயர்10:24),
@ ஒருவரையொருவர் கனம் பண்ண முடியும் (ரோமர் 12:10),
@ஒருவருக்கொருவர் தயவாயும் மனதுருக்கத்துடனும் இருக்க முடியும் (எபேசியர் 4:32).
ஒரு மனிதன் இரட்சிப்புக்காக இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது, அவனோ அவளோ கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கத்தினர் ஆகிறார்கள்.
(I கொரிந்தியர்12:27)
சபையாகிய சரீரம் ஒழுங்காக வேலை செய்ய வேண்டுமானால், அதன் ”அவயவங்கள்” அங்கு இருந்து வேலை செய்ய வேண்டும்.
( I கொரிந்தியர்12:14-20 )
சபைக்கு சென்று வருவது மாத்திரம் அல்ல, நமக்கு தேவன் கொடுத்திருக்கின்ற ஆவிக்குரிய வரங்களை பயன்படுத்தி மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்
(எபேசியர் 4:11-13).
ஒரு விசுவாசி முழுமையான ஆவிக்குரிய முதிர்ச்சியை அவருடைய வரங்கள் கிரியைச் செய்ய இடங்கொடாமல் பெற முடியாது. நம்மெல்லோருக்கும் மற்ற விசுவாசிகளுடைய ஒத்தாசையும் உற்சாகப்படுத்துதலும் தேவை.
(I கொரிந்தியர் 12:21-26).
இந்தக் காரணங்களுக்காகவும், இதைவிட அதிகமானவைகளுக் காகவும், சபைக் கூடிவருதல், பங்கேற்பு மற்றும் ஐக்கியம் ஆகியவை ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் நிரந்தரத் தன்மையாக இருக்க வேண்டும்.
ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் அவன் தேவனை ஆராதிக்கவும், அவருடைய வார்த்தையை பெற்றுக் கொள்ளவும், மற்ற விசுவாசிகளோடு ஐக்கியங்கொள்ளவும் விருப்பமுள்ளவனாயிருக்க வேண்டும்.
இயேசுவே சபைக்கு மூலைக்கல்லாயிருக்கிறார்..
( I பேதுரு), நாமோ ‘‘ ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசு கிறிஸ்து மூலமாய் தேவனுக்குப்பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்கும் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டு வருகிறீர்கள்’’
( I பேதுரு 2:5)
தேவனுடைய ‘ஆவிக்குரிய வீட்டின் கட்டுமானப் பொருட்களாக இருக்கிற நாம், ஒருவரோடொருவர் தொடர்புடையவர்களாயிருக்கிறோம், அந்தத் தொடர்பு சபையாகிய நாம் சபைக்குச் செல்லும்போது வெளிப்படையாகத் தெரிகின்றது..
♥️சபை கூடி வருதல் நியாயப்பிரமாண காலத்தில்...
நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டியது என்னவென்றால்: சபைகூடிவந்து பரிசுத்த நாட்களாக ஆசரிக்கும்படி, நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகை நாட்களாவன:
லேவியராகமம் 23. 2
சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் கூறவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன:
லேவியராகமம் 23.4
நீங்கள் அந்தந்த நாளுக்குத்தக்கதாய்க் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலி, போஜனபலி, இரத்தபலி, பானபலி, முதலானவைகளைச் செலுத்தும்படி சபைகூடிவந்து, பரிசுத்தமாய் ஆசரிப்பதற்காக நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகைகள் இவைகளே.
லேவியராகமம் 23.38
முன்னே சபைகூடிவந்த நாளில் கர்த்தர் மலையில் அக்கினி நடுவிலிருந்து உங்களுக்கு விளம்பின பத்துக் கற்பனைகளையும் அவர் முன் எழுதியிருந்தபிரகாரம் அந்தப் பலகைகளில் எழுதி, அவைகளை என்னிடத்தில் தந்தார்.
உபாகமம் 10.4
அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார், சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதியிருந்தது.
உபாகமம் 9.10
சபை கூடி வருதல் கிருபையின் காலத்தில்.
எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனுஷரை உங்களிடத்திற்கு அனுப்புகிறது ஒருமனப்பட்டுக் கூடின எங்களுக்கு நலமாகக் கண்டது.
அப்போஸ்தலர் 15.26
வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான். அப்போஸ்தலர் 20.7
அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள். அகாயாவிலே கிறிஸ்துவுக்கு முதற்பலனாகிய என் பிரியமான எப்பனெத்தை வாழ்த்துங்கள்.
ரோமர் 16.5
நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில்,
1 கொரிந்தியர் 5.4
உங்களைப் புகழாமல் இதைக்குறித்து உங்களுக்கு கட்டளைகொடுக்கிறேன். நீங்கள் கூடிவருதல் நன்மைக்கேதுவாயிராமல், தீமைக்கேதுவாயிருக்கிறது.
1 கொரிந்தியர் 11.17
ஆகையால், என் சகோதரரே, நீங்கள் போஐனம்பண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்.
1 கொரிந்தியர் 11.33
நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியாயிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம்பண்ணுவேன்.
1 கொரிந்தியர் 11.34
நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான். ஒருவன் போதகம்பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம்பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது.
1 கொரிந்தியர் 14. 26
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment