தேவன் விரும்பாத குணங்கள்.. series 01♥️♥️♥️♥️♥️♥️♥️இறுமாப்பு. PUFFING UP



♥️♥️♥️♥️♥️♥️♥️

தேவன் விரும்பாத குணங்கள்.. series 01

♥️♥️♥️♥️♥️♥️♥️

இறுமாப்பு

PUFFING UP

♥️♥️♥️♥️♥️♥️♥️

இறுமாப்பு என்றால் கர்வம், பெருமை, தலைக்கனம் போன்ற அர்த்தங்களைக் கொண்ட சொல். 

இது செருக்குடன், பெருமிதத்துடன் பேசுவதையும் குறிக்கும். 

இறுமாப்பு ஒருவரின் சுயத்தை மதிப்பு வைத்து, பிறரை விட தங்களை உயர்ந்தவர் என்று கருதுவது ஆகும்.

 இது ஒரு எதிர்மறையான பண்பாகும்,

 ஏனெனில் இது மற்றவர்களுடன் நல்ல உறவுகளைப் பாதிக்கலாம்.


இதன் பொருள்:
கர்வம் (Pride):
தங்களை மற்றவர்களை விட உயர்ந்தவர் என்று கருதுதல்.

பெருமை (Haughtiness):

பிறரை மதிக்காமல், தங்களை மட்டுமே மதிக்க நினைப்பது.

தலைக்கனம் (Arrogance):
தங்களை மிகச் சிறப்புமிக்கவர் என்று கருதி, பிறர் தம்மை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்தல்.

இறுமாப்பு என்பது ஒருவரின் மனநிலை மற்றும் செயல்களைப் பிரதிபலிக்கும் ஒரு சொல்லாகும்..

♥️♥️♥️♥️♥️♥️♥️

வேதம் இறுமாப்பு குறித்து என்ன கூறுகிறது?

இறுமா ப்பு...
தேவன் விரும்பாத குணங்களில் ஒன்று

𝟭:::::::
இறுமாப்புள்ள கழுத்து..


 உங்கள் கொம்பை உயரமாய் உயர்த்தாதிருங்கள், இறுமாப்புள்ள கழுத்துடையவர்களாய்ப் பேசாதிருங்கள். சங்கீதம் 75. 𝟱

2:::::::::::::
இறுமாப்புள்ள இருதயம். 

கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல, பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை. சங்கீதம் 131. 1

அழிவு வருமுன் மனுஷருடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்: மேன்மைக்கு முன்னானது தாழ்மை. நீதிமொழிகள் 18. 12

3::::::::::::::
இறுமாப்புள்ள அறிவு..

 விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்டவைகளைக் குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்.
 1 கொரிந்தியர் 8. 1

4:::::::::::::::
இறுமாப்பான சிந்தை..

இவ்வுலகத்திலே ஜசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஜசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும், 
1 தீமோத்தேயு 6.17

✨✨✨✨✨✨✨

இறுமாப்பை எவ்வாறு மேற்கொள்ள முடியும்?

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. அன்புக்கு பொறாமையில்லை. அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது. 
1 கொரிந்தியர் 13. 4

Charity suffereth long, and is kind; charity envieth not; charity vaunteth not itself, is not puffed up, 
1 Corinthians 13:4

✨✨✨✨✨✨✨

🌺சபை மூப்பர்கள் தவிர்க்க வேண்டிய முக்கிய நடத்தை..

 சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள். 
1 பேதுரு 5. 3

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA