LETTER OF LAW OR LOVE OF LAW. எழுத்தின் பிரமாணம் அல்லது அன்பின் பிரமாணம் எது சுலபம்?✨✨✨✨✨✨✨


SHALOM STEWARD 
MORNING THOUGHT 

✨✨✨✨✨✨✨

LETTER OF LAW
OR
LOVE OF LAW

எழுத்தின் பிரமாணம் 
அல்லது 
அன்பின் பிரமாணம் 

எது சுலபம்?

✨✨✨✨✨✨✨

பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்ட எழுத்தின் பிரமாணம்..


நான் ( கிறிஸ்து ) உங்களுக்கு சொல்லுகிறேன் அன்பின் பிரமாணம்..

✨✨✨✨✨✨✨

♥️1. அன்பின் பிரமாணம் சகோதரனை கோபிக்காது..

கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 
மத்தேயு 5:21

 *நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்,* தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான், தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான், மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான். 
மத்தேயு 5:22

::::::::::::::::::::::::::::::::

♥️2. அன்பின் பிரமாணம் பிறர் மனை நயத்தல் தவிர்க்கும்..


விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 
மத்தேயு 5:27

 *நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்* , ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிறஎவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. 
மத்தேயு 5:28

:::::::::::::::::::::::::::::::::

♥️3. அன்பின் பிரமாணம் திருமண முறிவு செய்யாது..


தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும், தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுக்கக்கடவன் என்று ( பூர்வத்தாருக்கு ) உரைக்கப்பட்டது. 
மத்தேயு 5:31

 *நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்* ,வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான், அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான். 
மத்தேயு 5:32

:::::::::::::::::::::::::::::::::

♥️4. அன்பின் பிரமாணம் உள்ளதை உள்ளதென்று சொல்லும்..


அன்றியும், பொய்யாணையிடாமல்,உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச் செலுத்துவாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 
மத்தேயு 5:33

 *நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்,* பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம், வானத்தின்பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம். 
மத்தேயு 5:34

பூமியின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது அவருடைய பாதபடி, எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். 
மத்தேயு 5:35

உன் சிரசின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே. 
மத்தேயு 5:36

உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள், இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். 
மத்தேயு 5:37

:::::::::::::::::::::::::::::::::

♥️5. அன்பின் பிரமாணம் பழி வாங்காது..


கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, ( பூர்வத்தாருக்கு ) உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 
மத்தேயு 5:38

 *நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்,* தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம், ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு. 
மத்தேயு 5:39

உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. 
மத்தேயு 5:40

ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம்வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ. 
மத்தேயு 5:41

உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே. 
மத்தேயு 5:42

::::::::::::::::::::::::::::::::::

♥️6. அன்பின் பிரமாணம் சத்துருவை சினேகிக்கும்..


உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று
( பூர்வத்தாருக்கு )
 சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 
மத்தேயு 5:43

 *நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்,* உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். 
மத்தேயு 5:44

:::::::::::::::::::::::::::::::::::

♥️சகோதரரே...

எழுத்தின் பிரமாணம் கடினமா? அல்லது அன்பின் பிரமாணம் கடினமா?

உண்மையிலே அன்பின் பிரமாணம் தான் கடினம்..ஆனால் அன்பின் பிரமாணம் சுலபமாக கடைபிடிக்க கிறிஸ்து தம் ஜீவனை கொடுத்து நமக்கு இந்த அன்பின் பிரமாணத்தை கடைபிடிக்க 3 வளங்களை அளவில்லாமல் தந்திருக்கிறார்..

🍒1. கர்த்தருடைய வார்த்தை.. 
சங்கீதம் 119:96
🍒2. கர்த்தருடைய ஆவியானவர்.. யாக்கோபு 4:5
🍒3. கர்த்தருடைய கிருபை..
 யாக்கோபு 4:6

மாத்திரமல்ல..

ஆனால் எழுத்தின் பிரமாணம் கடினம் என்றாலும் வேதம் கூறுகிறது..

இதை கடைபிடிக்க அல்லது பூரணமாக நிறைவேற்ற பிராமணம் தன் உயிரை கொடுக்கவில்லையே..

அப்படியானால், நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே. உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே. 
கலாத்தியர் 3:21

✨✨✨✨✨✨✨

 *நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்....* 

மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்,மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும்,அவர்கள் தூஷிக்கும் எந்தத்தூஷணங்களும் அவர்களுக்கு மன்னிக்கப்படும். 
மாற்கு 3:28

ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில்,அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார். 
மாற்கு 3:29

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA