ஆராதனை தியானம் ✨✨✨✨✨✨மேவிபோசேத் - தாவீது விசுவாசிகள் -கிறிஸ்து.. நிழல்..


கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
 தூத்துக்குடி 3

✨✨✨✨✨✨

ஆராதனை தியானம் 

✨✨✨✨✨✨

மேவிபோசேத் - தாவீது 

விசுவாசிகள் -
கிறிஸ்து..

 நிழல்..

✨✨✨✨✨✨

ஆராதனை தியானத்துக்கு நாம் பொதுவாக சிந்திக்கும் வேத பகுதி..

2 சாமுவேல் 9

இங்கே 2 முக்கிய பாத்திரங்கள் தாவீது மேவிபோசேத் 

தாவீது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நிழல் 
மேவி மீட்கப்பட்ட விசுவாசிகளுக்கு நிழல் 

✨✨✨✨✨✨✨

1. அனைத்தையும் இழந்த மேவி..

யோனத்தான் நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான். 
2 சாமுவேல் 9:1

அப்பொழுது சவுலின் வீட்டுவேலைக்காரனாகிய சீபா என்னும் பேருள்ளவனைத் தாவீதினிடத்தில் அழைத்துவந்தார்கள். ராஜா அவனைப் பார்த்து: நீதானா சீபா என்று கேட்டான். அவன் அடியேன் தான் என்றான். 
2 சாமுவேல் 9:2

அப்பொழுது ராஜா: தேவன் நிமித்தம் நான் சவுலினு குடும்பத்தாருக்குத் தயை செய்யும்படி யாதொருவன் இன்னும் மீதியாயிருக்கிறானா என்று கேட்டதற்கு சீபா ராஜாவைப் பார்த்து: இன்னும் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு குமாரன் இருக்கிறான் என்றான். 
2 சாமுவேல் 9:3

அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இதோ, அவன் லோதேபாரிலே அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டில் இருக்கிறான் என்றான். 
2 சாமுவேல் 9:4

✨✨✨✨✨✨

இந்த பகுதியில் தியானத்திற்கு :

@ யோனத்தான் நிமித்தம் மேவிக்கு அழைப்பு ..

நமக்கு யார் நிமித்தம் இந்த அழைப்பு வந்தது?

@ நாம் பாவிகளையிருக்கை யில் 

@ நாம் சத்துருக்களையிருக்கையில் 

@ நாம் பெலனற்றவர்களாக இருக்கையில்.. ரோமர் 8

@ அப்படியானால் யார் நிமித்தம்?

 பிள்ளைகளே, அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.
1 யோவான் 2. 12

 கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது, உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும்.
சங்கீதம் 25.11

✨✨✨✨✨✨

2. தூரப்படுத்தப்பட்ட மேவி..

அப்பொழுது தாவீதுராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டிலிருந்து அழைப்பித்தான். 
2 சாமுவேல் 9:5

@ லோதேபார்.. வனாந்திரம்..
எருசலேமில் ராஜா அரண்மனைக்கு தூரப்படுத்தப்பட்டான்..

✨✨✨✨✨✨✨

3. அழைக்கப்பட்ட மேவி..

சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதினிடத்தில் வந்தபோது, முகங்குப்புற விழுந்து வணங்கினான். அப்பொழுது தாவீது மேவிபோசேத்தே என்றான். அவன் இதோ, அடியேன் என்றான். 
2 சாமுவேல் 9:6

✨✨✨✨✨✨✨

4. இழந்த அனைத்தையும் பெற்றுக்கொண்ட மேவி..

தாவீது அவனைப் பார்த்து: நீ பயப்படாதே. உன் தகப்பனாகிய யோனத்தான் நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்குத் தயை செய்து, உன் தகப்பனாகிய சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன். 

✨✨✨✨✨✨✨

5. ராஜாவோடு நித்தம் பந்தியிருக்க நியமிக்கப்பட்ட மேவி..

நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய் என்றான். 
2 சாமுவேல் 9:7

@ என் பந்தியில்..

@ ராஜா போஜனம் பண்ணும் அதே வேளையில் அதே போஜனம் ராஜா இல்லாத அநேக பந்தியில் பரிமாறப்படும்..

@ ஆனால் மேவி ராஜாவுடன் அதே மேஜையில் பந்தி..

✨✨✨✨✨✨✨

6. நன்றி நிறைந்த மேவி.. 

அப்பொழுது அவன் அவனை வணங்கி: செத்த நாயைப்போல இருக்கிற என்னை நீர் நோக்கிப்பார்க்கிறதற்கு, உமது அடியான் எம்மாத்திரம் என்றான். 
2 சாமுவேல் 9:8

✨✨✨✨✨✨✨

7. உயிர்ப்பிக்கப்பட்ட மேவி..

ராஜா சவுலின் வேலைக்காரனாகிய சீபாவை அழைப்பித்து, அவனை நோக்கி: சவுலுக்கும் அவர் வீட்டார் எல்லாருக்கும் இருந்த யாவையும் உன் எஜமானுடைய குமாரனுக்குக் கொடுத்தேன். 
2 சாமுவேல் 9:9

ஆகையால் நீ உன் குமாரரையும் உன் வேலைக்காரரையும் கூட்டிக்கொண்டு, உன் எஜமானுடைய குமாரன் புசிக்க அப்பமுண்டாகும்படி, அந்த நிலத்தைப் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்ப்பாயாக. 

✨✨✨✨✨✨✨

8. ராஜ குமார் அந்தஸ்துக்கு உயர்ந்த மேவி..

உன் எஜமானுடைய குமாரன் மேவிபோசேத் நித்தம் என் பந்தியிலே அப்பம் புசிப்பான் என்றான். சீபாவுக்குப் பதினைந்து குமாரரும் இருபது வேலைக்காரரும் இருந்தார்கள். 
2 சாமுவேல் 9:10

சீபா, ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் உமது அடியானாகிய நான் செய்வேன் என்றான். ராஜ குமாரரில் ஒருவனைப் போல, மேவிபோசேத் என் பந்தியிலே அசனம் பண்ணுவான் என்று ராஜா சொன்னான். 
2 சாமுவேல் 9:11

மேவிபோசேத்திற்கு மீகா என்னும் பேருள்ள சிறுவனாகிய ஒரு குமாரன் இருந்தான். சீபாவின் வீட்டிலே குடியிருந்த யாவரும் மேவிபோசேத்திற்கு வேலைக்காரராயிருந்தார்கள். 
2 சாமுவேல் 9:12

✨✨✨✨✨✨✨

9. எருசலேம் தேவனுடைய வீட்டில் வசிக்கும் மேவி...

மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் நித்தம் அசனம்பண்ணுகிறவனாயிருந்த படியினால், எருசலேமிலே குடியிருந்தான்.

✨✨✨✨✨✨✨

10. நித்திய மீட்புக்கு காத்திருந்த மேவி..

 அவனுக்கு இரண்டுகாலும் முடமாயிருந்தது. 
2 சாமுவேல் 9:13

✨✨✨✨✨✨✨

https://youtu.be/k2HIWKHi3Oc?si=7KwsOxCYU3yn0xd9

எப்பாவ மில்லாமலும் நான்
     வாழ்த்தல் செய்வேன்..


1. என் இயேசுவே உம்மையே
     நான் நேசிக்கிறேன்
  வேறெந்த வீண் வாழ்வையும்
     நாடாதிருப்பேன்
  உம்மாலே மா நன்மையை
     நான் கண்டடைந்தேன்
  என் நாதா மென்மேலும்
     உம்மை நேசிக்கிறேன்

2. இப்பாவியின் பேரில் முந்தி
     நேசம் வைத்தீர்
  நீர் ப்ராணத் தியாகஞ் செய்து
     மீட்டுக்கொண்டீர்
  முட் கிரீடம் தீங்காயமுந்
     தியானிக்கிறேன்
  என் நாதா மென்மேலும்
     உம்மை நேசிக்கிறேன்.

3. பேரன்பின் சொரூபி உம்மைப்
     போற்றுகிறேன்
  எப்போதும் உம்மண்டை
     தங்க வாஞ்சிக்கிறேன்
  என் ஜீவன் போனாலுங்கூட
     நீங்க மாட்டேன்
  என் நாதா மென்மேலும்
     உம்மை நேசிக்கிறேன்.

4. பேரின்பம் மேலோகத்தில்
     ஆனந்தங் கொள்வேன்
  நீடுழி உம்முகம் கண்டு 
     ஸ்தோத்தரிப்பேன்
  எப்பாவ மில்லாமலும் நான்
     வாழ்த்தல் செய்வேன்
  என் நாதா மென்மேலும்
     உம்மை நேசிக்கிறேன்.

✨✨✨✨✨✨✨


TCBA TUTICORIN 3

Shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA