✨✨✨✨✨✨ மனப்பூர்வம் WHOLE HEARTEDNESS
✨✨✨✨✨
SHALOM STEWARD
சந்தியா சிந்தனை
✨✨✨✨✨✨
மனப்பூர்வம்
WHOLE HEARTEDNESS
✨✨✨✨✨✨
🍒 Wholeheartedness refers to the quality of being completely sincere, enthusiastic, and committed in one's actions and feelings.
It embodies a genuine and earnest dedication, free from reservations or half-heartedness.
இது ஒரு உண்மையான மற்றும் தீவிரமான, எந்த தயக்கமும் அல்லது அரை மனப்பான்மையும் இல்லாத அர்ப்பணிப்பை உள்ளடக்கியது,
Here's a more detailed breakdown:
🍒 Sincerity and Authenticity:
நேர்மை மற்றும் நம்பகத்தன்மை
Wholeheartedness involves being genuine and true to oneself, expressing thoughts and feelings without hiding or being insincere.
🍒 Enthusiasm and Passion:
உற்சாகமும் ஆர்வமும்:
It demonstrates a strong sense of dedication and excitement about what one is doing, putting one's heart and soul into the endeavor.
🍒 Commitment and Dedication:
அர்ப்பணிப்பு மற்றும் ஒப்புவித்தல்:
Wholeheartedness shows a willingness to fully engage and invest in something, regardless of the challenges or obstacles.
🍒 Integrity and Honesty:
நேர்மை மற்றும் உத்தமம்:
It involves acting with integrity and honesty, both internally and externally, ensuring that one's actions align with one's values.
🍒 Embracing Vulnerability:
பாதிப்பைத் தழுவுதல்:
Wholeheartedness also includes the ability to be vulnerable and to show one's true self, even when facing difficulties or imperfections
✨✨✨✨✨✨
♥️ மனப்பூர்வம் என்பது தேவனுடைய குணாதிசயங்களில் ஒன்று..
♥️ நேர்மறை எதிர்மறை இரண்டிலும் தேவனுடைய இந்த குணாதிசயங்களை தியானிக்கலாம்..
♥️ மனப்பூர்வமாய் சஞ்சலப்படுத்துகிறதில்லை...மனப்பூர்வமாய் சிநேகிப்பார்.
அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை.
புலம்பல் 3.33
நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன், அவர்களை மனப்பூர்வமாய் சிநேகிப்பேன்,
என் கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று.
ஓசியா 14. 4
✨✨✨✨✨✨
🌺 நாம் எவ்வாறு மனப்பூர்வமாய் தேவனுடைய காரியங்களில் ஈடுபட வேண்டும்...
DON'T S..
🍅 தேவன் விரும்பாத மனப்பூர்வம்...
🍅 மனப்பூர்வமாய் மன்னியாதது.....
நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.
மத்தேயு 18. 35
🍅 மனப்பூர்வமாய் பாவம் செய்கிறது...
சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், எபிரேயர் 10. 26
✨✨✨✨✨✨✨
🌺 தேவன் விரும்பும் மனப்பூர்வம்...
DO'S
♥️1. மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பது...
இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு. மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக. யாத்திராகமம் 25. 2
:::::::::::::::::::::::::::::::::::
♥️2. மனப்பூர்வமாய் ஸ்தோத்திரபலியைச் செலுத்துவது..
கர்த்தருக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்துவீர்களானால் மனப்பூர்வமாய் அதைச் செலுத்துவீர்களாக. லேவியராகமம் 22. 29
:::::::::::::::::::::::::::::::::::
♥️3. மனப்பூர்வமாய் தங்களை ஒப்புக்கொடுப்பது...
கர்த்தர் இஸ்ரவேலுக்காக நீதியைச் சரிக்கட்டினதினிமித்தமும், ஜனங்கள் மனப்பூர்வமாய்த் தங்களை ஒப்புக்கொடுத்ததினிமித்தமும் அவரை ஸ்தோத்திரியுங்கள். நியாயாதிபதிகள் 5. 2
ஜனங்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுத்த இஸ்ரவேலின் அதிபதிகளை என் இருதயம் நாடுகிறது. கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். நியாயாதிபதிகள் 5.9
:::::::::::::::::::::::::::::::::::
♥️4. மனப்பூர்வமாய் கொடுக்கும் திராணி உண்டாவது..
இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது, உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்.
1 நாளாகமம் 29.14
:::::::::::::::::::::::::::::::::::
♥️ 5. மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிகிறது..
முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.
ரோமர் 6. 17
:::::::::::::::::::::::::::::::::::
♥️ 6. மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தம் செய்வது..
மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்.
எபேசியர் 6. 6
:::::::::::::::::::::::::::::::::::
♥️ 7. எதைச் செய்தாலும் மனப்பூர்வமாய்ச் செய்வது..
எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். கொலோசெயர் 3. 24
:::::::::::::::::::::::::::::::::::
♥️ 8. மனப்பூர்வமாய் நன்மை செய்வது..
ஆனாலும் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினால்ல, மனப்பூர்வமாய்ச் செய்யத்தக்கதாக, நான் உம்முடைய சம்மதியில்லாமல் ஒன்றும் செய்ய எனக்கு மனதில்லை.
பிலேமோன் 1. 14
✨✨✨✨✨✨✨
♥️ பொறுப்புள்ள சபை சகோதரர்களே..
மூப்பர்களே...
மனப்பூர்வமாய் சபையை கண்காணியுங்கள்..
உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.
அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படுத்தும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள்.
1 பேதுரு 5:2-4
✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment