கூடாரமும் ஆராதனை முறைமைகளும். TABERNACLE AND REGULATIONS OF WORSHIP


⌛⌛⌛⌛⌛⌛⌛

SHALOM STEWARD
WORSHIP THOUGHT 

⌛⌛⌛⌛⌛⌛⌛

கூடாரமும் ஆராதனை முறைமைகளும்


TABERNACLE AND REGULATIONS OF WORSHIP 

⌛⌛⌛⌛⌛⌛⌛

கூடாரம் என்பது சரீரம்..

வேதம் நம் சரீரத்தையும் இயேசு கிறிஸ்துவின் சரீரத்தையும் சரீரம் என்றே கூறுகிறது..

இதில் தன்னில் தாமே என்ன வித்தியாசம் என்றால்..

📒நம் சரீரம்:
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு..
TENT ⛺ THAT IS OUR EARTHLY HOME 
2 கொரி 5:1

📒கிறிஸ்துவின் சரீரம்:
பெரிதும் உத்தமமுமான கூடாரம்..
GREATER AND MORE PERFECT TENT 🎪 
எபி 9:11

⌛⌛⌛⌛⌛⌛⌛⌛

ஆராதனை செய்கிறவர்கள்...

ஆராதனை முறைமைகள்..

இந்த இரண்டு அம்சங்களும் கூடாரத்தோடு தொடர்பு கொண்டது என்பதை எபிரேய ஆக்கியோன் விளக்குகிறார்..

🕯️1. ஆராதனை செய்கிறவர்கள்...

@@@ பூரணப்படுத்தக்கூடாத
மனச்சாட்சி...

 அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது. அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம்.
 எபிரேயர் 9:9

@@@
பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி..

 பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா?
 எபிரேயர் 10:2

@@@
நாடோறும் ஆராதனை செய்ய வேண்டும்..

அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான்.
 எபிரேயர் 10:11

@@@
புசிக்கிறதற்குக் கூடாரத்தில் அதிகாரமில்லை.

நமக்கு ஒரு பலீபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை.
 எபிரேயர் 13:10

@@@
பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்ய கிருபை வேண்டும்..

ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். எபிரேயர் 12:28

⌛⌛⌛⌛⌛⌛⌛

🕯️2. ஆராதனை முறைமைகள்..

@@@
ஆராதனை செய்கிறவர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றியே ஆக வேண்டும்.

அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்கேற்ற முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமும் உடையதாயிருந்தது. எபிரேயர் 9.1

இவைகள் இவ்விதமாய் ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்கு முதலாங்கூடாரத்திலே நித்தமும் பிரவேசிப்பார்கள். எபிரேயர் 9.6

⌛⌛⌛⌛⌛⌛⌛

🕯️ஆராதனை செய்கிறவர்கள்...
ஆராதனை முறைமைகள்..
இந்த இரண்டு அம்சங்களும் கூடாரத்தோடு ( அதாவது சரீரத்தோடு) தொடர்பு கொண்டது என்பதை எபிரேய ஆக்கியோன் எவ்வாறு விளக்குகிறார்..
கவனியுங்கள்..

கூடாரம் :::::: சரீரம் 

அமைப்பில் மாத்திரம் அல்ல...செயல்பாடுகளிலும் ஒன்றே..

🙏கூடாரம் அமைப்பு..
1. பிரகாரம் 
2. பரிசுத்த ஸ்தலம் 
3. மகா பரிசுத்த ஸ்தலம் 

🙏சரீரம் அமைப்பு:
1. சரீரம் 
2. ஆத்துமா 
3. ஆவி 

கவனியுங்கள்...

✒️சரீரம் தனித்து இருந்தால் அது ஜடம்..
ஆகவே சரீரம் என்று எங்கெல்லாம் வேதம் குறிப்பிடுகிறதோ அங்கெல்லாம் ஆத்துமாவும் ஆவியும் இணைந்தே செயல்படுகிறது.

✒️சரீரம் ஆத்துமாவையும் ஆவியையும் சார்ந்தே இயங்கும்..

ஆவியில் இரட்சிக்கப்பட்டோம்.. 
Past tense 

ஆத்துமாவில் இரட்சிக்கப்படுகிறோம்..
Present continuous tense..

சரீரத்தில் இரட்சிப்பு இனி பூரணம் அடைய போகிறது..

இந்த சத்தியங்கள் திரித்துவம் எப்படி பிரித்து வியாக்கியானம் செய்ய முடியாதோ அதே போல பிரித்து வியாக்கியானம் செய்ய முடியாது..

🕯️ஆனாலும்...
நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் இனி வருகிறது..

மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.
அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிறநம்பிக்கையோடே
அந்தச் சிருஷ்டியானது சுயஇஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது. அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம். 
ரோமர் 8:19-23

:::::::::::::::::::::::::::::::::::::::::

⏰கிறிஸ்து தன் சரீரரத்தில் ( கூடாரத்தில் ) நம் இரட்சிப்பின் முழு பங்கையும் நிறைவேற்றினார்..

கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின் வழியாகவும், 
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். 
எபிரேயர் 9:11-12

::::::::::::::::::::::::::::::::::::::::

⏰ஆராதனை செய்கிறவர்கள் தங்கள் சரீரத்தினால் ( கூடாரத்தினால் ) கர்த்தரை கனப்படுத்த வேண்டும்..

அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. 
ரோமர் 12:1

நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும். 
பிலிப்பியர் 1:20

🕯️நம்முடைய கூடாரமாகிய சரீரத்தில் உள்ள ஆத்துமாவாகிய பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கும் பொருட்கள்..

எப்படியெனில், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டடிருந்தது. அதின் முந்தின பாகத்தில்

 ⌛குத்துவிளக்கும் 
( கிறிஸ்துவுடன் பிரகாசம்)

 🕯️மேஜையும்,
( கிறிஸ்துவுடன் ஐக்கியம்)

 🕯️தேவசமுகத்தப்பங்களும் 
( கிறிஸ்துவுடன் பந்தி)

இருந்தன. அது பரிசுத்த ஸ்தலமென்னப்படும். 
எபிரேயர் 9:2

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

🕯️ நம்முடைய ஆவியாகிய மகா பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கும் பொருட்கள்..

இரண்டாந் திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரம் இருந்தது. 
எபிரேயர் 9:3

அதிலே பொன்னாற்செய்த தூபகலசமும், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன. அந்தப் பெட்டியிலே 

⌛மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், 
( கர்த்தருடைய வார்த்தை vs நம்முடைய முறுமுறுப்பு )


⌛ஆரோனுடைய தளிர்த்த கோலும்,
( கர்த்தருடைய தெரிந்து கொள்ளுதல் vs நம்முடைய கலகம்)


⌛ உடன்படிக்கையின் கற்பலகைகளும் 
( கர்த்தருடைய நீதிகரணம் vs நம்முடைய கீழ்ப்படியாமை )


இருந்தன. 
எபிரேயர் 9:4

🕯️ ஆராதனை செய்கிறவர்கள் கடந்த வாரம் முறுமுறுப்பு, கலகம், கீழ்ப்படியாமை தம்மில் ஆராய்ந்து பார்க்கும் போது இருந்தால்...

🕯️ இங்கே கிருபாசனம் வைக்கப்பட்டிருக்கிறது.. 

அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன. இவைகளைக் குறித்து விவரமாய்ப்பேச இப்பொழுது சமயமில்லை. 
எபிரேயர் 9:5

✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

🕯️ஆராதனை முறைமை குறித்து அப் பவுல் என்ன எழுதுகிறார்..சிந்தியுங்கள்..

கிறிஸ்துவின் ( கூடாரம் ) சரீரத்தைக் குறித்த நிதானம் அவசியம்...

என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஐனபானம்பண்ணுகிறவன், *கர்த்தருடைய சரீரம்* இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஐனபானம்பண்ணுகிறான். 
1 கொரிந்தியர் 11:29

நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். 
1 கொரிந்தியர் 11:31

🕯️என்ன நிதானம்?
What Discerns?

1. கிறிஸ்துவின் நிஜ சரீரம் ( real body )

2. கிறிஸ்துவின் மணவாட்டியாகிய சரீரம் ( the church)

3. கிறிஸ்துவின் உடைமையாகிய நம் சரீரம்..( our body )

🕯️ஆராதனை செய்கிறவர்கள் இந்த சிந்தையில் நிறைந்து அப்பம் பிட்குதலில் பங்கு பெறுவோம்..

உங்கள் சரீரமானது ( கூடாரம் ) நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? 
1 கொரிந்தியர் 6:19

கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே. ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் 
( கூடாரம் ) உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். 
1 கொரிந்தியர் 6:20

📚தேவன் தம்மை ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கிறவர்களை கனம் பண்ணுகிறார்...

📚📚📚📚📚📚📚📚

TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628003

shalomjjj@gmail.com 
Whatsapp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

📚📚📚📚📚📚📚📚

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA