SHALOM STEWARDசந்தியா சிந்தனை✨✨✨✨✨✨"GAIN TO DIE". சாவு ஆதாயம்..


✨✨✨✨✨✨

SHALOM STEWARD
சந்தியா சிந்தனை

✨✨✨✨✨✨

"GAIN TO DIE"

சாவு ஆதாயம்..

✨✨✨✨✨

கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். 
பிலிப்பியர் 1:21

For to me to live is Christ, and to die is gain

✨✨✨✨✨

✨ ஆதாயங்கள் என்ன?

✨ what are all gains?


♥️1. அதிக நன்மையாயிருக்கும். 

FOR THAT IS FAR BETTER..

ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன். தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும். 
பிலிப்பியர் 1:23

::::::::::::::::::::::::::::::::::

♥️2. நம் ஆவிகள் பூரணமாக்கப்படும்..

OUR SPIRITS WILL BE MADE PERFECT...

பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும், 
எபிரேயர் 12:23

::::::::::::::::::::::::::::::::::

♥️3. இவ்வுலகத்தின் பாடுகளில் இருந்து விடுதலை ஆகிறோம்..

WE WILL BE RELIEVED OF THE PAIN OF TJIS WORLD..

அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள், இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய். 
லூக்கா 16:25

::::::::::::::::::::::::::::::::::

♥️4. இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்கிற நிலைக்குள் போகிறோம்..

WE WILL BE GIVEN PROFOUND REST IN OUR SOUL..

அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது, அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. 
வெளிப்படுத்தினத விசேஷம் 6:11

::::::::::::::::::::::::::::::::::

♥️5. கர்த்தரிடத்தில் குடியிருப்போம்..

AT HOME WITH THE LORD..

நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம். 
2 கொரிந்தியர் 5:8

::::::::::::::::::::::::::::::::::

♥️6. கர்த்தருடனேகூட இருப்போம். 

WE SHALL ALWAYS BE WITH THE LORD..

பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். 
1 தெசலோனிக்கேயர் 4:17

::::::::::::::::::::::::::::::::::

♥️சகோதரரே...

❤️‍🔥விசுவாசிகள் வெறும் நிகழ்காலத்துக்கு உரியவர்கள் அல்ல..

 எதிர்பார்ப்பு உண்டு..

 காத்து தவிக்கும் அனுபவம் உண்டு...

 இவை அனைத்தும் ஒரு நபரின் வருகையுடன் தொடர்புடையது...

 அவர்தான் சபையின் மணவாளன் கிறிஸ்து.

♥️ வெளிப்பட காத்திருக்கிறோம்
1 கொரி 1:7

♥️குமாரனாகிய இயேசு வர எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்
1 தெச 1:10

♥️ இரட்சகர் வர எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்
பிலி 3:20

♥️விசுவாசத்தினால் நம்பிக்கையோடே
காத்திருக்கிறோம்..
கலா 5:5

♥️பொறுமையோடே காத்திருப்போம்
ரோமர் 8:25

♥️ தவிக்கிறோம் 
ரோமர் 8:23

♥️ தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள். அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம். 
2 பேதுரு 3:12

அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம். 
2 பேதுரு 3:13

ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். 
2 பேதுரு 3:14

✨✨✨✨✨✨

♥️ Let me conclude..

காத்திருக்க உதவி செய்பவர் ஆவியானவர்...

 ஆவியானவரைக் கொண்டு நாம் காத்திருக்கிறோம்..

நாங்களோ நீதிகிடைக்குமென்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடே காத்திருக்கிறோம். 
கலாத்தியர் 5:5

 நாம் ஆவியானவருக்காக காத்திருப்பதில்லை..

 ஆவியானவர் மணவாளனை மணவாட்டியோடே சேர்த்து வைக்கும் வரை உத்தமமாய் பணியாற்றுகிறார்.

maranatha...
மாரநாதா
கர்த்தர் வருகிறார்..

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✨✨✨✨✨✨✨


Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA