சிலுவை பற்றிய இடறல்... OFFENCE OF THE CROSS..
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628003
✨✨✨✨✨✨
இன்றைய ஆராதனை சிந்தனை..
✨✨✨✨✨
சிலுவை பற்றிய இடறல்...
OFFENCE OF THE CROSS...
✨✨✨✨✨
🍒சிலுவை குறித்து ஏன் இடறல் வருகிறது?
115. தூர மலையில் நின்ற ஈனச் சிலுவை
1. தூர மலையில் நின்ற
ஈனச் சிலுவை
துக்க கேவல சின்னமன்றோ
இழந்தோரை மீட்க, நம்
அன்பர் மாண்டதால்
சிலுவையை நான் நேசிக்கிறேன்.
பல்லவி
அச்சிலுவையை நான்
பாராட்டுவேன்,
ஜெய சின்னமடையும் வரை,-
நான் சிலுவையைப்
பற்றிக்கொண்டு
அதைக் கிரீடத்துக்காய்
மாற்றுவேன்.
2. கல்வாரி கொண்டு செல்ல
தேவாட்டுக்குட்டி
தம் மகிமையைத் துறந்ததாலே
நிந்தை நிர்ப்பந்தமாய்
நினைத்த சிலுவை
விந்தையாய் என்னைக்
கவருதே.
- அச்
3. என் பாவம் மன்னித்து
என்னைத் தூய்மையாக்க
அன்பர் மாண்ட
சிலுவையன்றோ,
சிலுவையில் காணும்
இரத்தக் கறைகளே
என் கண்ணுக் கழகாய்த்
தோன்றுதே.
- அச்
4. சிலுவைக்காய் நிந்தை
களிப்பாய்ப் பொறுப்பேன்
விசுவாசத் தோடென்றும்
நிற்பேன்
மறுமைக்காய் என்னை
அழைக்கும் நாளிலே
மகிமையில் நான் பங்கடைவேன்.
- அச்
✨✨✨✨✨✨✨✨✨
🍒அமெரிக்க மாகாணத்தில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது..
வழக்கு யாதெனில் அநேக மதத்தை சார்ந்த ஜனங்கள் வசிக்கும் அமெரிக்க தேசத்தில் அநேக சாலைகள் சந்திக்கும் மிக பிரமாண்ட junction square ஒன்றில், அனைவரும் நின்று கவனிக்கக்கூடிய பார்வையால் கவரக்கூடிய ஒரு சிலுவை மரமாகிய சின்னம் அகற்றப்பட வேண்டும் என்பதே..
நீதிமன்ற தீர்ப்பு எதுவாயினும் சிலுவை மரம் அல்லது சிலுவை பற்றிய சிந்தை இருக்க வேண்டிய இடம் square juntcion அல்ல.. நம் இருதயம் என்பதே சரியான தீர்ப்பு...
தியான வசனம்..
🍒சிலுவை பற்றிய இடறல்...
நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து, கிருபையினின்று விழுந்தீர்கள்.
கலாத்தியர் 5:4
கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்.
கலாத்தியர் 5:6
நீங்கள் நன்றாய் ஓடினீர்களே. சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்?
கலாத்தியர் 5:7
புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்.
கலாத்தியர் 5:9
சகோதரரே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாயிருந்தால், இதுவரைக்கும் என்னத்திற்குத் துன்பப்படுகிறேன்? அப்படியானால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே.
கலாத்தியர் 5:11
✨✨✨✨✨✨✨✨✨✨
சகோதரரே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாயிருந்தால், இதுவரைக்கும் என்னத்திற்குத் துன்பப்படுகிறேன்? அப்படியானால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே.
கலாத்தியர் 5:11
யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்.
1 கொரிந்தியர் 1:22
நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம். அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமயும் இருக்கிறார்.
1 கொரிந்தியர் 1:23
✨✨✨✨✨
🍒ஆண்டவரும் இடறல் பற்றி கூறினார்?
என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.
மத்தேயு 11:6
பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன் என்றார்.
மத்தேயு 26:33
✨✨✨✨✨
🍒சிலுவை பற்றிய இடறல் காரணம் பழைய ஏற்பாட்டில் உள்ள சில பிரமாணங்கள்..
கொலைசெய்யப்பட்ட ஒருவன்மேல் சாவுக்குப் பாத்திரமான பாவம் உண்டாயிருக்க, அவனைக் கொலைசெய்யும்படி மரத்திலே தூக்கிப்போடுவாயானால்,
உபாகமம் 21:22
இரவிலே அவன் பிரேதம் மரத்திலே தொங்கலாகாது, அந்நாளில்தானே அதை அடக்கம்பண்ணவேண்டும், தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன், ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தைத் தீட்டுப்படுத்தாயாக.
உபாகமம் 21:23
🍒பவுலும் இதை கூறுகிறார்..
மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
கலாத்தியர் 3:13
🍒what is cross really?
♥️1. It is the wisdom of God..
♥️2. It is the exceeding power of God to us who believe..
♥️சிலுவை தேவ ஞானம்..
♥️சிலுவை தேவ பெலன்..
ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ, அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்.
1 கொரிந்தியர் 1:24
♥️மாத்திரமல்ல..
♥️efficacious cross..
செயல் திறன் கொண்ட சிலுவை..
♥️1. ஒப்புரவாக்கின சிலுவை..
அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.
கொலோசெயர் 1:20
♥️2. நமக்கு விரோதமான கையெழுத்தை குலைத்த சிலுவை..
நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து,
கொலோசெயர் 2:14
♥️3. கிறிஸ்து வெற்றி சிறந்த சிலுவை..
துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையில் வெற்றிசிறந்தார்.
கொலோசெயர் 2:15
♥️4. கிறிஸ்து சகித்த சிலுவை..
அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
எபிரேயர் 12:2
♥️5. நம் பாவங்களை சுமந்த கிறிஸ்து வின் சிலுவை..
நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
1 பேதுரு 2:24
♥️ சிலுவை யோவான் அப்போஸ்தலன் வெளிப்பாட்டில்..
guஅவர்களுடைய உடல்கள் மகா நகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்,
அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.
வெளிப்படுத்தினத விசேஷம் 11:8
✨✨✨✨✨✨
சகோதரரே...
கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன். ஆயினும் நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார். நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
கலாத்தியர் 2:20
பாடல்...
228. சிலுவை நிழலில் அனுதினம் அடியான்
பல்லவி
சிலுவை நிழலில் அனுதினம்
அடியான்
சாய்ந்திளைப் பாறிடுவேன்
- ஆ ஆ
அனுபல்லவி
சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில்
ஆத்தும நேசரின் அருகில்
அடைகிறேன் ஆறுதல் மனதில்.
- சிலுவை
சரணங்கள்
1. பாவ பார சுமையதால் சோர்ந்தே
தளர்ந்த என் ஜீவியமே
சிலுவை யண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால்,
இளைப்படையாது மேலோகம்
ஏகுவேன் பறந்தே வேகம்.
- சிலுவை
2. இன்பம் சுரந்திடும் திருமொழி
கேட்டு என்
இன்னல்கள் மறந்திடுவேன்
திருமறை இன்னிசை நாதம்
தேனிலுமினிய வேதம்.
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்கும் என் இதயத்தின் தோஷம்.
- சிலுவை
3. எவ்விதக் கொடிய இடருக்கு
மஞ்சேன்
இயேசுவைச் சார்ந்து நிற்பேன்;
அவனியில் வியாகுலம் வந்தால்,
அவரையே நான் அண்டிக்
கொண்டால்
அலைமிகு மோதிடு மந்நாள்
ஆறுதலளிப்பாரே சொன்னால்.
- சிலுவை
✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment