LIFE GIVING REBUKE. ஜீவனுக்கேதுவான கடிந்து கொள்ளுதல்..


✨✨✨✨✨✨

SHALOM STEWARD
MORNING DEVOTION

✨✨✨✨✨✨

LIFE GIVING REBUKE

ஜீவனுக்கேதுவான கடிந்து கொள்ளுதல்..

✨✨✨✨✨✨

1. சிட்சிக்கிறார்.. போதக சிட்சை
2. புடமிடுகிறார்..
3. வனைகிறார்..
4. பேசுகிறார்..
5. உடன்படிக்கை காக்கிறார்..
6. கடிந்து கொள்ளுகிறார்..

தியான வசனம்...

 ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும். நீதிமொழிகள் 15. 31

Proverbs 15:31 states, "The ear that listens to life-giving reproof will dwell among the wise". 

✨✨✨✨✨✨✨

♥️ கடிந்து கொள்ளுதல், கடிந்து கொள்ளாமை இரண்டும் தேவனுடைய குணாதிசயங்கள்..

அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார், என்றைக்கும் கோபங்கொண்டிரார். சங்கீதம் 103. 9

உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். யாக்கோபு 1. 5

::::::::::::::::::::::::::::::::::

♥️ ஆனாலும் தேவன் கடிந்து கொள்ளும் பிரதான காரணம்..

அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்ளுவார், நீ பொய்யனாவாய். நீதிமொழிகள் 30.6

 உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட அகங்காரிகளை நீர் கடிந்துகொள்ளுகிறீர். சங்கீதம் 119. 21

::::::::::::::::::::::::::::::::::

♥️ கர்த்தருடைய பிள்ளைகள் பாவம் செய்யும்போது தேவனுடைய தாமதம் அவருடைய தயவு என்பதை மறந்து விடுகிறோம்...

இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய், ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன். சங்கீதம் 50. 21

அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ? 
ரோமர் 2:4

::::::::::::::::::::::::::::::::::

♥️ கர்த்தர் தாம் நேசிக்கிற பிள்ளைகளையே கடிந்து கொள்ளுகிறார்..

 நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன், ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. வெளிப்படுத்தினத விசேஷம் 3. 19

::::::::::::::::::::::::::::::::::

♥️நாம் கடிந்து கொண்டு சபைக்கோ அல்லது தனி நபரிடமோ எவ்வாறு புத்தி சொல்ல சில ஆலோசனை...

🍒1. வேத வாக்கியங்கள் அடிப்படையில் மட்டுமே...


அவைகள் ( வேத வாக்கியங்கள் ) உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. 2 தீமோத்தேயு 3. 13

🍒2. சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கடிந்து கொள்ள வேண்டும்..

சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு. எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.
 2 தீமோத்தேயு 4. 2

🍒3. விசுவாசத்தினாலே ஆரோக்கியம் உண்டாக கடிந்து கொள்ள வேண்டும்..

 விசுவாசத்தினாலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களை கண்டிப்பாய்க் கடிந்துக்கொள். 
தீத்து 1.14

🍒4. கடிந்து கொள்ள தங்களுடைய ஆயத்தம், உத்தமம் அவசியம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 

இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக. தீத்து 2. 15

🍒5. செம்மையான வார்த்தைகளால் கடிந்து கொள்ள வேண்டும்..

செம்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? உங்கள் கடிந்து கொள்ளுதலினால் காரியம் என்ன ? யோபு 6. 25

🍒6. வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.

மறைவான சிநேகத்தைப் பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது. நீதிமொழிகள் 27.5

::::::::::::::::::::::::::::::::::

♥️ கடிந்து கொள்ளப்படுகிறவர்கள் மனநிலை... சில ஆலோசனை..
DONT S

🍒1. வெறுக்க கூடாது..

என் ஆலோசனையையெல்லாம் நீஙகள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள். நீதிமொழிகள் 1. 25

 புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்: கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருகக்குணமுள்ளவன். 
நீதிமொழிகள் 12.1

வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான். நீதிமொழிகள் 15.10


🍒2. அசட்டை பண்ண கூடாது..

என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை, என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள்.
 நீதிமொழிகள் 1. 30

🍒3. சோர்ந்து போக கூடாது..

என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. நீதிமொழிகள் 3. 11

::::::::::::::::::::::::::::::::::

♥️ கடிந்து கொள்ளப்படுபவர்கள் மனநிலை... சில ஆலோசனை..
DO S

🍒1. கவனித்து நடக்க வேண்டும்..

புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான்: கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான். நீதிமொழிகள் 13. 18

 மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்: கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி. நீதிமொழிகள் 15. 5

 புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்: கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான். நீதிமொழிகள் 15.32

🍒2. ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்க வேண்டும்

ஒருவன் மூடரின் பாட்டைக் கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம். பிரசங்கி 7.5

::::::::::::::::::::::::::::::::::

🍅சிந்தனைக்கு:

தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான். நீதிமொழிகள் 28.23

::::::::::::::::::::::::::::::::::

🍅தேவ எச்சரிப்பு:

அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான். நீதிமொழிகள் 29. 1

::::::::::::::::::::::::::::::::::

🍒 திடசாட்சியாய் கடிந்து கொள்ளுதல்..

நீர் அநேக வருஷமாக அவர்கள்மேல் பொறுமையாயிருந்து, உம்முடைய ஆவியினால் பேசின உம்முடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டாலும், அவர்கள் செவிகொடாதபடியினாலே, அவர்கள் அந்நிய தேசஜனங்களின் கையில் ஒப்புக்கொடுத்தீர். நெகேமியா 9. 30

✨✨✨✨✨✨✨

♥️REBUKING WITH LOVE..
AI SOURCE...

❤️‍🔥Rebuking with love means correcting or reprimanding someone with kindness, compassion, and a focus on their well-being, rather than with anger or judgment.

❤️‍🔥 It's about pointing out errors or inappropriate behavior in a way that shows you care about their growth and relationship with you. 

❤️‍🔥Here's a more detailed look at what it entails:

🤝1. Intent and Heart:

Redemption, not Ridicule: The goal is to help the person improve and grow, not to shame or humiliate them. 

🤝2. Love and Compassion:

 The rebuke should be delivered with a genuine desire to see the person change and become better. 

🤝3.Focus on Behavior, not Person: 

Criticize the action or behavior, not the person's character or worth. 

🤝4. Communication:

🌺Clear and Specific:

Ensure the rebuke is clear about what needs to be corrected, leaving no room for misinterpretation. 

🌺Right Time and Place:

Choose a setting where the person is receptive and not under pressure or stress. 

🌺Face-to-Face:

Preferably, have the conversation in person to allow for better communication and understanding. 

🌺Avoid Anger:

Rebuking in anger can be detrimental to the relationship and the person's willingness to change. 

Use "I" Statements:

Express your feelings and concerns using "I" statements to avoid accusatory language. 

Be Patient and Understanding:

Recognize that change takes time and effort. 

🤝5. Example:
Instead of saying "You're always so lazy!", try saying "I've noticed you've been struggling to keep up with your work.

 I'm concerned about your well-being and want to help you get back on track.

 Is there anything I can do to support you?". 

🤝6. Why it Matters:

Builds Stronger Relationships:

A loving rebuke can strengthen relationships by showing that you care enough to point out areas for growth. 

Helps Others Grow:

It provides an opportunity for the person to learn, repent, and make positive changes. 

🌺Promotes Spiritual Growth:

In a religious context, rebuke can be seen as a loving act of care that helps others avoid sin and grow closer to God. 

🌺Models Healthy Communication:

It demonstrates how to communicate honestly and respectfully, even when difficult. 

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA