JUST READING THE BIBLE. வேதத்தை அப்படியே வாசித்தல்.
✨✨✨✨✨✨
SHALOM STEWARD
TODAY'S DISCERN
இன்றைய நிதானம்
✨✨✨✨✨✨
JUST READING THE BIBLE
வேதத்தை அப்படியே வாசித்தல்.
✨✨✨✨✨✨
தியான வசனம்:
அவர்கள் அனுப்பிவிடப்பட்டு, அந்தியோகியாவக்கு வந்து, சபையைக் கூடிவரச்செய்து, நிருபத்தை ஒப்புவித்தார்கள்.
அதை அவர்கள் வாசித்து, அதனாலுண்டாகிய ஆறுதலுக்காகச் சந்தோஷப்பட்டார்கள். அப்போஸ்தலர் 15:30-31
Acts 15:31 (NIV) states: "The people
♥️*read* ♥️it
and were glad for its encouraging message."
✨✨✨✨✨✨
♥️Simply reading the Bible can be a valuable practice for personal growth and understanding God's word.
♥️வேதத்தை அப்படியே வியக்கியானம் இன்றி வாசிப்பது தனிப்பட்ட வளர்ச்சிக்கும் கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொள்வதற்கும் ஒரு மதிப்புமிக்க நடைமுறையாக இருக்கும்.
It's a good way to connect with faith and gain insights into spiritual matters.
♥️வேதத்தை வாசிப்பது விசுவாசத்துடன் இணைவதற்கும் ஆன்மீக விஷயங்களில் நுண்ணறிவுகளைப் பெறுவதற்கும் இது ஒரு நல்ல வழியாகும்.
♥️Reading the Bible can also benefit mental health, potentially releasing dopamine and promoting a renewed perspective.
♥️வேதத்தை வாசிப்பது மன ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும், dopamine... வெளியிடுவதற்கும் புதுப்பிக்கப்பட்ட கண்ணோட்டத்தை ஊக்குவிப்பதற்கும் வாய்ப்புள்ளது.
♥️Dopamine is a neurotransmitter and hormone that plays a crucial role in the brain's reward system, influencing feelings of pleasure, motivation, and pleasure. It's often called the "happy hormone" due to its association with positive emotions and well-being. Dopamine also affects various bodily functions, including movement, attention, and memory.
♥️டோபமைன் என்பது ஒரு நரம்பியக்கடத்தி மற்றும் ஹார்மோன் ஆகும், இது மூளையின் வெகுமதி அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது, இன்பம், உந்துதல் மற்றும் இன்ப உணர்வுகளை பாதிக்கிறது. நேர்மறை உணர்ச்சிகள் மற்றும் நல்வாழ்வுடன் அதன் தொடர்பு காரணமாக இது பெரும்பாலும் "மகிழ்ச்சி ஹார்மோன்" என்று அழைக்கப்படுகிறது. டோபமைன் இயக்கம், கவனம் மற்றும் நினைவகம் உள்ளிட்ட பல்வேறு உடல் செயல்பாடுகளையும் பாதிக்கிறது.
🍒Here's why reading the Bible is a good idea:
🍒Connect with faith:
Reading the Bible is a way to connect with your faith and deepen your understanding of God's word.
🍒Gain spiritual insights:
The Bible offers valuable insights into spiritual truths and principles.
Renew your perspective:
Reading the Bible can help you see the world through a new lens and gain a different perspective on various aspects of life.
Potential mental health benefits:
🍒Some studies suggest that reading the Bible may have positive effects on mental health, potentially releasing dopamine and promoting a renewed sense of motivation and purpose.
🍒சில ஆய்வுகள், பைபிளைப் படிப்பது மன ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், டோபமைனை வெளியிடுவதற்கும், உந்துதல் மற்றும் நோக்கத்தின் புதுப்பிக்கப்பட்ட உணர்வை ஊக்குவிப்பதற்கும் வாய்ப்புள்ளது என்றும் கூறுகின்றன.
✨✨✨✨✨✨
♥️READING BOOKS AN IMPORTANT HABIT..
♥️புத்தகங்கள் வாசிப்பது மிக நல்ல பழக்கம்..
♥️வேத புத்தகத்தை அப்படியே எந்த வியாக்கியானமும் இன்றி அதில் எப்படி எழுதப்பட்டு இருக்கிறதோ அதை அப்படியே வாசிப்பது தேவனுடைய மிக உயர்ந்த பிரியங்களில் ஒன்றாகும்.
அனேக தேவாலயங்களில் வேதவாசிப்பு என்ற ஒரு பகுதி நடைபெறுகிறது நீங்கள் கவனிக்கலாம்.
மேல்நாட்டில் உள்ள ஒரு சகோதர சபையில் ஆராதனை வேளையில் ஒரு முதியவர் எழுந்து ஒரு வேத பகுதியை மட்டும் வாசித்து எந்த வியாக்கியானமும் பண்ணாமல் அப்படியே அமர்ந்து விடுவாராம்.
நம்முடைய சபைகளிலும் அதை கடைபிடிப்பது மிகவும் நலம் என்று சொல்லி நான் நம்புகிறேன்.
உதாரணத்துக்கு எபேசியர் இரண்டாம் அதிகாரம் ஒன்று முதல் 8 வசனங்கள் ஆராதனை வேளையில் ஒருவர் எழுந்து அதை திருத்தமாக வாசித்து அமர்ந்தால் அதுவே ஆராதனை தியானதுக்கு போதுமானதாக இருக்கும்.
ஆகவே வாசிப்பது என்பது தேவனுடைய மிகப்பெரிய பிரியங்களில் ஒன்று என்பதை மறுபடியும் ஞாபகப்படுத்துகிறேன்.
♥️ வாசிப்பது இரண்டு விதங்களில் செய்யப்படுகிறது..
♥️1. open reading..
♥️2. mind reading..
♥️1. எல்லோரும் கேட்க வாசிப்பது
♥️2. நம் மனம் மட்டும் கேட்க வாசிப்பது..
இரண்டு வாசிப்பும் மிக அதிக பெலன்களை கொண்டு வருகிறது..
✨✨✨✨✨✨
🍒 இயேசு கிறிஸ்து வேதம் வாசித்த நிகழ்வு மிக முக்கிய நிகழ்வாகும்..
இந்த பகுதியை கவனமாக வாசியுங்கள்...
🍒 IT IS JESUS CHRIST'S OPEN READING..
அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லாராலும் புகழப்பட்டார்.
தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.
அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:
கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,
கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,
வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.
அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.
லூக்கா 4:15-21
✨✨✨✨✨✨
♥️இன்னொரு பகுதியை சிந்திப்போம்..
🍒IT IS ETHIOPIAN MAN EUNUCH'S MIND READING..
இங்கே பிலிப்பு.. கந்தாகே மந்திரி.. சந்திப்பில்..
வேத வசனத்தை மட்டும் வாசித்து
கந்தாகே மந்திரி இரட்சிக்கப்படுகிறதை கவனியுங்கள்..
ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக்கொண்டிருந்தான்.
ஆவியானவர்; நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்.
அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு; நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான்.
அதற்கு அவன்; ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும் என்று சொல்லி, பிலிப்பு ஏறி, தன்னோடே உட்காரும்படி அவனை வேண்டிக்கொண்டான்.
அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்; அவர் ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார். மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.
அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது. அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போயிற்று. அவருடைய வம்சத்தை யாரால் சொல்லிமுடியும் என்பதே.
மந்திரி பிலிப்பை நோக்கி; தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக் குறித்தோ? எனக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான்.
அப்போஸ்தலர் 8:27-35
✨✨✨✨✨✨
♥️ அப் பவுல் தீமோத்தேயுவுக்கு நிருபம் எழுதி ஆலோசனை இவ்வாறு கூறுகிறார்...
♥️நான் வருமளவும்
🍒@ வாசிக்கிறதிலும்
mind reading and
open reading
🍒@ புத்திசொல்லுகிறதிலும்
🍒@ உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு.
1 தீமோத்தேயு 4:13
🍅 வாசிக்கிறதில் கவனமாய் இரு என்று அப் பவுல் தீமோத்தேயுவுக்கு ஆலோசனை சொன்ன போது அவர் கண்டிப்பாக பொதுவான இடத்தில் பழைய ஏற்பாட்டை வாசிக்க செய்வதைத்தான் சொல்லி இருப்பார். ஆனால் பவுலின் ஆலோசனை ஆனது வாசித்தலின் மற்ற பகுதிகளுக்கும் மிகப் பொருத்தமானதாக இருக்கின்றது. தீமோத்தேயுவை எடுத்து வரும்படி பவுல் கேட்டுக்கொண்ட புத்தகங்கள் அனைத்தும் யூத வரலாறு நியாயப்பிரமாணம் மற்றும் தீர்க்கதரிசனகளின் விளக்கங்களாக இருக்கலாம்.
மேலும் பவுல்தனது பிரசங்கங்களிலும் உரைகளிலும் மேற்கோள் காட்டும் புற மதத்து கவிஞர்களின் புத்தகங்கள் கூட அதில் இருந்திருக்கலாம். இறுதிவரை ஒரு மாணவனாகவே இருந்த பவுல் படிப்பதற்கு நேரத்தை செலவிட விரும்பினார்.
🍒துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த
✨ மேலங்கியையும்,
✨ புஸ்தகங்களையும்,
✨ விசேஷமாய்த் தோற்சுருள்களையும்
நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா.
2 தீமோத்தேயு 4:13
♥️ 1536 இல் இருந்த இரத்த சாட்சியான வில்லியம் டென்டல்
( william tyndale)
அவர்கள் தலைமை ஆளுநருக்கு தனக்கு தேவையான பொருட்களை பற்றிய ஒரு கடிதம் அனுப்பும்போது எபிரேய இலக்கணம் வேதாகமம் மற்றும் எபிரேய அகராதி ஆகிய புத்தகங்களை கொண்டு வருவதை குறித்து குறிப்பிட்டுள்ளார். பவுல், திண்டேல்
Paul & Tyndale
ஆகிய இருவருமே தங்கள் வாழ்வின் கடைசி நாட்களை தோற் பொருட்களை வாசிப்பதற்கு அர்ப்பணித்தவர்கள்.
♥️ ஜான் வெஸ்லி வாசிப்பதை நேசித்தார். குதிரையில் சவாரி செய்யும் போது தான் இதை அதிகமாக செய்தார்.
அடிக்கடி அவர் ஐந்து முதல் 90 மைல்கள் வரையிலான தூரத்தை அவர் கடக்கும் போது தனது சேணத்தில் அறிவியல்,வரலாறு மற்றும் மருத்துவம் பற்றிய புத்தகங்களை சொருகிக் கொள்வார்.
அநேக விதமான, ஆயிரக்கணக்கான புத்தகங்களை அவர் படித்திருக்கிறார்.
♥️ ஒரு நாளில் அரை மணி நேரமாவது ஆத்துமாவை போஷித்து மனதை ஒருமுகப்படுத்தும் புத்தகங்களை வாசிப்பதில் செலவிட தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும்.
♥️ஒரு தலைவர் தனது பிரசங்கம் மற்றும் எழுத்தின் தனித்தன்மையை வளர்த்துக் கொள்ளவும் வாசிக்க வேண்டும்.
♥️ எளிமைக்கு ஜான் பனியனையும் தெளிவு மற்றும் சிறப்புக்கு ஜோசப் அடிசனையும் மென்மை மற்றும் படிப்படியாக உயரும் சிந்தனைக்கு ஜான் மில்டனையும், துடிப்புக்கு சார்லஸ் டிக்ஷனையும், மதிப்புக்கு பிரான்சிஸ் வேக்கனையும், வாசிக்கும்படி
AW டோசர் அறிவுறுத்துகிறார்.
♥️ புதிய தகவல்கள். தெரிந்து கொள்ளவும் தலைவர்கள் வாசிக்க வேண்டும்.
நடப்பு காலத்துடன் ஒத்துப் போகவும் அவரது துறையில் இருக்கும் விஷயங்களைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளவும் வாசிக்க வேண்டும். மாபெரும் மனிதர்களின் மனங்களுடன் ஐக்கியம் வைத்துக்கொள்ள தலைவர்கள் வாசிக்க வேண்டும்.
கடந்த காலங்களில் வாழ்ந்த மாபெரும் தலைவர்களுடன் உறவு வைத்துக் கொள்ள புத்தகங்கள் உதவுகின்றன. சிறந்த புத்தகத்துக்கு பெரும் சக்தி உண்டு. இலக்கியத்தின் ஆர்வங்கள் மற்றும் புத்தகத்தில் பெஞ்சமின் டிஸ்ரலி அவர்கள் ஒரே ஒரு புத்தகத்தால் ஒரு மனிதன் மிகவும் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட பல சம்பவங்களை விவரிக்கிறார்.
ஒரு மனிதனை அவனது நண்பர்கள் மூலம் அறியலாம் என்றால் அவனது குணத்தை அவன் வாசிக்கும் புத்தகங்களில் காணலாம் என்றும் சொல்லலாம்.
இன்றைய அச்சகங்களிலிருந்து வரும் கொட்டும் கணக்கில் அடங்காத புத்தகங்கள் நாம் கவனமாக தேர்ந்தெடுத்து வாசிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகின்றன. நாம் யாராக இருக்கிறோம் நாம் எதை சாதிக்க நினைக்கிறோம் என்பதுதான் நமது வாசிப்பை நெறிப்படுத்த வேண்டும்.
♥️ஆஸ்திரேலியாவில் இருந்த ஒரு கிராமத்து போதகர் ஒரு புத்தகப் பிரியர். அவரது ஊழியத்தின் துவக்கத்திலேயே தனது சபையாரை வேதாகமத்திலும் இறையிலும் அறிவு உள்ளவர்களாக மாற்ற வேண்டும் என அவர் தீர்மானித்தார். புத்தகங்களை நேசிக்க தனது சபையாருக்கு அவர் கற்றுக் கொடுத்தார். அப்படியே அவர்களை படிப்படியாக ஆழமும் கனமும் ஆன ஆன்மீக இலக்கியங்களுக்கு நேராக நடத்தினார். அதன் விளைவாக அந்த மாவட்டம் முழுவதிலும் உள்ள பல விவசாயிகள் சிறந்த நூல் நிலையங்களையும் சிந்திக்கும் விசுவாசத்தையும் கொண்டிருந்தார்கள். இதே வழியில் பல ஊழியர்கள் முயற்சி செய்ய வேண்டும் திருச்சபை அவர்கள் அறிவுப்பூர்வமான வாசித்தலுக்கும் பெரிதும் அர்ப்பணிக்கப்பட்டதுமான பிரச்சனைகளுக்கு பின் உடனடியாக சகஜ நிலைக்கு திரும்ப விசுவாசத்துக்கும் நேராக வழிநடத்த வேண்டும்.
வாசிப்போம்....
கருத்தாய் வாசிப்போம்..
வாசிப்பதை நேசிப்போம்..
✨✨✨✨✨✨
♥️வாசிக்கிறவர்கள்
பாக்கியவான்கள்...
இந்தத் தீர்க்கதரிசன வசனங்களைவாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில்எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம்சமீபமாயிருக்கிறது.
வெளிப்படுத்தின
விசேஷம் 1. 3
✨✨✨✨✨✨
✨ கர்த்தர் ஒருவரே தேவனுடைய வார்த்தைகளை வாசிக்க பாத்திரவான்.....
ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்.
வெளிப்படுத்தின
விசேஷம் 5. 4
GOD BLESS THE SCRIBE AND THE READER
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment