சபைக்கு செய்தி* _சரீர வியாதியின் காரணங்கள்_ _ ஆத்தும வியாதியின் காரணம்_நீங்க ஒரே வழி..


🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️

*SHALOM STEWARD THOUGHTS DISCERNS* 

🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️

    சபைக்கு செய்தி*
 _சரீர வியாதியின்   
        காரணங்கள்_
 _ ஆத்தும வியாதியின்      
              காரணம்_

நீங்க ஒரே வழி..

🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️
 *சரீர வியாதியின் 8 காரணங்கள்* ..

⌛1. *தேவனுடைய கிரியைகள் வெளிப்பட..*
 அவர் அப்புறம் போகையில் பிறவிக் குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார்.
அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.
இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான்.
யோவான் 9:1-3

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
⌛2. *பாவம் செய்யும் போது..*
 முப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த ஓரு மனுஷன் அங்கே இருந்தான்.
 அதற்குப்பின்பு இயேசு அவனைத் தேவாலயத்திலே கண்டு: இதோ,நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
யோவான் 5:5, 14

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
⌛3. *குமாரன் மகிமைப்பட..*
அப்பொழுது அவனுடைய சகோதரிகள்: ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள்.
இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது, தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார்.
யோவான் 11:3-4

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
⌛4. *பெருமையினால் நம்மை உயர்த்தாதபடிக்கு..*
 அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.
அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும். பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாரட்டுவேன்.
2 கொரிந்தியர் 12:7-9

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
⌛5. *கர்த்தருடைய பந்தியில் அபாத்திரமாய் பானம் பண்ணும் போது..*
இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும்குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்.
எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.
என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஐனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஐனபானம்பண்ணுகிறான்.
இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள். அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்.
நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்.
நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.
1 கொரிந்தியர் 11:27-32

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
⌛6. *மரணத்துக்கு ஏதுவான பாவம் செய்யும் போது..*
மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தை தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார். யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே. மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன்.
அநீதியெல்லாம் பாவந்தான். என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுண்டு.
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம். தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்.
1 யோவான் 5:16-18

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
⌛7. *மனதின் துக்கத்தினால்* ..
அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ துக்கமுகமாயிருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே ஒழிய வேறொன்றும் அல்ல என்றார். அப்பொழுது நான் மிகவும் பயந்து,
நெகேமியா 2.2

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
⌛8. *கர்த்தருடைய கட்டளைக்கு செவி கொடாமல் போகும் போது..*
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன். நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.
யாத்திராகமம் 15.26

📚📚📚📚📚📚📚📚



⏰ *ஆத்தும வியாதியின் ஒரே காரணம்..*

✒️ *பாவம்* ..
இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? 

அதிகம் அதிகமாய் விலகிப்போகிறீர்களே, தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது.
ஏசாயா 1.5

 *🙏நோய்கள் மேல் கர்த்தருடைய வல்லமை..*

காத்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார், உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியரின் கொடிய ரோகங்களில் ஒன்றும் உன்மேல் வரப்பண்ணாமல், உன்னைப் பகைக்கிற யாவர்மேலும் அவைகளை வரப்பண்ணுவார்.
உபாகமம் 7.15

அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,
சங்கீதம் 103.3

அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
மத்தேயு 8.17


 *⏰கடைசியாக சகோதரரே.*


உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானக. அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள்.
யாக்கோபு 5.14

⏰⏰⏰⏰⏰⏰⏰⏰

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை டூவிபுரம் தூத்துக்குடி 628003
Shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301

TCBA TUTICORIN 3

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA