ASSEMBLY LEADERSHIP CHURCH GOVERNANCE. சபையின் ஆளுகை _யேசபேலின் பாவம்.._
*SHALOM STEWARD THOUGHTS DISCERNS*
ASSEMBLY LEADERSHIP
CHURCH GOVERNANCE
சபையின் ஆளுகை
_யேசபேலின் பாவம்.._க
சபைக்குள் அனுமதிக்கப்படக்
கூடாத மிக பிரதானமான செயல்.
ஆகிலும், உன்பேரில் (தியத்தீரா சபை) எனக்குக் குறைஉண்டு: என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும்
( _கிறிஸ்து அல்லாதவைகளை_ ) விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் ( _கிறிஸ்துவை முதன்மை படுத்தாதவைகளை_ ) அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.
வெளிப்படுத்தின விசேஷம் 2:20
சபையின் தூதன் (மூப்பர்கள்) கள்ள போதகத்தை சபைக்குள் அனுமதிக்க மறுப்பது அவர்களின் பிரதான பொறுப்பாகும்.
Pulpit is not..
பிரசங்க பீடம் என்பது..
a place of common preaching.
பொதுவான அறிவுரை வழங்கும் இடம் அல்ல.
தேவனுடைய பிரதிநிதிகள் பேசும் இடம்.
கர்த்தர் பேசும் இடம்.
ஜனங்களின் சீர்திருத்தலுக்கு ஆதாரமாகிய இடம்.
விசுவாசிகளை ஸ்திரப்படுத்தும் இடம்.
தேவனுடைய வார்த்தைகளின் பிறப்பிடம்.
வம்ச வரலாறுகளுக்கும் கட்டுக்கதைகளுக்கும் உரியது அல்ல.
அவரோடு ( கிறிஸ்து ) இருக்கவும், அவரை (கிறிஸ்துவை) பிரசங்கிக்கவும் நம்மை தெரிந்து கொண்டார்.
அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும்,பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும்.
மாற்கு 3:14
இயேசு கிறிஸ்து வைக் குறித்து பிரசங்கிக்கும் போது இரட்சிப்பு பூரணமாகிறது..
அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுகிறிஸ்துவை குறித்து பிரசங்கித்தார்கள்.
அப்போஸ்தலர் 8:35
இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி; இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்.
அப்போஸ்தலர் 8:36
ஆதி திருச்சபைகளில் கிறிஸ்து மட்டுமே பிரங்கிக்கப்படுகிறா ர்..
தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள். அப்போஸ்தலர் 5.42
அப்பொழுது பிலிப்பென்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப்போய், அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக் குறித்துப் பிரசங்கித்தான். அப்போஸ்தலர் 8.5
தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான். அப்போஸ்தலர் 9.20
மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ;யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக் கொண்டிருந்தான். அப்போஸ்தலர் 28.31
📚📚📚📚📚
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment