போதுமான பலிபீடம்..**SUFFICIENT ALTAR..*
🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️
*_SHALOM STEWARD THOUGHTS DISCERNS_*
_TABLE REMEMBRANCE THOUGHT_
_மேஜை நினைவு கூறுதலின் தியானம்.._
==================
போதுமான பலிபீடம்..*
*SUFFICIENT ALTAR..*
🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️
சாலொமோனின் சிறியதான பலிபீடம்..
சாலொமோன் கர்த்தருக்குச் சமாதானபலிகளாக, இருபத்தீராயிரம் மாடுகளையும், இலட்சத்திருபதினாயிரம் ஆடுகளையும் பலியிட்டான், இவ்விதமாய் ராஜாவும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கர்த்தருடைய ஆலயத்தைப் பிரதிஷ்டைபண்ணினார்கள்.
கர்த்தருடைய சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதான பலிகளின் நிணத்தையும் கொள்ளமாட்டாமல் *சிறியதாயிருந்தபடியினால்* , ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குமுன் இருக்கிற பிரகாரத்தின் நடுமையத்தைப் பரிசுத்தப்படுத்தி, அன்றையதினம் அங்கே சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதான பலிகளின் நிணத்தையும் செலுத்தினார்கள்.
1 இராஜாக்கள் 8:64
சாலொமோனின் கொள்ள மாட்டாத பலிபீடம்..
LIMITATIONS IN SOLOMON'S ALTAR
சாலொமோன் உண்டாக்கின வெண்கலப்பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும் போஜன பலிகளையும் நிணத்தையும் *கொள்ளமாட்டாதிருந்தபடியினால்* , கர்த்தருடைய ஆலயத்துக்கு முன்னிருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைச் சாலொமோன் பரிசுத்தப்படுத்தி, அங்கே சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளின் நிணத்தையும் செலுத்தினான்.
2 நாளாகமம் 7:7
🌈🌈🌈🌈🌈🌈
🔴1. *சாலொமோனின் அளவுக்கு உட்பட்ட பலிபீடம்..*
அன்றியும் இருபதுமுழநீளமும் இருபதுமுழ அகலமும் பத்துமுழ உயரமுமான வெண்கலப் பலிபீடத்தையும் பண்ணினான்.
2 நாளாகமம் 4:1
🔴2. *அந்த பலிபீடத்தில் செலுத்தப்பட்ட பலிகளும் பூரணப்படுத்தவில்லை* ..
இப்படியிருக்க, நியாப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் *பூரணப்படுத்தமாட்டாது* .
எபிரேயர் 10:1
@ _ஜனங்களுடைய பாவம் நாளுக்கு நாள் பெருகுகிறது._ .
@ _10 கட்டளைகள் சீனாய் மலையில் கொடுக்கப்பட்டது_ ..
@ _613 பிராமணங்கள் ஆக பெருகியது_ ..
*அக்கிரமம் பெரிது..*
கர்த்தாவே, என் _அக்கிரமம் பெரிது,_ உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும்.
சங்கீதம் 25:11
*பெரும்பாதகம்* ..
பின்பு, மோசே ஆரோனை நோக்கி: நீ இந்த ஜனங்கள்மேல் இந்தப் _பெரும்பாதகத்தைச்_ சுமத்துகிறதற்கு, இவர்கள் உனக்கு என்ன செய்தார்கள் என்றான்.
யாத்திராகமம் 32:21
*மகா பெரிய பாவம்..
மறுநாளில் மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் _மகா பெரிய பாவஞ்செய்தீர்கள்_ . உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் கர்த்தரிடத்திற்கு ஏறிப்போகிறேன் என்றான்.
அப்படியே மோசே கர்த்தரிடத்திற்குத் திரும்பிப்போய்: ஐயோ, இந்த ஜனங்கள் பொன்னினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, _மகா பெரிய பாவம்_ செய்திருக்கிறார்கள்.
யாத்திராகமம் 32:31
*தேவனுடைய கோபமும் பெரிது..*
கர்த்தர் தமது கோபத்திலும் தமது உக்கிரத்திலும் சோதோமையும் கொமோராவையும் அத்மாவையும் செபோயீமையும் கவிழ்த்துப்போட்டதுபோல, இந்த தேசத்தின் நிலங்களெல்லாம் விதைப்பும் விளைவும் யாதொரு பூண்டின் முளைப்பும் இல்லாதபடிக்கு, கந்தகத்தாலும் உப்பாலும் எரிக்கப்பட்டதைக் காணும்போதும்,
அந்த ஜாதிகளெல்லாம் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார், இந்த _மகா கோபம்_ பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன என்று சொல்லுவார்கள்.
உபாகமம் 29:24
@ பாவம் பெருக பெருக
பலி மிருகங்கள் எண்ணிக்கையும் ஏராளம் பெருகுகிறது..
@ 22000 மாடுகள்
@ 1, 20, 000 ஆடுகள்..
@ பலிபீடம் சிறியது..
@ சாலொமோன் நடுமையத்தை பரிசுத்தப்படுத்தி பலி செலுத்தினான்..
----------------------
*🕯️நமக்கு ஒரு பலிபீடம் உண்டு..*
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே
@ பலிபீடம்
@ பலி மிருகம்
@ பலி பொருள்
நமக்கு ஒரு பலீபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை.
எபிரேயர் 13:10
*⌛தேவன் பெரியவர்..*
சங் 95.3, சங் 96.4
*⌛அவருடைய நாமம் பெரியது..*
அப் 4.12
*⌛அவருடைய சிருஷ்டிப்பு பெரியது* .
ஆதி 1.16
⌛ அவருடைய பலி சர்வ லோக பலி..*
⌛@ இயேசு கிறிஸ்துவே ஒரே பலி எபி 10.14
⌛@ கிருபாதர பலி
ரோம 3.26
⌛@ பாவத்தை போக்கும் பலி ரோம 8.3
⌛@ சுகந்த வாசனையான பலி
எபே 5.2
⌛@ பழுதற்ற பலி
எபி 9.14
⌛@ சர்வ லோகத்தின் கிருபாதர பலி
1 யோவான் 2.2,
1 யோவான் 1.9
🕯️*அவருடைய அன்பு மகா பெரியது.* .
யோவான் 3.16
1 யோவான் 4.10
_பலிபீடமாகிய கிறிஸ்துவை நெருங்குவோம்.
நினைவு கூறுவோம்.
ஆராதிப்போம்.
தொழுது கொள்ளுவோம்_ .
🌈தியான வசனம்.
அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன்.
கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,
சங்கீதம் 26:4-6
நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.
சங்கீதம் 26:7
🌈🌈🌈🌈🌈
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 3
shalomsteward1@gmail.com
Whatsapp :+919965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
🌈🌈🌈🌈🌈
Comments
Post a Comment