*SEVEN ASPECTS IN GIVING* *கொடுத்தலில் 7 அம்சங்கள்*==================




*SHALOM STEWARD THOUGHTS DISCERNS*
சபைக்கு செய்தி
==================

 *SEVEN ASPECTS IN GIVING*
 *கொடுத்தலில் 7 அம்சங்கள்*
==================

@ கொரிந்தியர் சபை விசுவாசிகள் கொடுப்பதில் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவதில் மிகவும் குறைவுள்ளவர்களாக இருந்தார்கள்.
@ பவுல் மக்கதோனியா சபை விசுவாசிகளை முன் மாதிரியாக வைத்து கொரிந்தியரை ஊக்கப்படுத்துகிறார்.
@ மக்கதோனியர்கள் மிகவும் கொடிய தரித்திரத்திலும் சோதனைகளிலும் பாடுகளிலும் நெருக்கப்பட்டார்கள்.
@ ஆனாலும் தாராளமாக, மனப்பூர்வமாக மகிழ்ச்சியாக கொடுத்தார்கள்.
@ 2 கொரிந்தியரின் முதற்பலன் கதிர்கள்
@ பவுல் 7 அம்சங்களை கொடுப்பதில் வலியுறுத்துகிறார்..
==================

1. *Give spiritually..*
 *ஆவியின் நடத்துதலின்படி கொடுங்கள்..*
மேலும் நாங்கள் நினைத்தபடிமாத்திரம் கொடாமல், *தேவனுடைய சித்தத்தினாலே* முன்பு தங்களைத்தாமே கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்.
2 கொரிந்தியர் 8:5

2. *Give willingly..*
 *மனப்பூர்வமாக கொடுங்கள்..*
 மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே *மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு* , நான் சாட்சியாயிருக்கிறேன்;.
2 கொரிந்தியர் 8:3

3. *Give gratefully..*
 *பெருக்கமாக கொடுங்கள்..*
அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவிதஜாக்கிரதையிலும், எங்கள்மேலுள்ள உங்கள் அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் *பெருகவேண்டும்* .
2 கொரிந்தியர் 8:7

4. *Give proportionately..*
 *உள்ளதின்படியே கொடுங்கள்..*
ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு *உள்ளதின்படியே* அங்கிகரிக்கப்படும்.
2 கொரிந்தியர் 8:12

5. *Give liberally..*
 *உதாரத்துவமாக கொடுங்கள்..*
ஆகையால், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிற உங்கள் தானதர்மமானது லோபத்தனமாய்க் கொடுக்கப்பட்டதாயிராமல், *உதாரத்துவமாய்க்* கொடுக்கப்பட்டதாயிருக்கும்படியாக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரரை ஏவி, உங்களிடத்தில் முன்னதாக அனுப்புவது எனக்கு அவசியம் என்று காணப்பட்டது.
பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.
2 கொரிந்தியர் 9:5-6

6. *Give purposefully..*
 *நியமத்தின்படி கொடுங்கள்..*
அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் *நியமித்தபடியே* கொடுக்கக்கடவன். உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
2 கொரிந்தியர் 9:7

7. *Give cheerfully..*
 *உற்சாகமாக கொடுங்கள்..*
அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன். *உற்சாகமாய்க்* கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
2 கொரிந்தியர் 9:7
 பிரியமானவர்களே
 *முழுமையும் கொடுங்கள்..*
தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை *ஒப்புக்கொடுத்தவர்* , அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? ரோமர் 8.32


கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
 டூவிபுரம் தூத்துக்குடி
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA