SEVENFOLD OPERATIONS OF THE WORD OF GOD.....கர்த்தருடைய வார்த்தையின் ஏழு நிலை செயல்பாடுகள்_
📚📚📚📚📚📚📚
SHALOM STEWARD THOUGHTS DISCERNS
சபைக்கு செய்தி..
📚📚📚📚📚📚📚
SEVENFOLD OPERATIONS OF THE WORD OF GOD
கர்த்தருடைய வார்த்தையின் ஏழு நிலை செயல்பாடுகள்_
📚📚📚📚📚📚📚
📒1. *Born again by the word of God..*
*மறுபடி பிறத்தல்* *ஜெநிப்பிக்கப்படுதல்*
மனந்திரும்பி குணப்படுதல்...
உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக்குணப்படுங்கள். அப்போஸ்தலர் 3. 30
அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் _ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே_
1 பேதுரு 1:23
அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே _ஜெநிப்பித்தார்_ .
யாக்கோபு 1:18
::::::::::::::::::::::::::::::::::::::::::
📒2. *Cleansed by the word of God..*
*சுத்திகரிக்கப்படுதல்*
தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் _சுத்திகரித்து_ , பரிசுத்தமாக்குகிறதற்கும், எபேசியர் 5:26
வாலிபன் தன் வழியை எதினால் _சுத்தம்பண்ணுவான்_ ? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே.
சங்கீதம் 119:9
::::::::::::::::::::::::::::::::::::::::::
📒3. *Saved by the word of God..*
*இரட்சிக்கப்படுதல்* .
உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் _இரட்சித்துக்கொள்ளுவாய்_ .
1 தீமோத்தேயு 4:16
ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை _இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற_ வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.
யாக்கோபு 1:21
::::::::::::::::::::::::::::::::::::::::::
📒4. *Growing by the word of God..*
*ஆவிக்குரிய வளர்ச்சி..*
சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் _ஒழித்துவிட்டு_ ,
1 பேதுரு 2:2
நீங்கள் _வளரும்படி_ , புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.
1 பேதுரு 2:3
உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன், உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது, சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.
எரேமியா 15:16
::::::::::::::::::::::::::::::::::::::::::
📒5. *Sanctified by the word of God..*
*பரிசுத்தமாகுதல்* ..
உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் _பரிசுத்தமாக்கும்_ : உம்முடைய வசனமே சத்தியம்.
யோவான் 17:17
அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் _பரிசுத்தமாக்கப்படும்
1 தீமோத்தேயு 4:5
::::::::::::::::::::::::::::::::::::::::::
📒6. *Enlightened by the word of God..*
*பிரகாசிப்பித்தல்* ..
கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது, கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் _தெளிவிக்கிறதுமாயிருக்கிறது_ .
சங்கீதம் 19:8
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு _வெளிச்சமுமாயிருக்கிறது_ .
சங்கீதம் 119:105
::::::::::::::::::::::::::::::::::::::::::
📒7. *Preserved by the word of God..*
*காத்துக்கொள்ளுதல்*
மனுஷரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்கு விலக்கமாய் என்னைக் _காத்துக் கொள்ளுகிறேன்._
சங்கீதம் 17:4
என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ _காத்துக்கொண்டபடியினால்_ , பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 3:10
📚📚📚📚📚📚📚
📚இப்பொழுதும் சகோதரரே,
நீங்கள் பக்திவிருத்தியடையவும் பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.
அப்போஸ்தலர் 20:32
✒️✒️✒️✒️✒️✒️✒️
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம்..
தூத்துக்குடி
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✒️✒️✒️✒️✒️✒️✒️
Comments
Post a Comment