REST IN SEVEN ASPECTS *ஏழு நிலைகளில் இளைப்பாறுதல்..*
SHALOM STEWARD THOUGHTS DISCERNS
==================
REST IN SEVEN ASPECTS
*ஏழு நிலைகளில் இளைப்பாறுதல்..*
==================
📒1. *Creation Rest..*
_சிருஷ்டிப்பின் இளைப்பாறுதல்.._
இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன.
தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே *ஒய்ந்திருந்தார்* .
ஆதியாகமம் 2:1-2
Thus the heavens and the earth were finished, and all the host of them. And on the seventh day God ended his work which He had made; and He *rested* on the seventh day from all his work which He had made.
Genesis 2:1-2
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
📒2. *Redemption rest..*
_மீட்பின் இளைப்பாறுதல்.._
உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார். அவர் வல்லமையுள்ளவர். அவர் இரட்சிப்பார். அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் *அமர்ந்திருப்பார்* . அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்.
செப்பனியா 3:17
The LORD thy God in the midst of thee is mighty; He will save, He will rejoice over thee with joy; He will *rest* in his love, He will joy over thee with singing.
Zephaniah 3:17
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
📒3. *Sinner's Rest..*
_பாவிகளின் இளைப்பாறுதல்.._
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு *இளைப்பாறுதல்* தருவேன்.
மத்தேயு 11:28
Come unto me, all ye that labour and are heavy laden, and I will give you *rest* .
Matthew 11:28
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
📒4. *_Saint's Rest_*
_பரிசுத்தவான்களின் இளைப்பாறுதல்.._
நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு *இளைப்பாறுதல்* கிடைக்கும்.
மத்தேயு 11:29
Take my yoke upon you, and learn of me; for I am meek and lowly in heart: and ye shall find *rest* unto your souls.
Matthew 11:29
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
📒5. *Servant's Rest..*
_ஊழியரின் இளைப்பாறுதல்.._
அப்பொழுது அப்போஸ்தலர் இயேசுவினிடத்தில் கூடிவந்து,தாங்கள் செய்தவைகள் உபதேசித்தவைகள் யாவையும் அவருக்கு அறிவித்தார்கள்.
அவர் அவர்களை நோக்கி, வனாந்தரமான ஓரிடத்தில் தனித்துச் சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள் என்றார், ஏனெனில், வருகிறவர்களும் போகிறவர்களும் அநேகராயிருந்தபடியினால் போஜனம்பண்ணுகிறதற்கும் அவர்களுக்குச் சமயமில்லாதிருந்தது.
மாற்கு 6:30-31
And the apostles gathered themselves together unto Jesus, and told him all things, both what they had done, and what they had taught.
And He said unto them, Come ye yourselves apart into a desert place, and *rest* a while: for there were many coming and going, and they had no leisure so much as to eat.
Mark 6:31
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
📒6. *Paradise Rest..*
_பரலோக இளைப்பாறுதல்.._
பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன், அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது, அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து *இளைப்பாறுவார்கள்* , அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம், ஆவியானவரும் ஆம் என்று திருவுளம் பற்றுகிறார் என்று சொல்லிற்று.
வெளிப்படுத்தின விசேஷம் 14:13
And I heard a voice from heaven saying unto me, Write, Blessed are the dead which die in the Lord from henceforth: Yea, saith the Spirit, that they may *rest* from their labours; and their works do follow them.
Revelation 14:13
நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் *குடியிருக்கவும்* அதிகமாய் விரும்புகிறோம்.
2 கொரிந்தியர் 5:8
We are confident, I say, and willing rather to be absent from the body, and to be *present* with the Lord.
2 Corinthians 5:8
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
📒7. *Eternal rest*
_நித்திய இளைப்பாறுதல்.._
ஆகையால், தேவனுடைய ஐனங்களுக்கு *இளைப்பாறுகிற* காலம் இனி வருகிறதாயிருக்கிறது.
எபிரேயர் 4:9
There remaineth therefore a *rest* to the people of God.
Hebrews 4:9
அங்கே இராக்காலமிராது, விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை, தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:5
Revelation 22:5
And there shall be no more night; they have no need for lamplight or sunlight, for the Lord God will illuminate them and be their light, and they shall reign [as kings] forever and ever (through the eternities of the eternities).
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
*📒Closing thought..*
⌛ *His Presence Is Rest..
_கர்த்தருடைய பிரசன்னமே இளைப்பாறுதல்.._
அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு *இளைப்பாறுதல்* தருவேன் என்றார்.
யாத்திராகமம் 33.14
And He said, My presence shall go with thee, and I will give thee *rest* .
Exodus 33:14
✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை,
டூவிபுரம், தூத்துக்குடி..
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✒️✒️✒️✒️✒️✒️✒️✒️
Comments
Post a Comment