✨✨✨✨✨✨✨BOOKS IN "THE BOOK" "வேத புத்தகத்தில்" புத்தகங்கள்..


SHALOM STEWARD
MORNING DEVOTION 

✨✨✨✨✨✨✨

BOOKS IN "THE BOOK" 

"வேத புத்தகத்தில்" புத்தகங்கள்..

✨✨✨✨✨✨✨

♥️1. ஜீவ புத்தகம்..

BOOK OF LIFE..

:::::::::::::::::::::::::::::::::::
விசுவாசிகளின் இரட்சிப்பும் இரட்சிப்பு சார்ந்த கிரியைகளும்... பதிவு...
:::::::::::::::::::::::::::::::::::

 அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன். அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள்

 *ஜீவபுஸ்தகத்தில்* 

இருக்கிறது. பிலிப்பியர் 4.3

 மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன், அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன,

 *ஜீவபுஸ்தகம்* 

என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது, அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். வெளிப்படுத்தினத விசேஷம் 20.12

மற்றும் வாசிக்க:
சங் 69:28, எரேமியா 2:13, வெளி 3:5

✨✨✨✨✨✨✨

♥️2. ஞாபகப் புத்தகம்

BOOK OF REMEMBRANCE

:::::::::::::::::::::::::::::::::::
விசுவாசிகளின் உரையாடல்கள் மற்றும் தியானங்கள்.. பதிவு...
:::::::::::::::::::::::::::::::::::

அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வார்கள். கர்த்தர் கவனித்துக் கேட்பார். கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும்

 *ஞாபகப் புஸ்தகம்* 

ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது. 
மல்கியா 3:16

✨✨✨✨✨✨✨

♥️3.நாளாகமப்புஸ்தகம்

BOOK OF THE CHRONICLES..

:::::::::::::::::::::::::::::::::::
சபை தலைமத்துவத்தின் நற்கிரியைகள் மற்றும் துர்க்கிரியைகள்.. பதிவு..
::::::::::::::::::::::::::::::::::

 அபியாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும் யூதாவுடைய ராஜாக்களின்

 *நாளாகமப் புஸ்தகத்தில்* 

அல்லவோ எழுதியிருக்கறது, அபியாமுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. 
1 இராஜாக்கள் 15. 7

நாதாபின் மற்ற வர்த்தமானங்களும் அவன் செய்தவை யாவும் இஸ்ரவேல் ராஜாக்களின்

 *நாளாகமப் புஸ்தகத்தில்* 

அல்லவோ எழுதியிருக்கிறது. 1 இராஜாக்கள் 15.31

அந்தக் காரியம் விசாரிக்கப்படுகிறபோது, அது மெய்யென்று காணப்பட்டது. ஆகையால் அவர்கள் இருவரும் மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள். இது ராஜ சமுகத்தில்
 *நாளாகமப்புஸ்தகத்திலே* 

எழுதப்பட்டிருக்கிறது. எஸ்தர் 2.23

✨✨✨✨✨✨✨

♥️4. காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகம்

BOOK OF THE MEMORABLE DEEDS

:::::::::::::::::::::::::::::::::::
விசுவாசிகள் ஈடுபடும் time events கால நிகழ்வுகள்.. பதிவு..
:::::::::::::::::::::::::::::::::::

அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால்,
 *காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக்* 

கொண்டுவரச்சொன்னான், அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது. 
எஸ்தர் 6:1

✨✨✨✨✨✨✨

♥️5. கர்த்தருடைய யுத்த புஸ்தகம்..

BOOK OF THE WARS OF THE LORD...

:::::::::::::::::::::::::::::::::::
விசுவாசிகள் யுத்தம் தவிர்க்க முடியாதது.. யுத்தம் செய்து எல்லைகளை சுதந்தரிக்கும் சுதந்திரம்.. பதிவு..
:::::::::::::::::::::::::::::::::::

 ஆர் என்னும் ஸ்தலத்துக்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம்

 *கர்த்தருடைய யுத்த புஸ்தகத்தில்* 

எழுதியிருக்கிறது. எண்ணாகமம் 21. 15

✨✨✨✨✨✨✨

♥️6. ஒரு ( ஜெய ) புஸ்தகம்

BOOK OF VICTORY..

:::::::::::::::::::::::::::::::::::
விசுவாசிகள் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் துரைத்தனங்களோடும் போராடி ஜெயிக்கும் ஜெய நிகழ்வுகள்.. பதிவு..
:::::::::::::::::::::::::::::::::::

யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கோடே யுத்தம் பண்ணினான். மோசேயும் ஆரோனும் ஊர் என்பவனும் மலையுச்சியில் ஏறினார்கள். 
மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள். அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான். 
மோசேயின் கைகள் அசந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள். அதின்மேல் உட்கார்ந்தான். ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள். இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது. 
யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான். 
பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, 

 *நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி* 

யோசுவாவின் செவிகேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார். மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு,அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான். 
யாத்திராகமம் 17:10-16

✨✨✨✨✨✨✨

பிரியமானவர்களே!!!

♥️சிறு புத்தகம்..

LITTLE SCROLL..

:::::::::::::::::::::::::::::::::::
மதுரமான வேத புத்தகம் நம் கையில்.. நம்முடைய புசிப்பு.. நம்முடைய நேரம்..
நம்முடைய கைக்கொள்ளுதல்.. பதிவு
::::::::::::::::::::::::::::::::::::

நான் வானத்திலிருந்து பிறக்கக்கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி: சமுத்திரத்தின்மேலும் பூமியின் மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல, நான் தூதனிடத்தில் போய்:

 *அந்தச் சிறு புஸ்தகத்தை* 

எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி, இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதுரமாயிருக்கும் என்றான். நான்

 *அந்தச் சிறு புஸ்தகத்தைத்* 

தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன், என் வாய்க்கு அது தேனைப்போல மதுரமாயிருந்தது, நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று. வெளிப்படுத்தினத விசேஷம் 10:8-10

✨✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628 003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST

✨✨✨✨✨✨✨


Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA