ரூத் புத்தகத்தில் பிதா, குமாரன், ஆவியானவர், சபை..இரட்சிப்பு..🌹🌹🌹🌹🌹🌹🌹🌹



BPF MORNING DEVOTION
DAILY MORNING PRAYER
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ரூத் புத்தகத்தில் பிதா, குமாரன், ஆவியானவர், சபை..இரட்சிப்பு..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

ஐந்து சுருள்கள் அல்லது ஐந்து மெகில்லோட்
 ( எபிரேய : חמש מגילות [χaˈmeʃ meɡiˈlot] , ஹமேஷ் மெகில்லோட் அல்லது சோமெய்ஷ் மெகில்லோஸ் ) என்பது தனாக்கின் ( எபிரேய பைபிள் ) மூன்றாவது பெரிய பிரிவான கெதுவிமின் (“எழுத்துக்கள்”) பகுதிகளாகும் .
 ஐந்து சுருள்கள் பாடல்களின் பாடல் , ரூத்தின் புத்தகம் , புலம்பல் புத்தகம் , பிரசங்கி மற்றும் எஸ்தர் புத்தகம் . இந்த ஐந்து ஒப்பீட்டளவில் குறுகிய விவிலிய புத்தகங்களும் யூத மரபில் ஒன்றாக தொகுக்கப்பட்டுள்ளன.
ரூத்
திருத்து
சில சமூகங்களில், குறிப்பாக அஷ்கெனாசிம்களால், ஷாவூத் தினத்தன்று காலையில் தோரா வாசிப்பதற்கு முன்பு ரூத் புத்தகம் ( רות ) படிக்கப்படுகிறது. மற்றவர்கள் இரவில் டிக்குனில் அதைப் படிக்கிறார்கள் ,
✨✨✨✨✨✨✨✨

ரூத் புத்தகம் & எஸ்தர் புத்தகம்...வேதத்தில் 2 பெண்கள் பெயரில் எழுதப்பட்டிருக்கிறது.
1. ரூத்... இரட்சிப்பின்உறுதிப்பாடு
2. எஸ்தர்.. இரட்சிப்பின் மகிழ்ச்சி
✨✨✨✨✨✨✨

💐இந்த நிகழ்வு நடைபெறும் பின்னணி...
இரட்சிப்பின் அவசியம்..
அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை. அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.
நியாயாதிபதிகள் 21:25
::::::::::::::::::::::::::::::::::::::::::

💐யூதா கோத்திரத்திற்கும் தாவீதின் கோத்திரத்திற்கும் ஏற்படுகிற இணைப்பு தான் ரூத் புத்தகம்
யூத மனுஷன் மோவாபிய பெண்ணை திருமணம்
( புற ஜாதி பெண்ணை )
நகோமி ... யூத பெண்மணி
போவாஸ்... யூத புருஷன்
ரூத்... புற ஜாதி பெண்
BC 1263-1123
உறவின் முறையான்..
இனத்தான்..
சுதந்திரவாளி..
Kinsman Redeemer...
13 முறை வருகிறது..
அவன் தகப்பனுக்குச் சகோதரர் இல்லாதிருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் வம்சத்தில் அவனுக்குக் கிட்டின உறவின்முறையானுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கவேண்டும், இது, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் புத்திரருக்கு நியாயவிதிப்பிரமாணமாய் இருக்கக்கடவது என்று சொல் என்றார். எண்ணாகமம் 27. 11
நகோமிக்கு அவளுடைய புருஷனாகிய எலிமெலேக்கின் உறவின்முறையில் போவாஸ் என்னும் பேருள்ள மிகுந்த ஆஸ்திக்காரனாகிய இனத்தான் ஒருவன் இருந்தான். ரூத் 2.1
அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவுசெய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள். பின்னும் நகோமி அவளைப் பார்த்து: அந்த மனுஷன் நமக்கு நெருங்கின உறவின் முறையானும் நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனுமாய் இருக்கிறான் என்றாள். ரூத் 2.20
நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின்முறையான் அல்லவா? இதோ, அவன் இன்று இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான். ரூத் 3.2
💐💐💐💐💐💐💐💐💐

நியாயாதிபதிகள், நியாயம் விசாரித்துவரும் நாட்களில்,
( யூ தா ) தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று. அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லகேம்
Another Bethlehem )
( யோசுவா 19:10,15
மூன்றாம் சீட்டு செபுலோன் புத்திரருக்கு விழுந்தது. அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரபங்குவீதம் சாரீத்மட்டுமுள்ளது.
காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,
யோசுவா 19:10,15)
 ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான்.
ரூத் 1:1
கர்த்தர் தம்முடைய ஜனங்களை சந்தித்தார்..
இது இரட்சிப்பின் மிக முக்கிய வார்த்தை..
கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடுகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து,
ரூத் 1:6
எல்லாரும் பயமடைந்து: மகாதீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
 லூக்கா 7:16
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

💐உபத்திரவ காலத்தில் சபை எடுத்துக்கொள்ளப்படும்..
இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள். வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லகேமுக்கு வந்தார்கள்
ரூத் 1:22
வாற்கோதுமை அறுப்பின் துவக்கம்..
உலகத்தின் இறுதி காலம்..
போவாஸ் போர்வையில் சபை இளைப்பாறுதல்..
::::::::::::::::::::::::::::::::::::::::::::

💐ரூத் புத்தக ஆசிரியர்
சாமுவேல்...
நகோமி தன் தோல்வியை ஒப்புக்கொண்டு அறிக்கை செய்கிறார்..
இது இரட்சிப்பின் மா பெரும் ஆயத்த படி..
அவர்கள் பெரியவர்களாகுமட்டும், புருஷருக்கு வாழ்க்கைப்படாதபடிக்கு, நீங்கள் பொறுத்திருப்பீர்களோ ? அது கூடாது. என் மக்களே, கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால், உங்கள் நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள்.
ரூத் 1:13
::::::::::::::::::::::::::::::::::::::

💐போவாஸ்.. இரட்சிப்பின் அதிபதி..
Captain of salvation..
ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.
எபிரேயர் 2:10
இரட்சிப்பின் 5 முக்கிய அம்சங்கள் இங்கே திரை விரிக்கப்படுகிறது..
1. உறவின் முறை
Kinsman redeemer
2. மீட்பு
Redemption
3. சுதந்திரம்
Inheritance
4. இரட்சிப்பின் முத்திரை
Seal of Salvation
5. சாத்தான் தோற்று போகுதல்
Satan.. Sin.. defeated
6. திருமணம் விவாகம்
Wedding or Marriage
ஆகையால், நீர் அதை ஊராருக்கு முன்பாகவும், என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்கு அறியப்பண்ணவேண்டும் என்றிருந்தேன். நீர் அதைச் சுதந்தரமுறையாக மீட்டுக்கொள்ள மனதிருந்தால், மீட்டுக்கொள்ளும். அதை மீட்டுக்கொள்ள மனதில்லாதிருந்தால், நான் அதை அறியும்படிக்கு எனக்குச் சொல்லும். உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர, அதை மீட்கத்தக்கவன் வேறோருவனும் இல்லை என்றான். அதற்கு அவன்: நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
ரூத் 4:4
அப்பொழுது போவாஸ்: நீர் நகோமியின் கையிலே அந்த வயல்நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவன் பேரை நிலைநிற்கப்பண்ணும்படிக்கு, அதை மரித்தவன் மனைவியாகிய மோவாபிய ஸ்திரீயான ரூத் கையிலும் வாங்கவேண்டியது என்றான்.
ரூத் 4:5
அப்பொழுது அந்தச் சுதந்தரவாளி: நான் என் சுதந்தரத்தைக் கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன். நான் மீட்கத்தக்கதை நீர் மீட்டுக்கொள்ளும். நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன் என்றான்.
ரூத் 4:6
மீட்கிறதிலும் மாற்றுகிறதிலும் சகல காரியத்தையும் உறுதிப்படுத்தும்படிக்கு, இஸ்ரவேலிலே பூர்வகால வழக்கம் என்னவென்றால், ஒருவன் தன் பாதரட்சையைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பான். இது இஸ்ரவேலிலே வழங்கின உறுதிப்பாடு.
ரூத் 4:7
அப்படியே அந்தச் சுதந்தரவாளி போவாசை நோக்கி: நீர் அதை வாங்கிக்கொள்ளும் என்று சொல்லி, தன் பாதரட்சையைக் கழற்றிப்போட்டான்.
ரூத் 4:8
::::::::::::::::::::::::::::::::::::::::::::::

🙏போவாஸ்...
1. நெருங்கிய உறவு 2:20
Close relative
2. மிகுந்த ஆஸ்திக்காரன் 2:1
Rich man
3. தேவ பக்தி உள்ளவன் 2:4
Godly master
4. உரிமை கொண்டாடுதல் 2:8
Possessive nature
5. பாதுகாப்பாவர் 2:9
Protector
6. உபசாரம் 2:9
Hospitality
7. கண்ணியமான மனிதன் 2:13
Notorious gentleman
8. பெத்லகேமியன்
Bethlehemanite
உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.
ரூத் 2:12
நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.
எபிரேயர் 6:18
:::::::::::::::::::::::::::::::::::::::::::

💐ரூத்... சபைக்கு ஒப்புமை
1. Firm girl.. பற்றிக்கொண்டாள்
2. Humble girl... தன்னை தாழ்த்துகிறாள்
3. Deserving girl... தகுதி உள்ள ஒரு பெண்
4. Moabite girl.. மோவாபிய பெண்
5. Decisive minded girl
தீர்மானம் எடுக்கும் பெண்
அந்த மனுஷனுடைய பேர் எலிமெலேக்கு, அவன் மனைவியின் பேர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர் கிலியோன். யூதாவிலுள்ள பெத்லகேம் ஊராகிய எப்பிராத்தியராகிய அவர்கள் மோவாப்தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிட்டார்கள்.
ரூத் 1:2
அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அதிகமாய் அழுதார்கள். ஒர்பாள் தன் மாமியை முத்தமிட்டுப்போனாள். ரூத்தோ அவளை விடாமல் பற்றிக்கொண்டாள்.
ரூத் 1:14
நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன். மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.
ரூத் 1:17
அவள் தன்னோடேகூட வர மனஉறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை.
ரூத் 1:18
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::

💐இரட்சிப்பில்
ஆவியானவர்
அப்பொழுது அவள்: நகோமி
🙏அவள்: பரிசுத்த ஆவியானவர்
🙏என் மகளே,
சபை
இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு.
 🙏அந்த மனுஷன்
கர்த்தர் இயேசு கிறிஸ்து
இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன்
🙏இளைப்பாறமாட்டான்
இரட்சிப்பு..
ரூத் 3:18
பரிசுத்த ஆவியானவர் சபை மேல் அதிக அக்கறை கொள்ளுகிறார்..
பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?
ரூத் 3:1
நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின்முறையான் அல்லவா? இதோ, அவன் இன்று இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்.
ரூத் 3:2
நீ குளித்து, எண்ணெய் பூசி, உன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப் போ. அந்த மனுஷன் புசித்தக் குடித்துத் தீருமட்டும் அவன் கண்ணுக்கு எதிர்ப்படாமலிரு.
ரூத் 3:3
அவன் படுத்துக்கொண்டபோது, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்திருந்து போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி நீ படுத்துக்கொள். அப்பொழுது நீ செய்யவேண்டியது இன்னதென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள்.
ரூத் 3:4
அதற்கு அவள்: நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள்.
ரூத் 3:5
::::::::::::::::::::::::::::::::::::::::::::

💐இரட்சிப்பின் சந்ததி...
Genealogy of Salvation...
பேரேசுடைய சந்ததி வரலாறு:
❤️பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்.
ரூத் 4:18
அது தன் கையை திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள். அதினாலே அவனுக்கு பாரேஸ் என்று பேரிடப்பட்டது.
ஆதியாகமம் 38:29
❤️எஸ்ரோன் ராமைப் பெற்றான்.
யூதாவினுடைய குமாரர் ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள். அவர்களில் ஏரும் ஓனானும் கானான்தேசத்தில் இறந்துபோனார்கள். பாரேசுடைய குமாரர் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
ஆதியாகமம் 46:12
❤️ராம் அம்மினதாபைப் பெற்றான்.
ரூத் 4:19
யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்,பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்,எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்.
மத்தேயு 1:3
🙏அம்மினதாப் நகசோனைப் பெற்றான்.
ஆரோன் அம்மினதாபின் குமாரத்தியும் நகசோனின் சகோதரியுமாகிய எலிசபாளை விவாகம்பண்ணினான். இவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலேயாசாரையும், இத்தாமாரையும் பெற்றாள்.
யாத்திராகமம் 6:23
❤️நகசோன் சல்மோனைப் பெற்றான்.
ரூத் 4:20
யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் குமாரன் நகசோன்.
எண்ணாகமம் 1:7
❤️சல்மோன் போவாசைப் பெற்றான். போவாஸ் ஓபேதைப் பெற்றான்.
ரூத் 4:21
ஓபேத் ஈசாயைப் பெற்றான். ஈசாய் தாவீதைப் பெற்றான்.
ரூத் 4:22
ஆராம் அம்மினதாபைப் பெற்றான்,அம்மினதாப் நகசோனைப் பெற்றான்,நகசோன் சல்மோனைப் பெற்றான்.
மத்தேயு 1:4
சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான், போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்,ஓபேத் ஈசாயை பெற்றான்.
மத்தேயு 1:5
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
What’s app
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹



Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA