_தேவனுடைய பிள்ளைகள் விலக வேண்டிய " அந்நியம்_

*SHALOM STEWARD THOUGHTS DISCERNS*
---------------------------
  சபைக்கு செய்தி
Message to the Church..
================
 _தேவனுடைய பிள்ளைகள் விலக வேண்டிய " அந்நியம்_


 *PROFANE* ..
meaning,, தெய்வ நிந்தனை..
 *Strange* ..
meaning,, 
விசித்திரமான..

::::::::::::::::::::::::::::::::::::::::::::

fane fire" is Leviticus 10:1-2, which describes the death of Nadab and Abihu, the sons of Aaron, for offering "strange fire" before the Lord. 

This "strange fire" was not the specific fire commanded by God for the altar, and they were consumed by fire from God for their disobedience. 

Elaboration

Leviticus 10:1:

Nadab and Abihu, sons of Aaron, took their censers, put fire in them, put incense on it, and offered "strange fire" before the Lord, which He had not commanded them. 
Leviticus 10:2:

God's fire consumed them, and they died before the Lord.

"Strange Fire":

The term "strange fire" refers to fire that was not sanctified or drawn from the designated source, likely the altar, as required by God's commands. 

Consequences of Disobedience:

The story of Nadab and Abihu is a cautionary tale about the importance of following God's prescribed rituals and the consequences of disobedience. 

Significance:

The incident highlights the holiness of God and the sacred nature of religious rituals. It also emphasizes the need for proper preparation and purification before approaching God. 

🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵🔵

 இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
உபாகமம் 6.4

பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தரவெளியிலும்

 @ அவர் அவனைக் கண்டுபிடித்தார்,

@ அவனை நடத்தினார், 

@ அவனை உணர்த்தினார், 

@ அவனைத் தமது கண்மணியைப்போலக் காத்தருளினார். 
உபாகமம் 32:10

தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் 

@;எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். 
ரோமர் 8:29

@ எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்,

 @ எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்,

@ எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். 
ரோமர் 8:30

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

கழுகு தன் கூட்டைக்கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டு போகிறதுபோல, 
உபாகமம் 32:11

கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார், அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை. 
உபாகமம் 32:12



1. *அந்நிய தூபம்..*
 *Strange Incence..*

அதின்மேல் *அந்நிய தூபத்தையாகிலும்,* தகனபலியையாகிலும், போஜனபலியையாகிலும் படைக்கவேண்டாம். அதின் மேல் பானபலியை ஊற்றவும்வேண்டாம்.
யாத்திராகமம் 30.9

கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். 
2 கொரிந்தியர் 2:14

இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம். 
2 கொரிந்தியர் 2:15

கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடப்பிக்கிறதற்கு எவன் தகுதியானவன்? 
2 கொரிந்தியர் 2:16

அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம் 
2 கொரிந்தியர் 2:17

2 கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.
 எபேசியர் 5:2

18 எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது. உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்த வாசனையும் தேவனுக்குப் பிரியமான உகந்த பலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்டபடியினால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்.
 பிலிப்பியர் 4:18

ஆரோன் காலைதோறும் அதின்மேல் சுகந்த தூபங்காட்டவேண்டும். மாலையில் விளக்கேற்றும்போதும் அதின்மேல் தூபங்காட்டக்கடவன். விளக்குகளை விளக்கும்போதும் அதின்மேல் தூபங்காட்டவேண்டும். 
யாத்திராகமம் 30:7

உங்கள் தலைமுறைதோறும் கர்த்தருடைய சந்நிதியில் காட்டவேண்டிய நித்திய தூபம் இதுவே. 
யாத்திராகமம் 30:8

அதின்மேல் அந்நிய தூபத்தையாகிலும், தகனபலியையாகிலும், போஜனபலியையாகிலும் படைக்கவேண்டாம். அதின் மேல் பானபலியை ஊற்றவும்வேண்டாம். 
யாத்திராகமம் 30:9

இந்த முறையின்படியே தைலங்கூட்டுகிறவனும், அதில் எடுத்து அந்நியன்மேல் வார்க்கிறவனும், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகக்கடவன் என்று சொல் என்றார். 
யாத்திராகமம் 30:33

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: சுத்த வெள்ளைப்போளமும் குங்குலியமும் அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கங்களையும் சுத்தமான சாம்பிராணியையும் நீ சமநிறையாக எடுத்து, 
யாத்திராகமம் 30:34

தைலக்காரன் செய்கிறதுபோல அதற்குப் பரிமளமேற்றி, துப்புரவான பரிசுத்த தூபவர்க்கமாக்கி, 
யாத்திராகமம் 30:35

அதில் கொஞ்சம் எடுத்துப் பொடியாக இடித்து, நான் உன்னைச் சந்திக்கும் ஆசரிப்புக் கூடாரத்திலிருக்கும் சாட்சி சந்நிதியில் வைப்பாயாக. அது உங்களுக்கு மகா பரிசுத்தமாயிருக்கக்கடவது. 
யாத்திராகமம் 30:36

இந்தத் தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறையின்படி உங்களுக்காகச் செய்துகொள்ளலாகாது. இது கர்த்தருக்கென்று உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக. 
யாத்திராகமம் 30:37

இதற்கு ஒப்பானதை முகருகிறதற்காகச் செய்கிறவன் தன் ஜனத்தில் இராதபடி அறுப்புண்டுபோகக்கடவன் என்றார். 
யாத்திராகமம் 30:38




2. *அந்நிய தேவன்..*
 *Other God..*

கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, ஆகையால், *அந்நிய தேவனை* நீ பணிந்துகொள்ளவேண்டாம்.
யாத்திராகமம் 34.14

கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார், *அந்நிய தேவன்* அவரோடே இருந்ததில்லை.
உபாகமம் 32:12

2 அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள். ஆதியாகமம் 35

4 அப்பொழுது அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபினிடத்தில் கொடுத்தார்கள். யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழே புதைத்துப் போட்டான். ஆதியாகமம் 35

13 நான் உங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம். அது உன் வாயிலிருந்து பிறக்கக்கேட்கப்படவும் வேண்டாம். யாத்திராகமம் 23

14 கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம். யாத்திராகமம் 34

14 உன் தேவனாகிய கர்த்தருடைய கோபம் உன்மேல் மூண்டு, உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடிக்கு, உங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களின் தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக. உபாகமம் 6

4 என்னைப் பின்பற்றாமல், அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்கள் உன் குமாரரை விலகப்பண்ணுவார்கள், அப்பொழுது கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும். உபாகமம் 7

16 உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாமலும், நீங்கள் வழிவிலகி அந்நிய தேவர்களைச் சேவித்து அவர்களை நமஸ்கரியாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள். உபாகமம் 11

 6 அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலும், அவைகளுக்கு ஆராதனைசெய்யாமலும், அவைகளைப் பணியாமலுமிருந்து, நான் உங்களுக்குத் தீமைசெய்யாதபடிக்கு உங்கள் கைகளின் செய்கைகளால் எனக்குக் கோபமுண்டாக்காமலும் இருங்கள் என்று சொல்லியனுப்பினேன். எரேமியா 25

5 ஆனாலும் அவர்கள் அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டாதபடிக்கு, என் சொல்லைக்கேளாமலும், பொல்லாப்பை விட்டுத் திரும்புவதற்குச் செவியைச் சாய்க்காமலும் போனார்கள். எரேமியா 44


3. *அந்நிய அக்கினி..*
 *Profane Fire..*

பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத *அந்நிய அக்கினியை* அருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.
லேவியராகமம் 10.1

4. *அந்நிய நுகம்..*
 *Unequal Yoke..*

 *அந்நிய நுகத்திலே* அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
2 கொரிந்தியர் 6.14

30 என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார் மத்தேயு 11

13 நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிராதபடிக்கு, நான் அவர்கள் தேசத்திலிருந்து உங்களைப் புறப்படப்பண்ணி, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர். லேவியராகமம் 26

2 கர்த்தர் கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும் ஊனமில்லாததும் நுகத்தடிக்கு உட்படாததுமாகிய சிவப்பான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லுங்கள். எண்ணாகமம் 19

13 இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து, உன் கட்டுக்களை அறுப்பேன். நாகூம் 1

29 நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன், என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். மத்தேயு 11

10 இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன். அப்போஸ்தலர் 15

1 ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள். கலாத்தியர் 5

5. *அந்நிய தேசம்..*
 *Strange Land..*

கர்த்தரின் பாட்டை *அந்நியதேசத்தில்* நாங்கள் பாடுவதெப்படி?
சங்கீதம் 137.4

ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, 
எபேசியர் 2:19

அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள். அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார். 
எபேசியர் 2:20

அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது. 
எபேசியர் 2:21



6. *அந்நிய தேவர்கள்..*
 *Strange Gods..*

அப்பொழுது அவன்: அப்படியானால், இப்பொழுதும் உங்கள் நடுவே இருக்கிற *அந்நியதேவர்களை* அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள் என்றான்.
யோசுவா 24.23

7. *அந்நிய பெண்..*
 *Strange Woman..*

இச்சகவார்த்தைகளைப் பேசும் *அந்நிய பெண்ணாகிய* பரஸ்திரீக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,
நீதிமொழிகள் 7.4

8. *அந்நிய காரியம்..*
 *Strange Thing..*

என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை *அந்நியகாரியமாக* எண்ணினார்கள்.
ஓசியா 8.12

ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, *அந்நிய காரியங்களில்* தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.
1 பேதுரு 4.15

9. *அந்நிய ஜனங்கள்..*
 *Heathens* ..

அவர்களுக்குப் புறஜாதிகளுடைய தேசங்களைக் கொடுத்தார், *அந்நிய ஜனங்களுடைய* பிரயாசத்தின் பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலூயா.
சங்கீதம் 105.45

10. *அந்நிய பாஷை..*
 *Another Tongue..*

பரியாச உதடுகளினாலும் *அந்நியபாஷையினாலும்* இந்த ஜனத்தோடே பேசுவார்.
ஏசாயா 28.11

11. *அந்நிய மாம்சம்..*
 *Strange Flesh..*

அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப்போல் விபசாரம்பண்ணி, *அந்நிய மாம்சத்தைத்* தொடர்ந்து நித்திய ஆக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
யூதா 1.7

12. *அந்நிய சத்தம்..*
 *Strange Voice..*

 *அந்நியருடைய சத்தத்தை* அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார்
யோவான் 10.5

 *பிரியமானவர்களே..*
 *அந்நிய போதனைகள்..*
 *Strange Doctrines..*

பலவிதமான *அந்நிய போதனைகளால்* அலைப்புண்டு திரியாதிருங்கள்.போஜனபதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது. போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லையே.
எபிரேயர் 13.9

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA