சபைக்கு செய்தி✨✨✨✨✨✨THOU AND THY FAMILY...... இவரும்...இவர் வீட்டாரும்
SHALOM STEWARD
ASSEMBLY MESSAGE
✨✨✨✨✨✨
சபைக்கு செய்தி
✨✨✨✨✨✨
THOU AND THY FAMILY
இவரும்...இவர்
வீட்டாரும்
✨✨✨✨✨✨
Father is the head of the family.
Christ is the head of the church.
We cannot seperate a man from his family.
✨✨✨✨✨✨
🍅 1. நோவாவும் வீட்டாரும்...
🍒 இரட்சிப்பு...
கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள். இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.
ஆதியாகமம் 7:1
எபி 11:7
:::::::::::::::::::
🍅 2. ஆபிரகாமும் வீட்டாரும்..
🍒 கீழ்ப்படிதல்..
நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?
கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றான்.
ஆதியாகமம் 18:19
:::::::::::::::::::
🍅 3. சபை மூப்பர்களும் வீட்டாரும்..
🍒 விசாரித்தல்..
தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.
ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?
1 தீமோத்தேயு 3:4-5
:::::::::::::::::::
🍅 4. யாக்கோபும் வீட்டாரும்..
🍒 தேவனுடைய வீட்டுக்கு செல்லுதல்
அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள்.
நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள். எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான்.
ஆதியாகமம் 35:2-3
:::::::::::::::::::
🍅 5. நாங்களும் வீட்டாரும்..
🍒 ஆராதித்தல்..
அதற்கு மோசே: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் படைக்கும் பலிகளையும் சர்வாங்க தகனபலிகளையும் நீர் எங்கள் கையிலே கொடுக்கவேண்டும்.
எங்கள் மிருகஜீவன்களும் எங்களோடேகூட வரவேண்டும். ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை. எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும். இன்னதைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது என்றான்.
யாத்திராகமம் 10:25-26
:::::::::::::::::::
🍅 6. லீதியாளும் வீட்டாரும்..
🍒 ஞாஸ்னானம் கீழ்ப்படிதல்
அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள். பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார்.
அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி; நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டில் வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.
அப்போஸ்தலர் 16:14-15
:::::::::::::::::::
🍅 7. சுவிசேஷகரும் வீட்டாரும்
🍒 இரட்சிப்பின் வார்த்தை அறிவித்தல்..
அவனோ தன் வீட்டிலே ஒரு தேவதூதன் நிற்கிறதைக் கண்டதாகவும், யோப்பா பட்டணத்திலிருந்து பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைக்கும்படிக்கு மனுஷரை அவ்விடத்திற்கு அனுப்பு.
நீயும் உன் வீட்டாரனைவரும் இரட்சிக்கப்படுவதற்கேதுவான வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்தத் தூதன் தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு அறிவித்தான்.
அப்போஸ்தலர் 11:13-14
...............................
🌺பிள்ளைகளே!!!!
♥️ நெகேமியாவும் வீட்டாரும்.
🍒 பாவ அறிக்கை செய்தல்..
உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக. நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம். நெகேமியா 1.6
:::::::::::::::::::::::::::
♥️ நானும் என் வீட்டாரும்..
🍒 கர்த்தரையே சேவிப்போம்...
கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள். நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்றான்.
யோசுவா 24:15
@yjones scriptures
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
Shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTAIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨
Comments
Post a Comment