SHALOM STEWARDSALVATION RESOURCES ✨✨✨✨✨✨இரட்சிப்பின் வளங்கள் 8✨✨✨✨✨✨உடுத்துவித்தல்...தரிப்பித்தல்...Clothing...& தரித்துக் கொள்ளுதல் Putting on...



SHALOM STEWARD
SALVATION RESOURCES

✨✨✨✨✨✨

இரட்சிப்பின் வளங்கள் 8

✨✨✨✨✨✨

உடுத்துவித்தல்...
தரிப்பித்தல்...
Clothing...

&

தரித்துக் கொள்ளுதல்
Putting on...

✨✨✨✨✨✨

Doctrine & Life

உபதேசமும் & ஜீவியமும்

✨✨✨✨✨✨

இரட்சிப்பின் வளங்கள் என்கிற இந்த பகுதியில் உடுத்துவித்தல் மற்றும் தரிப்பித்தல் தேவனுடைய பங்கு.
-----உபதேசம்

நம் பங்கு விசுவாசமும் தரித்துக் கொள்ளுதலுமே ஆகும்
----- ஜீவியம்

The phrase "garments of salvation" is a Biblical metaphor that compares clothing to entering God's presence. 

It appears in Isaiah 61:10. 

Explanation...

The clothing is not something that can be made or bought, but must be prepared and given by God. 

Examples of God's clothing include coats of skins, wedding garments, and the robe of righteousness. 

In the parable of the wedding feast for the king's son, one man tried to enter the feast in his own clothes, disdaining the wedding garment provided by the king. 

In Revelation 19:7-8, it says that when “the marriage of the Lamb is come,” 

His bride must be “arrayed in fine linen, clean and white”. 

✨✨✨✨✨✨


தேவனுடைய இரட்சிப்பின் தரிப்பித்தல் இறையாண்மை திரித்துவத்தில்

God's Salvation of clothing sovereignty in Trinity..


✨ பிதாவாகிய தேவன்..
உ டுத்தியிருக்கிறார்..
🍒----- நீதியை

அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் சீராவைத் தமது சிரசில் தரித்து, நீதிசரிக்கட்டுதலென்னும் வஸ்திரங்களை உடுப்பாக உடுத்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார். ஏசாயா 59.17

✨ குமரானகிய தேவன்..
உ டுத்தியிருக்கிறார்..
🍒---- இரட்சிப்பை

ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த வஸ்திரங்களுடையவராகவும், மகத்துவமாய் உடுத்திருக்கிறவராகவும், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார்? நீதியாய்ப் பேசி இரட்சிக்க வல்லவராகிய நான்தானே. 
ஏசாயா 63. 1

✨ பரிசுத்த ஆவியானவர்
உ டுத்தியிருக்கிறார்..
🍒.... வல்லமையை

 அப்பொழுது சணல்வஸ்திரம் தரித்தவரும் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷன் தம்முடைய வலதுகரத்தையும் தம்முடைய இடதுகரத்தையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லும் என்றும். பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவுபெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீருமென்று என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர்பேரில் ஆணையிடக் கேட்டேன். 
தானியேல் 12. 7

✨✨✨✨✨✨


♥️ தரித்தல்..
உடுத்துவித்தல் பற்றிய சத்தியங்கள்..
உபதேசம்...

♥️ Doctrine regarding Clothing...

♥️1. பாவ நிர்வாணம் மூடப்பட தோல் உடைகள் தேவனால் உடுத்தப்படுகிறது..

🍒=== இரட்சிப்புக்கு நிழல்

தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார். ஆதியாகமம் 3.21

♥️2. இரட்சிப்பை தொடர்ந்து நீதியின் தேவனால் சால்வை தரிப்பிக்கப்படுகிறது.

🍒 === நீதிமானாகுதல்

கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன், என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது, மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார். ஏசாயா 61.10

நீதியைத் தரித்துக்கொண்டேன். அது என் உடுப்பாயிருந்தது. என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது. 
யோபு 29. 14

♥️3. அனுதின பரிசுத்தமாகுதலுக்கு ஆசாரிய வஸ்திரங்கள் தேவ நியமம்..

🍒=== பரிசுத்தமாகுதல்

உன் சகோதரனாகிய ஆரோனும் அவனோடேகூட அவன் குமாரரும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ அந்த வஸ்திரங்களை அவர்களுக்கு உடுத்தி, அவர்களை அபிஷேகஞ்செய்து, அவர்களைப் பிரதிஷ்டைபண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக. யாத்திராகமம் 28., 41

♥️4. தேவன் உன்னதத்தில் இருந்து பெலனை தரிப்பிக்கிறார்..

🍒== ஆவியால் நிரப்பப்படுதல்

என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார். 
லூக்கா 24. 49

♥️5. ஊழியம் செய்ய தேவனுடைய நாமத்தை தரிப்பிக்கிறார்

🍒==== ஊழிய அர்ப்பணம்

 எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிப்பிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு,
 அப் 15. 26

♥️6. ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நித்தியத்தில் தேவன் தரிப்பிக்கும் வெண் வஸ்திரம்..

🍒== ஜெயமாகுதல்
 ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும், ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன். வெளிப்படுத்தினத விசேஷம் 3.5

✨✨✨✨✨✨



🌺 ஜீவியம்...
🌺 PRACTICE...

🌺 நடைமுறை வாழ்க்கையில் நாம் எதை தரித்துக்கொள்ள வேண்டும்?

🍅1. ஒளியின் ஆயுதங்களை..

இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று, ஆகையால் அந்தகாரத்தின்கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம். ரோமர் 13.12

🍅2. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை..

 துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள். ரோமர் 13.12

 ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. கலாத்தியர் 3.21

🍅3. கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை..

 இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக. கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக் கொண்டிருக்கிறேன். கலாத்தியர் 6.17

🍅4. புதிய மனுஷனை..

மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். எபேசியர் 4.25

🍅5. தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை..

நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். எபேசியர் 6.11

🍅6. புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனை..

தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே. கொலோசெயர் 3.3

🍅7. நற்குணங்களை..

 ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு. கொலோசெயர் 3.12

🍅8. பாதுகாப்பு கவசங்களை..

பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.
 1 தெசலோ 5.8

🍅9. பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பை..

இவை எல்லாவற்றிலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள். கொலோ 3.14

✨✨✨✨✨✨

❤️‍🔥ஆயுதமாகிய சிந்தை தரிப்போம்..

 இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள். 1 பேதுரு 4. 1

God bless the readers and the scribe..

✨✨✨✨✨✨✨

TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com 
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA