சபைக்கு செய்தி🌹🌹🌹🌹🌹🌹🌹தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொள்ளுதல்..MEASURING THEMSELVES WITH THEMSELVES
SHALOM STEWARD
ASSEMBLY MESSAGE
🌹🌹🌹🌹🌹🌹🌹
சபைக்கு செய்தி
🌹🌹🌹🌹🌹🌹🌹
தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொள்ளுதல்..
MEASURING THEMSELVES WITH THEMSELVES
🌹🌹🌹🌹🌹🌹🌹
❤️தியான வசனம்:
ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம். தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல.
2 கொரிந்தியர் 10:12
In 2 Corinthians 10:12, Paul states that he and his fellow apostles do not dare to classify or compare themselves with those who commend themselves, and that those who measure and compare themselves are without understanding.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Here's a more detailed breakdown of the verse:
"For we do not dare to classify or compare ourselves with some of those who commend themselves"
: Paul is stating that he and his fellow apostles do not boast or compare themselves with others who are self-promoting.
"but when they measure themselves by themselves and compare themselves with themselves, they are without understanding"
: Paul is saying that those who are self-promoting are lacking in wisdom and understanding because they are only focused on themselves and not on God's work.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌹 விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் அனுதினம் முன்னேறிச் செல்ல வேண்டியது அவசியம். அதற்கு அநேக ஏதுக்களை தேவன் வைத்திருக்கிறார். அனேக முன்மாதிரிகளை தேவன் வைத்திருக்கிறார். மேகம் போன்ற திரளான சாட்சிகள் வேதத்தில் நாம் பார்க்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக நம்முடைய அளவுகோல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதும்
நம்முடைய அளவுகோல் கர்த்தருடைய வசனம் என்பதும் விசுவாசிகள் நன்கு அறிந்திருத்தல் வேண்டும்.
மேகம் போன்ற திரளான சாட்சிகள் நம்மை சூழ்ந்து கொண்டு இருந்தாலும் விசுவாசத்தை துவக்குறவரும் முடிக்கிறவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவரை மட்டும் நாம் பின்பற்றி ஓட என்று வேதம் கூறுகிறது.
🌹 இன்றைக்கு தங்களைத் தாங்களே ஒப்பிடுகிற சில காரியங்களை குறித்து நாம் சிந்திப்போம்.
🌹 இது பெருமை என்று சொல்வதை விட. இது ஒரு சைக்காலஜிக்கல் இது ஒரு மன நோய் சம்பந்தப்பட்டது என்றே கூறலாம்.
🌹பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார் தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் என்பதை எல்லாரும் அறிந்திருக்கிறோம்.
🌹 மாத்திரம் அல்ல வேதம் உன்னில் அன்பு கூறுவது போல என்கிற இந்த வார்த்தை கூறுகிறது.
🌹 அதை அனேகர் " First Love Yourself " என்கிறார்கள்.. சரிதான் முதலாவது நம்மை நாம் நேசிக்க வேண்டும்.
🌹ஆனால் இன்றைக்கு நாம சிந்திக்க போவது தங்களை அளவுகோலாக வைத்து தங்களுடைய வாழ்க்கையை முன்னேறி போகிறது என்பது என்ன என்பதை நாம் பார்ப்போம்.
🌹நம்மில் யாரும் பூரணர் அல்ல..
பூரணர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.
பூரண வெளிப்பாடு கர்த்தருடைய வார்த்தை..
🌹 ஒரு bible Counsellor வேதாகம ஆலோசகர் இவ்வாறு கூறுகிறார்..
" சாத்தான் ஒரு விசுவாசியின் மனதில் அல்லது இருதயத்தில் தான் சிங்காசனம் அமைத்து தான் ஆளுகை செய்ய விரும்பவே மாட்டான்.. மாறாக அந்த விசுவாசி தாமாக சிந்தித்து சுய விருப்பத்தின்படி வாழவே விரும்புகிறான் "..
🌹இந்த சாத்தானின் யுக்திகள் தான் தன்னை தானே என்கிற யுக்தி ஆகும்.
இது இன்றைக்கு அநேக விசுவாசிகள், மூப்பர்கள், ஊழியர்கள் இந்த trap வலையில் இழுக்கப்பட்டு மீண்டும் மாம்சம் என்கிற அடிமைத்தனத்திற்குள் சென்று தங்களையும் தங்கள் குடும்பத்தையும் தங்கள் சபையையும் தவறாக வழிநடத்துகிறார்கள்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🎑 சாத்தானின் யுக்திகளை கவனியுங்கள்..
🎑1. தன்னை ஒரு பொருட்டென்று எண்ணுதல்..
🙏THINKING THEY ARE SOMETHING..
ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்.
கலாத்தியர் 6:3
Galatians 6:3 states, "If anyone thinks they are something when they are not, they deceive themselves".
::::::::::::::::::::::::::::::::::::
🎑2. தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுதல்..
🙏COMMENDING THEMSELVES..
🎑3. தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொள்ளுகிறவர்கள்..
🙏MEASURING THEMSELVES..
🎑4. தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிறவர்கள்..
🙏COMPARING THENSELVES..
ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம். தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல.
2 கொரிந்தியர் 10:12
::::::::::::::::::::::::::::::::::::
🎑5. தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணுகிறவர்கள்..
🙏THINKING HE IS GODLINESS
உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.
யாக்கோபு 1:26
::::::::::::::::::::::::::::::::::::
🎑6. தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணுகிறவர்கள்..
🙏THINK OF HIMSELF MORE HIGHLY THAN OUGHT TO THINK
அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது: உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத்தேவன் பகிர்ந்தவிசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.
ரோமர் 12:3
::::::::::::::::::::::::::::::::::::
🎑7. தன்னை ஞானியென்று எண்ணுகிறவர்கள்..
🙏SEEMS OR THINKING TO BE WISE..
ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக. இவ்வுலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.
1 கொரிந்தியர் 3:18
::::::::::::::::::::::::::::::::::::
🎑8. தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவர்கள்..
🙏WHO THINKS HE STANDS..
இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.
1 கொரிந்தியர் 10:12
::::::::::::::::::::::::::::::::::::
🎑9. தன்னைத்தான் புகழுகிறவர்கள்..
🙏WHO COMMENDS THENSELVES..
தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.
2 கொரிந்தியர் 10:18
::::::::::::::::::::::::::::::::::::
🎑10. தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதுள்ளவர்கள்...
ONE WHO WANTS TO JUSTIFYHIMSELF..
🙏 அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான்.
லூக்கா 10:29
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
❤️சபையின் பிள்ளைகளாகிய நாம்... நான்... என்ன செய்ய வேண்டும்?
❤️1. வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும்..
💐TAKING HEED ACCORDING TO THE WORD OF GOD..
வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே.
சங்கீதம் 119:9
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம். தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்.
1 யோவான் 5:18
::::::::::::::::::::::::::::::::::::
❤️2. சிறுபிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்த வேண்டும்..
💐HUMBLES AS THIS LITTLE CHILD..
ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.
மத்தேயு 18:4
::::::::::::::::::::::::::::::::::::
❤️3. தன்னைத்தான் வெறுத்தல் வேண்டும்..
💐DENYING ONESELF..
பின்பு அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து. ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
மாற்கு 8:34
::::::::::::::::::::::::::::::::::::
❤️4. தன்னைக் குற்றவாளியாக்காதல் வேண்டும்..
💐WHO NOT CONDEMN HIMSELF..
உனக்கு விசுவாசமிருந்தால் அது தேவனுக்குமுன்பாக உன்மட்டும் இருக்கட்டும். நல்லதென்று நிச்சயித்த காரியத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான்.
ரோமர் 14:22
::::::::::::::::::::::::::::::::::::
❤️5. தன்னைத்தானே சோதித்தறிதல் வேண்டும்..
💐EXAMINE HIMSELF..
எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.
1 கொரிந்தியர் 11:28
::::::::::::::::::::::::::::::::::::
❤️6. அன்பு தன்னைப் புகழாது
💐LOVE NOT PARADE HIMSELF..
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது. அன்புக்கு பொறாமையில்லை. அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது.
1 கொரிந்தியர் 13:4
::::::::::::::::::::::::::::::::::::
❤️7. தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்த்தல் வேண்டும்..
💐 EXAMINE OUR OWN WORK..
அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன். அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மை பாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.
கலாத்தியர் 6:4
::::::::::::::::::::::::::::::::::::
❤️8. தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளுதல் வேண்டும்..
💐 CLEANSES HIMSELF..
ஆகையால் ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.
2 தீமோத்தேயு 2:21
::::::::::::::::::::::::::::::::::::
❤️ சபையின் பிள்ளைகளே!!!
💐 ( சபையாக )தன்னை ஆயத்தம்பண்ணுவோம்..
MAKE ONSELF ( CHURCH ) READY..
நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.
வெளிப்படுத்தினத விசேஷம் 19:7
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628 003
Shalomjjj@gmail.com
What'sapp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESU'S CHRIST
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Comments
Post a Comment