நியாயப்பிரமாணம் சாபமா ? IS LAW A CURSE ?✨✨✨✨✨✨✨ கலாத்தியர் நிருபத்தின் கதிர்கள் Glimpses of Galatians Epistle
SHALOM STEWARD
BIBLICAL REVELATION
✨✨✨✨✨✨✨
நியாயப்பிரமாணம் சாபமா ?
IS LAW A CURSE ?
✨✨✨✨✨✨✨
கலாத்தியர் நிருபத்தின் கதிர்கள்
Glimpses of Galatians Epistle
✨✨✨✨✨✨✨
முகவுரை :
நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான்.. நல்லது தான்..
ஜீவனுள்ளது..
ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது.
இப்படியிருக்க...
நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ?
🌺அப்படியல்ல,
பாவமே எனக்கு மரணமாயிற்று, பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக் கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று.
ரோமர் 7:12-13
✨✨✨✨✨✨✨
🌺 நியாயப்பிரமாணம் பற்றி அப் பவுல் கலாத்தியருக்கு என்ன கூறுகிறார்? கவனியுங்கள்
🍒1. நியாயப்பிரமாணம் அடிமைத்தனம்..
கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாகும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.
கலாத்தியர் 2:4
🍒2. நியாயப்பிரமாணம் நீதி கொண்டு வராது..
நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை. நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.
கலாத்தியர் 2:21
🍒3. மனுஷன் நீதிமானாக முடியாது..
புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப் படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.
கலாத்தியர் 2:15, 3:11
🍒4. ஆவியைப் பெற முடியாது..
ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?
இத்தனை பாடுகளையும் வீணாய்ப் பட்டீர்களோ? அவைகள் வீணாய்ப்போயிற்றே
அன்றியும் உங்களுக்கு ஆவியை அவித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்?
கலாத்தியர் 3:3-5
🍒5. கிரியைக்காரர்கள் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்..
நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள். நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.
மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.
கலாத்தியர் 3:10&13
🍒6. விசுவாசத்திற்குரியதல்ல..
நியாயப்பிரமாணமோ விசவாசத்திற்குரியதல்ல. அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.
கலாத்தியர் 3:12
🍒7. வாக்குத்தத்தத்திற்கு 400 வருடம் பிந்தினது..
ஆதலால் நான் சொல்லுகிறதென்னவெனில், கிறிஸ்துவை முன்னிட்டுத் தேனால் முன் உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருஷத்திற்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது தள்ளி, வாக்குத்தத்தத்தை வியர்த்தமாக்கமாட்டாது.
கலாத்தியர் 3:17
🍒8. ஆனாலும் வாக்குத்தத்தங்களுக்கு விரோதம் அல்ல..
அப்படியானால், நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே. உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.
கலாத்தியர் 3:21
🍒9. சுதந்திரம் உண்டாகாது..
அன்றியும், சுதந்தரமானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிராது. தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே.
கலாத்தியர் 3:18
🍒10. உயிரைக் கொடுக்காது
அப்படியானால், நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே. உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.
கலாத்தியர் 3:21
🍒11. நம்மைக் காவலில் வைத்திருந்தது..
ஆதலால் விசுவாசம் வருகிறதற்குமுன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல் பண்ணப்பட்டிருந்தோம்.
கலாத்தியர் 3:23
🍒12. பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.
அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.
கலாத்தியர் 3:22
🍒13. கிறிஸ்துவை விட்டு பிரிக்கிறது ( மீண்டும் நியாயப்பிரமாண த்திற்கு திரும்பும் போது )
நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து, கிருபையினின்று விழுந்தீர்கள்.
கலாத்தியர் 5:4
🍒14. கிருபையினின்று விழுந்தீர்கள்..
நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து, கிருபையினின்று விழுந்தீர்கள்.
கலாத்தியர் 5:4
🍒15. சுய நீதி உண்டாகிறது..
நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய்த் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்,
பிலிப்பியர் 3:9
🌹16. பெலனற்றது..
ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது. துன்மார்க்கன் நீதிமானை வளைந்து கொள்கிறான். ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது.
ஆபகூக் 1:4
✨✨✨✨✨✨✨
🌺அப்படியானால் நியாயப்பிரமாணம்... விரோதமா? அல்லவே..
🍒 கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தி
( Pedagogue... Child Trainer )
✨✨✨✨✨✨✨
இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது.
கலாத்தியர் 3:24
🍒 விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.
கலாத்தியர் 3:25
🍒 நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே.
கலாத்தியர் 3:26
🍒 ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.
கலாத்தியர் 3:27
🍒 யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை. நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.
கலாத்தியர் 3:28
🍒 நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள். கலாத்தியர் 3:29
✨✨✨✨✨✨✨
LAW OR FAITH?
"தன் விசுவாசத்தின்" மகத்துவம்..
Root verse :
வேர் வசனம்..
.... *தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.*
ஆபகூக் 2:4b
1. தன் விசுவாசம்
2. நீதிமான்
3. பிழைப்பான்
இந்த வேர் வசனத்தை 3 இடங்களில் அப் பவுல் குறிப்பிடுகிறார்..
1. எபிரேயர் நிருபம்..
தன் விசுவாசத்தினால்...
2. ரோமர் நிருபம்..
நீதிமான்...
3. கலாத்தியர் நிருபம்..
பிழைப்பான்..
என்ன நிபந்தனை?
ON WHICH CONDITION?
1. எபிரேயர் நிருபம்..
*விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்,* பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.
நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.
எபிரேயர் 10:39
2. ரோமர் நிருபம்..
*விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்* என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.
ரோமர் 1:17
3. கலாத்தியர் நிருபம்..
நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், *விசவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்* என்று எழுதியிருக்கிறதே.
கலாத்தியர் 3:11
God bless the Readers and the Scribe..
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
Shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERED TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment