சபைக்கு செய்தி :விசுவாசியின் சரீரம் BODY OF BELIEVER 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


சபைக்கு செய்தி :

விசுவாசியின் சரீரம் 

BODY OF BELIEVER 

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

ஆவி ஆத்துமா சரீரம்

விசுவாசியின் சரீரம்..

சரீரம் என்பது ஆவி, ஆத்துமாவுடன் இணைந்தது என்பதை நினைவில் கொள்க..

தியான வசனம் :

சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. 
1 தெசலோனிக்கேயர் 5:23

🙏Bமாம்சம் 
🙏சரீரம் 
🙏தேகம் 
🙏பூமிக்குரிய கூடாரம் 
🙏தேவனுடைய ஆலயம் 

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

💐நம் சரீரம் பற்றிய தேவனுடைய கிரியை :

❤️1. சரீரத்தை தேவன் உருவாக்கினார் 
Created by God

1 கொரி 8:6, யோபு 33:4-6
சங்கீதம் 139

❤️2. சரீரத்தை நிலைப்படுத்துகிறார் 
Sustained by God 

அப் 17:28

❤️3. சரீரத்துக்கு இரட்சகர் 
Saviour of God

எபே 5:23

❤️4. சரீரம் நித்திரை அடைகிறது 
Body sleeps 

1 கொரி 15:51, அப் 7:60, 1 தெச 4:13

❤️5. சரீரம் பாதுகாக்கப்படுகிறது.
Body is preserved 

எபே 4:30, யூதா 9, ரோ 8:11, 1 கொரி 15:23

❤️6. சரீரம் உயிர்த்தெழுகிறது.
Body is resurrected 

2 கொரி 4:14, ரோம 8:11, 8:23

❤️7. சரீரம் மீட்கப்படுகிறது.
Body is redeemed 

ரோம 8:23

❤️8. சரீரம் மகிமைப்படுதப்படுகிறது.
Body is glorified.

பிலி 3:21, 1 யோவான் 3:2

❤️9. சரீரம் மறு ரூபம் அடைகிறது.
Body reincarnatiin..

1 கொரி 15:40-57

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


💐நம் சரீரம் பற்றிய நம் பொறுப்பு :

🌹POSITIVE DO'S...

❤️1. நம் சரீரத்தை பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ள வேண்டும்..

நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து, 
தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல்,
உங்களில் அவனவன் தன்தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:
இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும். முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார். 
தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். 
ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்தஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான். 
1 தெசலோனிக்கேயர் 4:3-8

❤️2. நம் சரீரத்தில் கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை தரித்து கொள்ள வேண்டும்.

இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக. கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக் கொண்டிருக்கிறேன். 
கலாத்தியர் 6:17

❤️3. நம் சரீரம் பிறருக்கு உதவி செய்ய பயன்பட வேண்டும்.

ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, 
உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? 
அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும். 
யாக்கோபு 2:15-17

❤️4. நம் சரீரத்தினால் தேவனை மகிமைப்படுத்த வேண்டும்..

உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? 
கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே. ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். 
1 கொரிந்தியர் 6:19-20

❤️5. கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவார்..

நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும். 
பிலிப்பியர் 1:20

❤️6. நம் சரீரத்தை ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும்..

அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. 
ரோமர் 12:1

❤️7. நம் சரீரத்தை ஓடுக்கி கீழ்ப்படுத்த வேண்டும்.

பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள்.அவர்கள் அழிவுள்ள கீரிடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். 
ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன். ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன். 
மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன். 
1 கொரிந்தியர் 9:25-27

❤️8. நம் சரீரத்தை நீதிக்குரிய ஆயுதங்களாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.

ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. 
நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். 
ரோமர் 6:12-13

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌹 NEGATIVE DO'S

❤️1. நம் சரீரத்தின் செய்கைகளை அழித்து போட வேண்டும்..

மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள், ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். 
ரோமர் 8:13

❤️2. நம் சரீரத்தின் அவயவங்களை அழித்து போட வேண்டும்..

ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளை உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள். 
கொலோசெயர் 3:5

❤️3. நம் சரீரம் இடறல் உண்டாக்கினால்?

உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு, நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். 
மத்தேயு 18.8

உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு, இரண்டு கண்ணுடையவனாய் எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். 
மத்தேயு 18.9

கர்த்தர் சபையாரை சத்தியத்திற்கு நேராக நடத்துவாராக!!

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
shalomjjj@gmail.com
Whatsapp 
+91 9965050301

CHRISTIANS GATHERED TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA