அருளுரை துளிகள் இந்தக் கல்..இந்தக் கற்கள்..THIS STONE...THESE STONES...


Christian Believers Assembly: EXODUS TV
அருளுரை துளிகள் 

இந்தக் கல்..
இந்தக் கற்கள்..

THIS STONE...
THESE STONES...

தியான வசனம்..

இந்தக் கல்...
நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும். தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான். ஆதியாகமம் 28.22

இந்தக் கற்கள்..
நாளை இந்தக் கற்கள் ஏதென்று உங்கள் பிள்ளைகள் உங்களைக் கேட்கும்போது, 
நீங்கள்: கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது. யோர்தானைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோயிற்று. ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான். 
யோசுவா 4:6-7

✨✨✨✨✨✨✨

புதிய ஏற்பாடு சத்தியம்..

ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, 
அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள். அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார். 
அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது. 
எபேசியர் 2:21

✨✨✨✨✨✨

இந்தக் கல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து..

சபைக்கு தலை..

அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். 
சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 
இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான், மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். 
மத்தேயு 16:16-17

மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. 
மத்தேயு 16:18

✨✨✨✨✨✨✨

ஜீவனுள்ள கல்..
ஜீவனுள்ள கற்கள்..

LIVING STONE..
LIVING STONES..

மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற *ஜீவனுள்ள கல்லாகிய* அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும். 
1 பேதுரு 2:4

 *ஜீவனுள்ள கற்களைப்போல* ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்தஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள். 
1 பேதுரு 2:5

அந்தப்படியே: இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லை சீயோனில் வைக்கிறேன். அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது. 
1 பேதுரு 2:6

ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது. கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று
1 பேதுரு 2:7

 *இந்தக் கற்கள்...
திருச்சபைக்கு அடையாளம்* 

1. நியாயவிதி மார்பத்தக்கம் 

BREAST PLATE OF JUDGEMENT..

இரத்தினக்கற்கள்..

நியாயவிதி மார்ப்பதக்கத்தையும் விசித்திரவேலையாச் செய்வாயாக. அதை ஏபோத்து வேலைக்கு ஒப்பாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்வாயாக. 
யாத்திராகமம் 28:15

அதிலே நாலு பத்தி *இரத்தினக்கற்களை* நிறையப் பதிப்பாயாக. முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும், 
யாத்திராகமம் 28:17

 *இந்தக் கற்கள்* இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்கள் அவைகளில் வெட்டப்பட்டவைகளுமாய் இருக்கவேண்டும். பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொன்றினுடைய நாமம் ஒவ்வொன்றிலே முத்திரைவெட்டாய் வெட்டியிருக்கவேண்டும். 
யாத்திராகமம் 28:21
யாத் 39:14

 2. யோர்தான் கரை கில்கால்..

நாளை இந்தக் கற்கள் ஏதென்று உங்கள் பிள்ளைகள் உங்களைக் கேட்கும்போது, 
யோசுவா 4:6

நீங்கள்: கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது. யோர்தானைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோயிற்று. ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான். 
யோசுவா 4:7

அவர்கள் யோர்தானில் எடுத்துக்கொண்டுவந்த அந்தப் *பன்னிரண்டு கற்களையும்* யோசுவா கில்காலிலே நாட்டி, 
யோசுவா 4:20

இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நாளை உங்கள் பிள்ளைகள் இந்தக் கற்கள் ஏதென்று தங்கள் பிதாக்களைக் கேட்கும்போது, 
யோசுவா 4:21

நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வெட்டாந்தரை வழியாய் இந்த யோர்தானைக் கடந்துவந்தார்கள். 
யோசுவா 4:22

3. ஆட்டுக்குட்டி யானவருடைய மணவாட்டி 


பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி, 
வெளிப்படுத்தினத விசேஷம் 21:9

நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித *இரத்தினங்களினாலும்* அலங்கரிக்கப்பட்டிருந்தன, முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம், 
வெளிப்படுத்தினத விசேஷம் 21:19

ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே. 
வெளிப்படுத்தினத விசேஷம் 21:20

இந்தக் கல் இந்தக் கற்களோடு நித்திய உடன்படிக்கைக்கு அடையாளமாகும்..

shalomjjj@gmail.com 
WhatsApp 
+91 9965050301
TCBA TUTICORIN 3


https://youtu.be/JfrG34yROpY?si=OtTJlO6-Bb_UyvKd
 https://youtu.be/JfrG34yROpY?si=14CI5bs7sKjpX7eY



Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA