TAM TRUST MEETBIBLE BHAVAN 11.02.2025 இரட்சிப்பிலும் ஊழியத்திலும் தேவனுடைய 5 பாக்கியங்கள்..பவுலாகிய நான்.
https://www.youtube.com/live/fme8Y4NUMns?si=Qsws8kJbpcV_SIrx
TAM TRUST MEET
BIBLE BHAVAN
11.02.2025
இரட்சிப்பிலும் ஊழியத்திலும் தேவனுடைய 5 பாக்கியங்கள்
5 PRIVILEGES GOD HAS SHOWN IN SALVATION & EVANGELISM
1. முன்குறித்தல்
PREDESTINED
2. தெரிந்து கொள்ளுதல்
ELECTED
3. அழைத்தல்
CALLED
4. அங்கீகரித்தல்
ACCEPTED
( It's not church commendation )
5. சுதந்தரித்தல்
INHERITANCE
ஊழியத்தின் கிரியைகள் :
ஆவிக்குரிய வரங்கள்
ஆவிக்குரிய கனிகள்
✨✨ பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன், அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது, அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள், அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம், ஆவியானவரும் ஆம் என்று திருவுளம் பற்றுகிறார் என்று சொல்லிற்று.
வெளிப்படுத்தினத விசேஷம் 14:13
✨✨ உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.
வெளிப்படுத்தினத விசேஷம் 2:19
✨✨ உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.
ரூத் 2:12
✨✨ இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார், அவர் தமது புயத்தினால் அரசாளுவார்;, இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது, அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது.
ஏசாயா 40:10
✨✨ இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
வெளிப்படுத்தினத விசேஷம் 22:12
✨✨ ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியுஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.
எபிரேயர் 6:10
✨✨✨✨✨✨✨
*பவுல் ஆகிய நான்..*
✨✨ வாழ்த்துதலில்..
சகோதரரெல்லாரும் உங்களை வாழ்த்துகிறார்கள். ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள். பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன்.
1 கொரிந்தியர் 16:20-21
பவுலாகிய நான் என் கையினால் எழுதி, உங்களை வாழ்த்துகிறேன். நான் கட்டப்பட்டிருக்கிறதை நினைத்துக்கொள்ளுங்கள். கிருபை உங்களோடிருப்பதாக ஆமென்.
கொலோசெயர் 4:18
பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், நிருபங்கள்தோறும் இதுவே அடையாளம். இப்படியே எழுதுகிறேன்.
2 தெசலோனிக்கேயர் 3:17
✨✨ புத்தி சொல்லுதலில்..
உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாயும், கண்டிப்பாயும் இருக்கிற பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்னிட்டு உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
2 கொரிந்தியர் 10:1
✨✨ உபதேசத்தில்...
இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால், கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஐனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
கலாத்தியர் 5:2
✨✨
இதினிமித்தம், பவுலாகிய நான் புறஜாதியாராயிருக்கிற உங்கள்பொருட்டுக் கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டுண்டவனாயிருக்கிறேன். உங்களுக்காக எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற தெய்வகிருபைக்குரிய நியமமும் இன்னதென்று கேட்டிருப்பீர்களே.
எபேசியர் 3:1-2
✨✨
அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது. அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.
கொலோசெயர் 1:23
✨✨
ஆகையால், பவுலாகிய நான் முதிர்வயதுள்ளவனாகவும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் இப்பொழுது கட்டப்பட்டவனாகவும் இருக்கிறபடியால்,
பிலேமோன் 1:8
✨✨
பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். நீர் உம்மைத்தாமே எனக்குக் கடனாகச் செலுத்த வேண்டுமென்று நான் உமக்குச் சொல்ல வேண்டியதில்லையே.
பிலேமோன் 1:19
✨✨✨✨✨
*பவுல் தரிசனங்கள்*
அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது.
அப்போஸ்தலர் 9:3
அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக்கேட்டான்.
அப்போஸ்தலர் 9:4
அதற்கு அவன்; ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்; நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.
அப்போஸ்தலர் 9:5
✨✨
அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று. அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்துநின்று; நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது.
அப்போஸ்தலர் 16:9
அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக்கொண்டு, உடனே மக்கெதொனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி,
அப்போஸ்தலர் 16:10
✨✨
இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி; நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே.
அப்போஸ்தலர் 18:9
நான் உன்னுடனேகூட இருக்கிறேன். உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை. இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.
அப்போஸ்தலர் 18:10
✨✨
பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்திலே ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், ஞானதிருஷ்டியடைந்து, அவரைத் தரிசித்தேன்.
அப்போஸ்தலர் 22:17
அவர் என்னை நோக்கி; நீ என்னைக் குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆதலால் நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாய் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார்.
அப்போஸ்தலர் 22:18
✨✨
மிகுந்த கலகம் உண்டாணபோது, பவுல் அவர்களால் பீறுண்டுபோவானென்று சேனாபதி பயந்து, போர்ச்சேவகர் போய், அவனை அவர்கள் நடுவிலிருந்து இழுத்துக் கோட்டைக்குக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டான்.
அப்போஸ்தலர் 23:10
அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று; பவுலே, திடன்கொள். நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சி கொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார்.
அப்போஸ்தலர் 23:11
✨✨
அநேகநாள் அவர்கள் போஜனம் பண்ணாமல் இருந்தபோது, பவுல் அவர்கள் நடுவிலே நின்று: மனுஷரே, இந்த வருத்தமும் சேதமும் வாராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு, கிரேத்தாதீவை விட்டுப்புறப்படாமல் இருக்கவேண்டியதாயிருந்தது.
அப்போஸ்தலர் 27:21
ஆகிலும், திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது.
அப்போஸ்தலர் 27:22
ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று;
அப்போஸ்தலர் 27:23
பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்குமுன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான்.
அப்போஸ்தலர் 27:24
✨✨
மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே. ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.
2 கொரிந்தியர் 12:1
கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.
2 கொரிந்தியர் 12:2
அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக் கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்.
2 கொரிந்தியர் 12:3
அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன். தேவன் அறிவார்.
2 கொரிந்தியர் 12:4
இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன். ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களிலேயன்றி, வேறொன்றிலும் மேன்மை பாராட்டமாட்டேன்.
2 கொரிந்தியர் 12:5
அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.
2 கொரிந்தியர் 12:7
அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.
2 கொரிந்தியர் 12:8
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும். பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாரட்டுவேன்.
2 கொரிந்தியர் 12:9
✨✨
Comments
Post a Comment