SAINT'S FIRM FAITH...பரிசுத்தவான்களின் உறுதியான நம்பிக்கை..
SAINT'S FIRM FAITH...
பரிசுத்தவான்களின் உறுதியான நம்பிக்கை..
✨✨✨✨✨✨✨
1. விடுவிக்காமற்போனாலும்..
நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.
தானியேல் 3:18
🌺 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ... In refusing to worship Idols
✨✨✨✨✨✨✨
2. கொன்று போட்டாலும்..
அவர் என்னைக் கொன்று போட்டாலும், அவர் மேல் நம்பிக்கையாயிருப்பேன். ஆனாலும்: என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம் பண்ணுவேன்.
யோபு 13:15
🌺 யோபு..Strong faith in His Almighty God
✨✨✨✨✨✨
3. செத்தாலும் சாகிறேன்..
நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள். நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம். இவ்விதமாகச் சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன். நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.
எஸ்தர் 4:16
🌺 எஸ்தர்..firmness in Her generation redemption
✨✨✨✨✨✨✨
4. நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து..
அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம். நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன். நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன். உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.
நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன். மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.
ரூத் 1:16-17
🌺 ரூத்..focus on God's plan of salvation
✨✨✨✨✨✨✨
5. பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும்..
தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராகப் பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.
தானியேல் 6:10
🌺 தானியேல்..no compromise in daily Prayer life
✨✨✨✨✨✨✨
6. காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன்.
பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.
நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன், நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.
அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.
லூக்கா 22:33
🌺 பேதுரு..no turning back in tribulations and trials..
✨✨✨✨✨✨✨
நம் விசுவாச உறுதிமொழி.
Our Confession of faith..
அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற் போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டு மந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற் போனாலும்,
நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
ஆபகூக் 3:17-18
✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி
Shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
Comments
Post a Comment