பூரணரும் பூரணராக்கப்படுகிறவர்களும்.. The Perfecter and those who are being perfected..


SHALOM STEWARD 
 MORNING DEVOTION 

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

பூரணரும் பூரணராக்கப்படுகிறவர்களும்..

The Perfecter and those who are being perfected..

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

இது எபிரேயர் நிருபம் சிந்தனை..

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

1. பூரணரான குமாரன்..

 நியாயப்பிரமாணமானது பெலவீனமுள்ள மனுஷர்களைப் பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது. நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய வசனமோ என்றென்றைக்கும் பூரணரான குமாரனை ஏற்படுத்துகிறது. 
எபிரேயர் 7. 28

சிந்தனை :

நியாயப்பிரமாணம் vs ஆணையோடு விளங்கின வசனம் 
( பெலவீனம் vs பூரணம் )

பிரதான ஆசாரியன் vs
பூரணரான குமாரன் 

( குறைவுள்ள ஆசாரியன் vs 
பூரண கிறிஸ்து )

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

2. பூரண குமாரன் பாடுகளினாலே இன்னும் பூரணமாகுதல் தேவனுக்கு ஏற்றதாக இருக்கிறது.

 ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது. எபிரேயர் 2. 10

சிந்தனை :

L மோரிஸ் இவ்வாறு கூறுகிறார் " ஒரு ரோஜா செடியில் மொட்டும் பூரணம்.. பூவும் பூரணம் " 
பூரணரான குமாரனை உபத்திரவங்கள் இன்னும் பூரணமாக்குகிறது.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

3. மாம்சத்தில் இருந்த குமாரனை கண்ணீர், பலத்த சத்தம், கீழ்ப்படிதல் இன்னும் பூரணப்படுத்துகிறது.

அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, 
தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, 
எபிரேயர் 5:7-9

சிந்தனை :
மாம்சத்தில் இருக்கும் நமக்கு பூரணம் அவசியம்.
நாம் பூரணர் அல்ல.
கிறிஸ்து ஒருவரே பூரணர்.
ஆனாலும் பூரணரான கிறிஸ்து நாம் பூரணத்தை நோக்கி கடந்து போக மாதிரி வைத்து போகிறார்.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

4. தேவன் பூரண நிச்சயத்தை நாம் சுதந்தரிக்க வாக்குத்தத்தம் செய்கிறார். ஆணையும் செய்கிறார்.

 உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம். எபிரேயர் 6. 12

அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார். எபிரேயர் 6. 17

சிந்தனை :

விசுவாசிகள் பூரணமாகுதல் தேவனுடைய சித்தம். 
இது இரட்சிப்பின் அடுத்த நிலையாகிய பரிசுத்தமாகுதல்.
இதுவும் தேவனே வாக்குப்பண்ணுகிறார்.. தேவனே தகுதிப்படுத்துகிறார்.
நம்முடைய சுய அர்ப்பணமும் நம்முடைய விருப்பமும் மட்டுமே இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

5. ஒரே பலியாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்..

ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.
 எபிரேயர் 10. 14

சிந்தனை :


🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌺 கிறிஸ்து அல்லாமல் விசுவாசிகளாகிய நாம் பூரணராக முடியாது..

ஏனென்றால்....

1. ஆரோனின் ஆசாரிய முறைமை பூரணம் இல்லை..

 அல்லாமலும், இஸ்ரவேல் ஐனங்கள் லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள். அந்த ஆசாரிய முறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறோரு ஆசாரியர் எழும்பவேண்டுவதென்ன? எபிரேயர் 7. 11

2. நியாயப்பிரமாணமானது பூரணம் இல்லை.

 நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது. அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம். 
எபிரேயர் 7. 19

3. பலிகள் காணிக்கைகள் பூரணம் இல்லை.

அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது. அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம்.
எபிரேயர் 9. 9

4. மனசாட்சி பூரணம் இல்லை..

 பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா? எபிரேயர் 10. 2

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🌺 பூரணராக நம்முடைய அர்ப்பணம் என்ன?

1. நம்முடைய சிந்தை பூரணத்தை நோக்க வேண்டும்..

ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக. எபிரேயர் 6.2

2. பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்ய வேண்டும்..

 பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும். 
எபிரேயர் 5. 14

3. விசுவாசத்தை பற்றிக்கொள்ள வேண்டும்..

 துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். 
எபிரேயர் 10. 22

✨✨✨✨✨✨✨

🌺 பூரண சபை..

1. தலையாகிய கிறிஸ்து பூரணர் என்றால் சரீரம் பூரணமே!!!


 ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள். கொலோசெயர் 2.9-10

2. பூரண சபை இல்லாமல் பழைய ஏற்பாடு பரிசுத்தவான்கள் பூரணம் சாத்தியமில்லை.

அவர்கள் ( பழைய ஏற்பாடு நீதிமான்கள் ) நம்மையல்லாமல் ( புதிய ஏற்பாடு சபை )  பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார். எபிரேயர் 11.40

3. பரலோகத்தில் பூரணராக்கப்பட்ட நீதிமான்களே கிறிஸ்துவின் சரீரமாகிய சபை 

பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும், எபிரேயர் 12. 23

✨✨✨✨✨✨✨

🌺 சகோதரரே!!!

பூரண சற்குணம் அன்பு...

 இவை எல்லாவற்றிலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள். 
கொலோசெயர் 3.14

✨✨✨✨✨✨✨

🌺 ஆகையால்....

விசுவாசத்தை முடிக்கிறவர்
 ( பூரணப்படுத்துகிறவர் ) இயேசு!!
Finisher or Perfecter of Faith..

 மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். 
எபிரேயர் 12:1

Therefore, since we are surrounded by such a huge crowd of witnesses to the life of faith, let us strip off every weight that slows us down, especially the sin that so easily trips us up. And let us run with endurance the race God has set before us. 

2 We do this by keeping our eyes on Jesus, the champion *who initiates and perfects our faith.* 

God bless the reader and the Scribe..

✨✨✨✨✨✨✨✨

TCBA TUTICORIN 
shalomjjj@gmail.com 
WhatsApp 
+91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628 003

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA