தேவனே செய்தார்..மனுமக்கள் இரட்சிப்புக்கான தேவனுடைய ( ONLY / NOT OURS ) செயல்பாடுகள்..


SHALOM STEWARD MORNING GRACE..

தேவனே செய்தார்..

மனுமக்கள் இரட்சிப்புக்கான தேவனுடைய ( ONLY / NOT OURS ) செயல்பாடுகள்..

🌹🌹🌹🌹🌹🌹🌹

தேவன்...........................

1. ......நினைவு கூர்ந்தார் 

தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தான் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். 
யாத்திராகமம் 2:24

2.........கண்ணோக்கினார் 

தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார். தேவன் அவர்களை நினைத்தருளினார் 
யாத்திராகமம் 2:25

3..........சந்தித்தார் 

எல்லாரும் பயமடைந்து: மகாதீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
 லூக்கா 7:16

4........தந்தருளினார் 
5........அன்பு கூர்ந்தார் 

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். 
யோவான் 3:16

6........அனுப்பினார்..

உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். 
யோவான் 3:17

7............தீர்த்தார் 

அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். 
ரோமர் 8:3

8............நீதிமான்களாக்குகிறார் 

தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.
 ரோமர் 8:33

9...............மரித்தார் 

கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது. ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும், 
பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காவும் மரித்தாரென்று நிதானிக்கிறோம். 
2 கொரிந்தியர் 5:14-15

10.........இரத்தம் சிந்தினார் 
11..........சம்பாதித்தார் 

ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். 
அப்போஸ்தலர் 20:28

12...........மகிமைப்படுத்தினார் 

ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார், அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்குமுன்பாக அவரை மறுதலித்தீர்கள். 
அப்போஸ்தலர் 3:13

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

இப்படியிருக்க, 

ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. 

இவையெல்லாம் *தேவனாலே உண்டாயிருக்கிறது.* 

தேவன்...................

@...........ஒப்புரவாக்கினார் 

அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். 
அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஓப்புவித்தார். 
2 கொரிந்தியர் 5:18-19

நாம் இரட்சிப்பை பெற்றுக்கொள்ள ஒரே நிபந்தனை விசுவாசம் விருப்பம்..

அதுவும் தேவனே தருகிறார்...

@ ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.
 பிலிப்பியர் 2:13

@ அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது. அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது. 
அப்போஸ்தலர் 3:16

இரட்சிப்பு கர்த்தருடையது!!!!
அர்ப்பணம் நம்முடையது!!!!

நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன். நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன். இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்.
 யோனா 2:9


TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com 
What'sapp 
+91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628 003


https://youtu.be/HYT9N_3q7a8?si=8QBu2-pNkKKonkQM

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA