கர்த்தாவே நீரே என் பங்கு LORD.. YOU ARE MY PORTION..✨✨✨✨✨✨✨




கர்த்தாவே நீரே என் பங்கு 
LORD.. YOU ARE MY PORTION..
✨✨✨✨✨✨✨

@ பங்கும் சுதந்திரமும் தேவன் அருளும் ஈவு..

@ பங்கும் சுதந்திரமும் பிரிக்க முடியாது..

@ ஆங்கிலத்தில் Portion பங்கு தேவன் அருளும் இரட்சிப்புக்கு ஒப்புமை..

@ ஆங்கிலத்தில் INHERITANCE சுதந்திரம் தேவன் அருளும் பரிசுத்தமாகுதலுக்கு ஒப்புமை..

@ இரட்சிப்பும் பரிசுத்தமாகுதலும் இணைந்தால் தான் முழுமையான இரட்சிபுக்கு நாம் தகுதி ஆகிறோம்!!!

இரட்சிப்பும் பரிசுத்தமாகுதலும் பிரிக்க முடியாது..

 இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும் ( இரட்சிப்பு ) பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கவும்
 ( பரிசுத்தமாகுதல் ) வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.அப் 20:32

✨✨✨✨✨✨

பங்கும் சுதந்திரமும் :
Part & Inheritance..

தியான வசனம் :

அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் *பங்கும்* , உன்னதத்திலிருந்து சர்வவல்லவர் கொடுக்கும் *சுதந்தரமும்* கிடைக்குமோ?
யோபு 31. 2

பங்கும் சுதந்திரமும் உன்னதங்களில் இருந்து வருகிறது...

---------------------------

1. கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளுக்கு இரட்சிக்கப்படாத மற்ற ஜனங்களுடன் பங்கும் சுதந்திரமும் கொடுக்கப்படவில்லை..

ஆகையால் வேவிக்கு அவன் சகோதரரோடே *பங்கும் சுதந்தரமும்* இல்லை, உன் தேவனாகிய கர்த்தர் அவனுக்குச் சொன்னபடி, கர்த்தரே அவனுக்குச் சுதந்தரம்.
உபாகமம் 10. 9

2. ஆனாலும் அவர்கள் கைவிடப்படுவதில்லை என்பது பிரமாணம்..

 லேவியனுக்கு உன்னோடே *பங்கும் சுதந்தரமும்* இல்லாதபடியால் அவனைக் கைவிடாயாக.
உபாகமம் 14.27

3. பங்கும் சுதந்திரமும் நம்முடைய முயற்சி அல்ல.. எல்லாம் அவருடைய ஈவு..

கர்த்தருடைய ஜனமே அவருடைய *பங்கு* , யாக்கோபு அவருடைய *சுதந்தரவீதம்* .
உபாகமம் 32. 9

4. பங்கும் சுதந்திரமும் தேவனே காப்பாற்றுகிறார்.

கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் *பங்குமானவர்* , என் *சுதந்தரத்தை* தேவரீர் காப்பாற்றுகிறீர்.
சங்கீதம் 16. 5

5. நேர்த்தியான பங்கு..சிறப்பான சுதந்தரம்..

நேர்த்தியான இடங்களில் எனக்குப் *பங்கு* கிடைத்தது, ஆம், சிறப்பான *சுதந்தரம்* எனக்கு உண்டு.
சங்கீதம் 16. 6

✨✨✨✨✨✨

பங்கும் சுதந்திரமும் நடைமுறைப்படுத்தும் சத்தியங்கள்..

1. திவ்விய சுபாவத்தை தரித்தல்..

இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் *பங்குள்ளவர்களாகும்பொருட்டு* , மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
2 பேதுரு 1.4

2. பிரதான ஆசாரியரை கவனித்தல்..

இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் *பங்குள்ளவர்களாகிய* பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்;
எபிரேயர் 3. 1

3. ஐக்கியத்தில் நிலைத்திருத்தல்.

 அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் *பங்குபெறுகிறபடியால்* , அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.
1 கொரிந்தியர் 10. 17

4. நம்பிக்கையில் நிலைத்திருத்தல்.

 நாம் ஆரம்பத்தில் கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் *பங்குள்ளவர்களாயிருப்போம்* .
எபிரேயர் 3. 14

5. சிட்சையை ஏற்றுக்கொள்ளுதல்..

 அவர்கள் தங்களுக்கு நலமென்றுதோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள். இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் *பங்குள்ளவர்களாகும்பொருட்டு* நம்முடைய பிரயோஐனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.
எபிரேயர் 12. 10

சகோதரரே!!

 கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும், ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்.
புலம்பல் 3. 24

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com 
WhatsApp 
+91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628 003

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA