கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் உங்கள் நாளை..LET US ... In HEBREWS EPISTLE ..... கடவோம் எபிரேயர் நிருபத்தில்
கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் உங்கள் நாளை..
LET US
... In HEBREWS EPISTLE
..... கடவோம்
எபிரேயர் நிருபத்தில்
எபிரேயர் நிருபத்தின் கருப்பொருள்
" பூரணராகும்படி கடந்து போவோமாக"
"LET US " BE BROUGHT ON TO MATURITY
✨✨✨✨✨✨
தொடர்ந்து எபிரேயர் நிருபத்தில் LET US என்ற வார்த்தையின் மேன்மையை சிந்திப்போம்..
அப் பவுல் மொழி பாண்டியத்தியம் பெற்றவர் மட்டும் அல்ல.. தன் கடிதம் பெறும் வாசகர்களின் ஆவிக்குரிய உள் இருதயத்தை அறிந்து சில பதங்களை அல்லது வார்த்தைகளை உபயோகிப்பது அப் பவுல் தனித்தன்மை ஆகும்..
@ கொரிந்தியர் நிருபம்
" அறியீர்களா "
1 கொரி 5:6, 6:2, 6:3, 6:9, 6:15, 6:16, 6:19, 9:13, 9:24, 2 கொரி 13:5
@ ரோமர் நிருபம்
" அவமாக்குமோ? "3:3
" சொல்லுவோமா? "6:1
" பாவஞ்செய்யலாமா? " 6:15
" அறியாமலிருக்கிறீர்களா? "7:1
" சொல்லலாமா? "9:14,9:20
" அறியீர்களா? " 11:2,6:16
@ எபிரேயர் நிருபத்தில்....
"கடவோம்".. LET US..
என்ற பதத்தை மிக அழகாக பயன்படுத்துகிறார்..
✨✨✨✨✨✨
1. பயந்திருக்கக்கடவோம்..
LET US FEAR THEREFORE..
ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்கு பயந்திருக்கக்கடவோம்.
எபிரேயர் 4. 1
2. ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்..
LET US THEREFORE BE DILIGENT..
ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்.
எபிரேயர் 4.11
3. பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்..
LET US HOLD FAST
வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.
எபிரேயர் 4.14
4. சேரக்கடவோம்..
LET US THEREFORE COME FORWARD..
ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.
எபிரேயர் 4.16
5. சேரக்கடவோம்..
LET US COME FORWARD..
துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
எபிரேயர் 10.22
6. உறுதியாயிருக்கக்கடவோம்..
LET US HOLD FAST..
அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம். வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.
எபிரேயர் 10.23
7. புத்திசொல்லக்கடவோம்..
LET US EXHORT ONE ANOTHER..
சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம். நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
எபிரேயர் 10.25
8. ஓடக்கடவோம்..
LET US RUN WITH ENDURANCE..
ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.
எபிரேயர் 12.1
9. கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்..
LET US HAVE GRACE..
ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.எபிரேயர் 12.28
10.புறப்பட்டுப்போகக்கடவோம்..
LET US THEREFORE GO FORTH..
ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப்போகக்கடவோம்.
எபிரேயர் 13.13
11. தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.
LET US OFFER UP A SACRIFICE..
ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.
எபிரேயர் 13.15
✨✨✨✨✨✨✨
இன்று நம் சிந்தனை..
சகோதரரே!!!
சோதிக்கக்கடவோம்..
ஆராயக்கடவோம்..
திரும்பக்கடவோம்..
LET US TEST, EXAMINE, LIFT UP OUR HEARTS..
நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.
நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்.
புலம்பல் 3.40-41
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628 003
Comments
Post a Comment