சிலர் தேவ பிரசன்னத்தில் இருந்து திரும்புகிறார்கள்..சிலர் தேவ பிரசன்னத்தில் தரித்திருக்கிறார்கள்..
SHALOM STEWARD PRAYER THOUGHT..
SOME LEFT GOD'S PRESENCE ...
SOME WAITING IN GOD'S PRESENCE
சிலர் தேவ பிரசன்னத்தில் இருந்து திரும்புகிறார்கள்..
சிலர் தேவ பிரசன்னத்தில் தரித்திருக்கிறார்கள்..
1. மூன்று புருஷர் & ஆபிரகாம்
அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம் விட்டுச் சோதோமை *நோக்கிப் போனார்கள்.*
ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக *நின்றுகொண்டிருந்தான்* .
ஆதியாகமம் 18:22
💐 லோத் அழிவில் இருந்து காக்கப்பட்டான்..
---------------------------------
2. எல்க்கானா & சாமுவேல்..
பின்பு எல்க்கானா ராமாவிலிருக்கிற தன் *வீட்டுக்குப் போனான்.*
அந்தப் பிள்ளையோ ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் *பணிவிடை செய்து கொண்டிருந்தான*
1 சாமுவேல் 2:11
💐 ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேல் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்..
---------------------------------
3. மோசே & யோசுவா
ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார். பின்பு, *அவன் பாளயத்துக்குத் திரும்பினான்.*
நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக்கூடாரத்தை விட்டுப் *பிரியாதிருந்தான்* .
யாத்திராகமம் 33:11
💐 யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை சுதந்தரத்திற்கு எதுவாக வழிநடத்தினான்..
---------------------------------
4. தன் மனைவி மற்றும் பிள்ளைகள் & யாக்கோபு
அவர்களையும் சேர்த்து, ஆற்றைக் கடக்கப்பண்ணி, தனக்கு உண்டான யாவையும் *அக்கரைப்படுத்தினான்* .
ஆதியாகமம் 32:23
*யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்.* அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி,
ஆதியாகமம் 32:24
💐 யாக்கோபு தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டன்.
---------------------------------
5. சீஷர்கள் & மகதலேனா மரியாள்
பின்பு அந்தச் சீஷர்கள் தங்களுடைய இடத்திற்குத் *திரும்பிப்போனார்கள்* .
யோவான் 20:10
*மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று* அழுதுகொண்டிருந்தாள், அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து,
யோவான் 20:11
💐 மகதலேனா மரியாள் அப் 1:15 மேல் வீட்டில் ஒருமனப்பட்டு தரித்திருந்தார்கள் என்று அனுமானிக்கலாம்..
STAY TUNED IN GOD'S PRESENCE TODAY
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
What'sapp
+91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628 003
Comments
Post a Comment