எபிரேயர் நிருபம் யாருக்கு எழுதப்பட்டது? கீழ்க்கண்ட வாசகர்களை எப்படி முகவுரையில் குறிப்பிட முடியும்?
SHALOM STEWARD BIBLICAL REVELATIONS
எபிரேயர் நிருபம் யாருக்கு எழுதப்பட்டது?
கீழ்க்கண்ட வாசகர்களை எப்படி முகவுரையில் குறிப்பிட முடியும்?
🌹🌹🌹🌹🌹🌹🌹
1. பின்வாங்கிப்போனவர்கள்.
ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்கு பயந்திருக்கக்கடவோம். எபிரேயர் 4. 1
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.
எபிரேயர் 10.38, 39
---------------------------------------
2. பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டவர்கள்..
உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள்.
எபிரேயர் 3:13,15,8
---------------------------------------
3. வசனத்தை விசுவாசம் இல்லாமல் கேட்பவர்கள்..
ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது. கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை.
எபிரேயர் 4:2
---------------------------------------
4. நீதியின் வசனத்தில் பழக்கம் இல்லாதவர்கள்..
காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்.
எபிரேயர் 5:12
பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்.
எபிரேயர் 5:13
---------------------------------------
5. மறுதலித்துப் போனவர்கள்..
6. தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைகிறவர்கள்..
அவமானப்படுத்துகிறவர்கள்..
மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
எபிரேயர் 6:6
---------------------------------------
7. சபை கூடிவருதலை விட்டு விடுகிறவர்கள்..
சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம். நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.
எபிரேயர் 10:25
---------------------------------------
8. மனப்பூர்வமாய் பாவம் செய்கிறவர்கள்..
சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல்,
எபிரேயர் 10:26
---------------------------------------
9. தேவனுடைய குமாரனை காலின் கீழ் மிதிக்கிறவர்கள்..
10. தன்னை பரிசுத்தம் செய்த இரத்தத்தை அசுத்தம் என எண்ணுபவர்கள்..
11. கிருபையின் ஆவியை நிந்திக்கிறவர்கள்..
தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.
எபிரேயர் 10:29
---------------------------------------
12. பாவத்திற்கு விரோதமாக போராடாதவர்கள்..
பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே.
எபிரேயர் 12:4
---------------------------------------
13. கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணுகிறவர்கள்..
அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.
எபிரேயர் 12:5
---------------------------------------
14. பரலோகத்தில் இருந்து பேசுகிறவரை விட்டு விடுகிறவர்கள்..
பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்?
எபிரேயர் 12:25
---------------------------------------
15. பண ஆசை உள்ளவர்கள்..
நீங்கள் பணஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணங்கள். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
எபிரேயர் 13:5
---------------------------------------
16. விவாகம் கனவீனம் பண்ணுகிறவர்கள்..
விவாகம் யாவருக்கும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக. வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
எபிரேயர் 13:4
ஆனாலும் இவர்கள் யாவரும்..
@ விசுவாசத்துக்கு கீழ்ப்படிந்தவர்கள்..
@ விசுவாசிகளான ஆசாரியர்கள்..
@ பரம அழைப்புக்கு பங்குள்ள பரிசுத்த சகோதரர்கள்..
@ பூரணராகும்படி கடந்து போக விரும்புகிறவர்கள்..
இப்படியிருக்க!!!
இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்;
எபிரேயர் 3:1
TCBA TUTICORIN 3
Shalomjjj@gmail.com
What'sapp
+91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628 003
Comments
Post a Comment