ஷாலோம் ஸ்டீவர்ட் சிந்தைகள் நிதானங்கள்........சமீபமாக உள்ள தேவனுடைய வளங்கள்..


ஷாலோம் ஸ்டீவர்ட் சிந்தைகள் நிதானங்கள்
சமீபமாக உள்ள தேவனுடைய வளங்கள்..


1. கர்த்தர் சமீபமாக இருக்கிறார்..
கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள், அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.
ஏசாயா 55.1


2. கர்த்தருடைய வார்த்தை சமீபமாக இருக்கிறது..
 நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்ததிலும் இருக்கிறது,
உபாகமம் 30.14


3. என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாக இருக்கிறார்..
 என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார், என்னோடே வழக்காடுகிறவன் யார்? ஏகமாய் நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும்.
ஏசாயா 50.8


4. என் இரட்சிப்பு என் நீதி சமீபமாக இருக்கிறது..
கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள், என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது.
ஏசாயா 56.1


5. தேவனுடைய ராஜ்யம் சமீபமாக இருக்கிறது..
காலம் நிறைவேறிற்று,தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று,மனந்திரும்பி,சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.
மாற்கு 1.15


6. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
 உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.


7. பரிசுத்தமாகுதல் சமீபமாக இருக்கிறது..
நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படிநடக்கவேண்டும், நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.ரோமர் 13.8


கடைசியாக சகோதரரே..


எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று. ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.1 பேதுரு 4.8


கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி
Shalomjjj@gmail.com
Whatsapp : +91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA